மாநில சங்க சுற்றறிக்கை எண் 94 படிக்க :-click here
Monday, August 27, 2018
ஆண்டு பொது குழு கூட்டம்
GM அலுவலக கிளை மற்றும் SDOP கிளைகளின் ஆண்டு பொது குழு கூட்டம் 21/08/2018 அன்று அதன் கிளை தலைவர்கள் தோழர் சிங்காரவேலு மற்றும் தோழியர் தனலட்சுமி தலைமையில் மிக எளிமையாக நடைபெற்றது . கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் மற்றும் நியூ டெல்லி பேரணிக்கு ஊழியர்களை திரட்டுவது என்ற பல பணிகள் குறுக்கிட்டதால் மாநாட்டை எளிய முறையில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .மறைந்த தலைவர்கள் மற்றும் கேரளா வெள்ளத்தில் பலியான பொதுமக்களுக்கு தோழர் சந்திரசேகரன் அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநாட்டை முறையாக மாவட்ட செயலர் துவக்கி வைத்து உரை நிகழ்த்த ,ஆண்டு அறிக்கையை தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து சமர்ப்பிக்க , மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் .புதிய நிர்வாகிகளாக GM அலுவலக கிளைக்கு தோழர்கள் G.தனலட்சுமி ,M.S.இளமாறன் ,A.கோவிந்தராஜ் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .SDOP கிளைக்கு தோழர்கள் சிங்காரவேலு ,மாரிமுத்து மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .









Thursday, August 23, 2018
கேரளா வெள்ள நிவாரண நிதி
மனித நேய பணியில் BSNLEU
கடந்த நுற்றாண்டுகாலமாக இல்லாத அளவில் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு நிவாரண நிதி திரட்ட மாநில சங்கம் அறைகூவல் விட்டவுடன் ராஜபாளையம் ,சிவகாசி மற்றும் விருதுநகர் ,சாத்தூர் கிளைகள் உடனடியாக களத்தில் இறங்கின .அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து நிவாரண நிதி திரட்டின .சிவகாசியில் ரூபாய் 15,010 ம் ,விருதுநகரில் 11,400 ம் ,ராஜபாளையத்தில் ரூபாய் 10,600 ம் வசூல் செய்யப்பட்டு மாநில சங்கத்திடம் ரூபாய் 26,410 வழங்கப்பட்டு விட்டது . ராஜபாளையம் கிளை 24/08/2018 அன்று மாநில சங்கத்திற்கு அனுப்ப உள்ளது .ஒரே நாளில் 37,000/- வழங்கிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ,அந்த பணியில் ஈடுபட்ட அனைத்து BSNLEU தோழர்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி .
கிளை கூட்டங்கள்
ராஜபாளையம் கிளை கூட்டம் 14/08/2018 அன்று அதன் தலைவர் தோழர் R .தியாகராஜன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நியூ டெல்லி பேரணி ,ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தை அம்ஸங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் ஆயபடுபொருளாக கொண்டு சிறப்பான விவாதங்கள் நடைபெற்றது . மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோரும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் தங்கதுரை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் வெள்ளைப்பிள்ளையார் ,முருகன் ,ராதாகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .









சாத்தூர் கிளை கூட்டம் 18/08/2018 அன்று அதன் தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நியூ டெல்லி பேரணி ,ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தை அம்ஸங்கள் மற்றும் கேரளா வெள்ள நிவாரண நிதி ஆயபடுபொருளாக கொண்டு சிறப்பான விவாதங்கள் நடைபெற்றது . மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .




Tuesday, August 7, 2018
அஞ்சலி

ஜூன் 3 1924 இல் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆன டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். அவர் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் தன் அஞ்சலியை செலுத்துகிறது
Wednesday, August 1, 2018
நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சனைகளின் முன்னேற்றம்
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-CLICK HERE
AUAB தலைவர்கள் மத்திய அமைச்சரிடம் சந்திப்பு

பாராளுமன்றத்தில் இன்று (01/08/2018) AUAB தலைவர்கள் மத்திய அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களை சந்தித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் M.B.ராஜேஷ் அவர்கள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, அவரும் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கு பெற்றார். தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் ஷேசாத்ரி Dy.GS NFTE, தோழர் K.செபாஸ்டியன் GS SNEA, தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA, தோழர் ரவி ஷில் வர்மா GS AIGETOA, தோழர் சுரேஷ் குமார் GS BSNL MS, தோழர் S.D.ஷர்மா GS ATM மற்றும் தோழர் J.விஜயகுமார் Dy.GS TEPU ஆகியோர் இன்று இந்த கூட்டத்தில் பங்கு பெற்றனர்.
24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூறப்பட்ட உறுதி மொழிகள் அமலாக்கப்படாதது தொடர்பாக தங்களின் வருத்தங்களை AUAB தலைவர்கள் தெரிவித்தனர். உறுதிமொழிகளின் அமலாக்கம் தொடர்பாக கடந்த ஐந்து மாத காலமாக மத்திய அமைச்சரோ, தொலை தொடர்பு துறையின் செயலாளரோ, ஒரு கூட்டத்தைக் கூட நடத்த வில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
1. 3rd PRCயின் AFFORDABILITY பிரிவிலிருந்து BSNLக்கு விலக்கு அளிப்பதற்கான உறுதி மொழி மத்திய அமைச்சரால் வழங்கப்பட்டது. எனினும், அதற்கு தேவையான அமைச்சரவைக் குறிப்பு தயாரிப்பதற்கான பணிகளை DOT துவங்கவே இல்லை.
2. ஊழியர்களின் ஊதிய விகிதத்தின் உயர்ந்த பட்ச அளவிற்கு பதிலாக அரசாங்க உத்தரவின் படி ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீட்டை BSNL நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என மத்திய அமைச்சர் தொலை தொடர்பு செயலாளருக்கு வழிகாட்டினார். ஆனால் இதற்காக இதுவரை DOT எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
3. BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொலை தொடர்பு துறை செயலாளருக்கு மத்திய அமைச்சர் வழிகாட்டினார். அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
4. BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை BSNL நிறுவனத்திற்கு அது வழங்கப்படவில்லை.
விவாதங்களுக்கு பின் BSNLக்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்குவது அரசாங்கத்தின் கைகளில் உள்ளது என்றும் அது விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக தொலை தொடர்பு துறை செயலாளரோடு ஆகஸ்ட் 3ஆம் தேதி விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவதுடன் BSNLக்கு வருவாயையும் ஈட்டித்தர வேண்டுமென மத்திய அமைச்சர் கூறினார். மிகக் கடுமையான விலை குறைப்பில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடுமையான போட்டியை தாங்கள் கொடுத்து வருவதாக AUAB தலைவர்கள் பதிலளித்தனர். இத்தகைய கூட்டத்தை ஏற்பாடு செய்து பிரச்சனைகளை விவாதித்த மத்திய அமைச்சருக்கு தோழர் M.B.ராஜேஷ் MP நன்றி தெரிவித்தார்.
AUAB தலைவர்கள் இந்த கூட்டத்தை வழங்கிய மத்திய அமைச்சருக்கும், அதே போல இதற்கான ஏற்பாடுகளை செய்த தோழர் M.B.ராஜேஷ் MPஅவர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...