Thursday, July 3, 2014

வழிகாட்டும் கேரளம்

   BSNL நிறுவனம் கேரளா மாநிலத்தில் 2013-2014   ஆண்டு வருவாயாக 2819.60 கோடியாக உயர்ந்து உள்ளது. இது  சென்ற ஆண்டை விட 200 கோடி அதிகம்.லாபமாக ரூபாய் 411.20 கோடி கிடைத்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டை காட்டிலும் ரூபாய் 124.62 கோடி அதிகம் .சாதனை படைத்திட்ட கேரளத்தை பாராட்டுவோம்  

ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுக்குழு கூட்டம்

          இன்று மாலை 530 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் தோழர் கந்தசாமி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது  தோழர் .சமுத்திரம் ஆய்படு  பொருளை சமர்ப்பித்து பொது குழுவை தொடங்கி வைத்தார் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் செய்த சாதனைகளை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர்  விரிவாக பேசி சங்கத்தில் கட்டுப்பாடு அவசியம் என  எடுத்துரைத்தனர். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாநில செயற்குழு முடிவுகளையும் , BSNL மற்றும் MTNL இணைப்பு அபாயம் பற்றியும் , டவர் தனி நிறுவனம் அமைக்கும் அரசின் போக்கையும் கூறினார்.மாவட்ட உதவி செயலர் தோழர்  வெங்கடேஷ் மற்றும் மாவட்ட துணை தலைவர் கண்ணன்  அவர்கள் ஒப்பந்த ஊழியர்கள்  ஒற்றுமையுடனும் ,கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை மிக அழகாக உதாரணங்களுடன் கூறினர் . தோழர் தங்கதுரை நடைபெற்ற நிகழ்சிகளை கூறினார் .மாநில மகாநாட்டு நன்கொடையை இம் மாதம் வசூல் செய்ய அனைத்து நிர்வாகிகளும் இணைந்து செயல்பட மாவட்ட சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்களை கேட்டு கொண்டது . தோழர் A சண்முககுமார் ,TTA , மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் சங்க வளர்சிக்கான நடவடிக்கைகளில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

Wednesday, July 2, 2014

மாவட்ட பொது மேலாளருடன் பேட்டி

இன்று 02-07-2014 அன்று மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளருடன் பேட்டி கண்டது .கீழ் கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன .
1.லோக்கல் கவுன்சில் மற்றும் வொர்க் கமிட்டி கூட்டங்களுக்கான  தேதி நிர்ணயிப்பது .
2. ஜெராக்ஸ் மிசின் முதல் மாடியில் பழுதாகி உள்ளது சுட்டி காட்டப்பட்டதற்கு  GM அறையில் உள்ளதை வெளியில் தற்காலிகமாக இட மாற்றல் செய்வது  என முடிவு செய்ய பட்டுள்ளது . மதுரையில் உள்ளது போல் ஒப்பந்த முறையில் ஜெராக்ஸ் எடுக்க தனியாரை அனுமதிப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது .
3. EOI மற்றும் ஹவுஸ் கீபிங்க் டெண்டரில்  போனஸ் பற்றி குறிப்பிடாமல் உள்ளதை சரி செய்ய வலியுறுத்தி உள்ளோம் .
4.மேன் பவர் டெண்டரில் போனஸ் 8.33% என்று குறிப்பிடாமல் ரூபாய் 2000/- என்று குறிப்பிட்டதை சரி செய்ய வலியுறுத்தி உள்ளோம் .
5 நமது மாவட்டத்தில் கேபிள் பற்றாக்குறையை மாநில மட்டத்தில் பேசி உரிய தேவையை வாங்கும்படி வலியுறுத்தி உள்ளோம் .
6. அருப்புகோட்டை சுழல் மாற்றத்தை விரைவில் நடைமுறை படுத்தவேண்டும் என கூறியுள்ளோம் .
                      இன்றைய பேட்டியில்  மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட உதவி தலைவர் தோழர் K R .கிருஷ்ணகுமார் ஆகியோர் மாவட்ட செயலருடன்  கலந்து கொண்டனர் .

லோக்கல் கவுன்சில் கூட்டம்

         வருகின்ற 05-07-2014 அன்று மதியம் 2.30 மணி அளவில் லோக்கல் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதால்  .அனைத்து கவுன்சில் உறுப்பினர்களும் மதியம் 2.00 மணிக்கு  நமது சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது . 

Ravi Shankar Prasad cracks the whip on MTNL, BSNL

செய்தி படிக்க :-Click Here

மத்திய அரசின் பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் கிடையாது, கசப்பு மருந்துதான்- அருண் ஜெட்லி

செய்தி படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...