Thursday, November 20, 2014

கூட்டு பொதுகுழு கூட்டம்

விருதுநகர் GM அலுவலக கிளை ,SDOP ,விருதுநகர் கிளை ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் 20-11-2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் .லக்ஷ்மணன் , ராஜசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 30 அம்ச கோரிக்கைகளுக்காக நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட வலியுறுத்தி தோழர்கள் இளமாறன் , சிங்காரவேலு .முத்துசாமி ,சந்திரசேகரன் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர் . நவம்பர் 27 ஆம் தேதி innovative நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க அக் கூட்டத்தில் அழைப்பு  விடுக்கப்பட்டது .


Saturday, November 15, 2014

சிவகாசி கிளை கூட்டம்

சிவகாசி கிளைகளின் கூட்டு  கூட்டம் இன்று (15-11-2014) கிளை தலைவர் தோழர் .அழகுராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .அகில இந்திய மற்றும் மாநில மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பையும் ,நவம்பர் 27 ஆம் தேதி 30 அம்ச கோரிக்கைகளுக்காக நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டிய அவசியத்தையும் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரனும் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனியும்  விரிவாக விளக்கி கூறினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி அரசியல் நிகழ்வுகளை கூறி வேலைநிறுத்தத்தின் அவசியத்தை விளக்கினார் . தோழர் ராமசந்திரன் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை கூறினார் .Innovative நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய கோரி இரண்டு மாவட்ட சங்கங்களும் இணைந்து வரும் 27 ஆம் தேதி மாவட்டம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கான முறையான கடிதத்தை நிர்வாகத்திடம் மாவட்ட சங்கம் கொடுத்து விட்டதை தோழர் ரவீந்திரன் அக் கூட்டத்தில் நினைவு படுத்தினார் . தோழர் இன்பராஜ் நன்றி கூறி கிளை பொது குழுவை முடித்து வைத்தார் .

Friday, November 14, 2014

இரங்கல்

NFTE சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபியின் தாயார் இன்று காலமானார் . தாயாரை  இழந்து வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்  ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

Forum முடிவு

Forum சார்பாக 03-02-2015 முதல் நடத்த உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தை விளக்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் ஒரு மாபெரும் பிரசார இயக்கம் நடத்துவது என 13-11-2014 அன்று நடைபெற்ற Forum கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அதன்படி:-
 11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்

11-12-2014 முதல் 20-12-2014 வரை பொது மக்களிடம் பிரசார இயக்கமும்  கையெலுத்து  இயக்கமும் நடைபெறும் 

19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி 

06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா 

Union Government is Planning to Revive BSNL Factories

செய்தி படிக்க :-Click Here

Debt management: DoT may offer Rs 11,000 crore loan to address BSNL’s concerns

செய்தி படிக்க :-Click Here

அகில இந்திய வேலை நிறுத்தம்



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...