Thursday, November 15, 2012

பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு...

          22-11-2012 ஆம்  தேதி கூடவுள்ள பாராளுமன்ற குளிர் கால  கூட்ட தொடருக்கு முன் கிளை செயலர்கள் தங்கள் பகுதியை உள்ளடக்கிய பாராளுமன்ற உறுப்பினரிடம்   ITS அதிகாரிகள் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக BSNL நிறுவனத்தில் Deputation அடிப்படையில் தொடர்வதை  விளக்கி ஏற்கனவே பிரதமரிடம் சமர்ப்பித்த  கோரிக்கை மனுவை கொடுக்கவேண்டும்

பிரதமரிடம் சமர்ப்பித்த  கோரிக்கை மனு

மாநிலச் சங்கங்களின் வேலை நிறுத்தச் சுற்றரிக்கை

BSNL ஊழியர் சங்கம்
& 
தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
மாநிலச் சங்கங்களின் வேலை நிறுத்தச் சுற்றரிக்கை

Tuesday, November 13, 2012

வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்பார்கள்

          காஜியாபாத் BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களின் படுகொலையைக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் குற்றவாளி ஆதேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் 2012 நவம்பர் 16 ஆம் நாள் UNITED Forum of BSNL சார்பாக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று BSNLCCWF அறிவித்துள்ளது.

          BSNLCCWFன் மிகச்சரியான இந்த முடிவிற்கு BSNLEU நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

BSNLEU வின் முன்னணித் தோழர்கள் BSNLCCWF மற்றும் UNITED Forum தலைவர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

காஜியாபாத்தில் பெருந்திரள் பேரணி - இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்தது SSP அலுவலகம்




2012 நவம்பர் 16ல் வேலை நிறுத்தம்

      தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களைக் கொலைசெய்ய குற்றவாளிகள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் என் காஸியாபாத் காவல் துறையை வலியுறுத்தியும்

       குற்றவாளி ஆதேஷ் குமார் குப்தாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியும்...

           நவம்பர் 16 ஆம் நாள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதென United Forum முடிவு செய்துள்ளது.

      நவம்பர் 16 வேலை நிறுத்தத்தில் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு அராஜகவாதத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்துத் தோழர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதை

கிளைச் செயலர்கள் உத்திரவாதப்படுத்த வேண்டும்.


Monday, November 12, 2012

காஜியாபாத் பேரணியும் ஆர்ப்பாட்டமும

      BSNL ஊழியர் சங்கத்தின் காசியாபாத் மாவட்டச் செலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங், மாவட்டத்தின் பொதுமேலேளர் ஆதேஷ் குமார் குப்தா மற்றும் அவருடைய அடியாட்கள் நால்வரால் பொதுமேலாளரின் தனியறையில் வைத்துக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். தலையில ஏற்பட்ட பலத்த காயத்தினால் இறப்பு நேர்ந்துள்ளது. பொதுமேலாளர் ஆதேஷ் குமார் மற்றும் அவரது அடியாட்கள் நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147 மற்றும் 302 ஆகிய இரண்டு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் 9 ஆம் நாள்வரை (19 நாட்களுக்குப் பிறகும்) குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. பொதுமேலாளரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்கள் அன்றாட வேலைகளில் சொகுசாக இருந்து வந்துள்ளனர்.

நமது மத்திய சங்கம் தொலைத் தொடர்புத் துறையையும், CMD BSNL ஆகியோரை மட்டுமல்லாது மான்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. கபில் சிபில் அவர்களிடமும் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றது. BSNLற்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளில் ஒருவரான ஆதேஷ் குமாரை DOTக்கு திரும்ப எடுத்துக் கொள்வதுகூட குறைந்தபட்சமாக நடைபெறவில்லை. தொலைத் தொடர்புத் துறையும் BSNLம் ஆதேஷ் குமாரை குற்றவியல் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சி செய்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இனியும் இதனை அனுமதிக்க முடியாது.
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும்கூட காஜியாபாத் காவல்துறை இதுவரை ஆதேஷ் குமாரை தொடாததற்கான காரணம் ஒவ்வொருவரும் அறிந்ததே. காஜியாபாத் பொதுமேலாளராக இருந்து முறைகேடான வழிகளில், ஊழலில் ஈட்டிய பணத்தை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர் செலவழித்து வருகிறார்.
காஜியாபாத் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியும், கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்னர் ஆர்பாட்டமும் செய்வதென்ற BSNLEU வின் முடிவின்படி 2012 நவம்பர் 9ஆம் நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
“உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். காவல் துறைக்கும் குற்றவாளி ஆதேஷ் குமார் குப்தாவிற்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்த வேண்டும்.” என்ற முழக்கத்தைக் கோரிக்கையாக வைத்து இயக்கம் நடத்தப் பெற்றது.
நமது BSNLEU சங்கத்தின் பொதுச்செலாளர் தோழர் P.அபிமன்யூ, தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி இருவரும் பேரணியை முன்னின்று நடத்தி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள்.











11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...