Sunday, June 15, 2014

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் 5.7 சதவிகிதம் அதிகரிப்பு

          கடந்த 2013-14ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நாட்டில் செயல்படும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் 5.7 சதவிகிதம் அதிகரித்து, ரூ.57,378 கோடியாக இருந்தது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் நெறியாளரான டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இதைத் தெரிவிக்கிறது.அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இந் நிறுவனங்கள் ஈட்டிய வருவாய் ரூ.54,283.78 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
          மொபைல்போன் சேவை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஈட்டிய வருவாய் மட்டும் ரூ.55,164.18 கோடி. மீதமுள்ள வருவாயை இண்டர்நெட் சேவை மற்றும் தொலைதூர அழைப்புகளுக்கான சேவை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.இதில், பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக வருவாயாக ரூ.17,726 கோடியை இந்த 3 மாத காலத்தில் ஈட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.8,630.44 கோடியை ஈட்டியுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.7,564.32 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.4,197.6 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ.3,348.21 கோடி, ஏர்செல் ரூ.3,041.83 கோடி, எம்.டி.என்.எல் ரூ.1,052 கோடி, யுனிநார் ரூ.1,049.57 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளன.விடியோகான் டெலிகாம் நிறுவனம் ரூ.378.43 கோடி, சிஸ்டிமா ஸ்யாம் ரூ.318.66 கோடி, லூப் மொபைல்ஸ் ரூ.121.99 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளன.
          இந்த 3 மாத காலத்தில் மத்திய அரசு உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்டரம் சேவைக் கட்டணமாக ரூ.38,842.8 கோடியைப் பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் உரிமக் கட்டணமாக ரூ.3,110.71 கோடியைச் செலுத்தியுள்ளன. ஸ்பெக்ட்ரம் சேவைக்காக ரூ.1,442.94 கோடியைச் செலுத்தியுள்ளன.ஏர்டெல் நிறுவனம் உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் சேவைக் கட்டணமாக ரூ.1,442.94 கோடியைச் செலுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல். ரூ.542.72 கோடியைச் செலுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                <நன்றி : தினமணி >

Thursday, June 12, 2014

மானியங்கள் கட்... சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம்?

செய்தி படிக்க :-Click Here

இரங்கல்

             நமது முன்னாள்  மாவட்ட செயலர் தோழர் M பெருமாள்சாமி அவர்களின் தாயார் இன்று மாலை (12-06-2014) காலமானார் .அன்னாரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தார்க்கு பி எஸ் என் எல் ஊழியர் மாவட்ட  சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது . 

Wednesday, June 11, 2014

பிரிக்ஸ் வங்கி

          பிரேசில்(B), ,ரஷியா (R), இந்தியா(I), சீனா(C) மற்றும் தென்னாப்பிரிக்கா(S) ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து  பிரிக்ஸ்  வங்கியை வரும் 15-07-2014 அன்று சுமார் 100 பில்லியன் டாலர் மூலதனத்தில் தொடங்க உள்ளன.தற்போது, ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள  உலக வங்கி  விரிவாக்கத்திற்கான கடனை வழங்குவதற்கு, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பல நிபந்தனைகளை விதித்து உள்ளது. பல பன்னாட்டு  நிறுவனங்கள் வளரும் நாடுகளை  கொள்ளையடிப்பதற்கு உலக வங்கி கட்டாயப்படுத்துவதை   இந்த பிரிக்ஸ்  வங்கி ஒரு முற்றுபுள்ளி  வைக்கும்.

அருப்புக்கோட்டை கிளை மாநாடு புகைப்படங்கள்






























அனைவருக்கும் ப்ரீ சிம்

       நமது அனைத்திந்திய சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியாலும் 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும் விடுபட்ட அனைவருக்கும் ப்ரீ சிம் கிடைப்பதற்கான உத்தரவு இன்னும் ஓரிரு தினங்களில் கார்போரேட் நிர்வாகத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...