Monday, February 13, 2017

விருதுநகர் கிளைகளின் இணைந்த பொது குழு கூட்டம்

இன்று விருதுநகர் கிளைகளின் இணைந்த பொது குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் சிங்காரவேலு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . கிளை செயலர்கள் இளமாறன்,மாரிமுத்து ,பாண்டியராஜன் ஆகியோர் ஆய்படு பொருளை விளக்கி பேசினர் .06/02/2017 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM முடிவுகள் ,07/02/2017 அன்று சென்னையில் நடைபெற்ற ,விரிவடைந்த மாநில  செயற்குழு முடிவுகளை மாவட்ட செயலர் ரவீந்திரன் விளக்கி  பேசினார் .GM   அலுவலக கிளை தோழியர்கள் தொடர்ந்து மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபடுவதை கிளையின் பொது குழு பாராட்டியது .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாட்டு நிதி வசூலில் இரண்டு கிளைகளின் பங்களிப்பு பாராட்டப்பட்டது .மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,வெங்கடப்பன்,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று பேசினர் .மாவட்ட அலுவலக கிளை பொருளாளர் மாரியப்பா நன்றி நவின்றார் . கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது .
Image may contain: one or more people, people sitting and outdoor
Image may contain: 5 people, people sitting, outdoor and indoor
Image may contain: 1 person, sitting and outdoor
Image may contain: 4 people, people sitting, crowd and outdoor
Image may contain: 1 person, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
1.31/03/2017 வரை தினமும் பணி நேரம் போக கூடுதலாக 1 மணி நேரம் மார்க்கெட்டிங் பணிகளில் அனைவரும் ஈடுபடுவது .
2. மார்ச் 9 கலெக்டர் அலுவலகம் நோக்கிய பேரணியில் அனைவரும் பங்கேற்பது .
3.மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கூட்டம் நடத்துவது .
4.மாநில மாநாட்டு நிதியாக உறுப்பினர் அனைவரும் தலா 100 ரூபாய் நன்கொடை வழங்குவது .
5. கேபிள் பகுதி ஊழியர்கள் skilled  wages கேட்டு வரும் 17/02/2017 அன்று 1 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது .மார்ச் 10 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவது .

BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கனரா வங்கியுடனான MOU கையெழுத்தானது.

BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்குவதற்காக கனரா வங்கியுடனான ஒப்பந்தம் காலவதியாகி இருந்தது. மீண்டும் அதனை புனரைமத்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.02.2017 இருதரப்பாரிடையே கையெழுத்தாகிவிட்டது. அதற்கான உத்தரவை 09.02.2017 அன்று கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது..MOU படிக்க :-Click Here

BSNLன் புத்தாக்கத்திற்காக கூடுதலாக தினம் ஒரு மணி நேர பணி மற்றும் பல செய்திகள்

மாநில  சங்க சுற்றறிக்கை எண்:149 படிக்க :-Click Here

மேளாவில் உற்சாகத்தோடு பங்கேற்ற நமது BSNLEU தோழர்கள்

09/02/2017 அன்று  நடைபெற்ற  மெகா மேளாவில் உற்சாகத்தோடு  நமது BSNLEU தோழர்கள் பங்கேற்றனர்  .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் SDE மார்க்கெட்டிங் உடன் சாத்தூரில் பங்கேற்றார் .இங்கு 11 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்கள் உட்பட 125 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .பரளச்சியில் AGM(CFA) உடன் பங்கேற்ற நமது அருமை தோழர் ராஜேந்திரன் 158 சிம்கள் விற்பனை செய்துள்ளனர் .விருதுநகரில் நமது 6 பெண் தோழியர்கள் பங்கேற்ற நிகழ்வில் 83 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன .;ராஜபாளையத்தில் 152 சிம்களும் 1 MNP யும் பெறப்பட்டது .சிவகாசியில் 137 சிம்களும் , ஸ்ரீவில்லிபுத்தூரில் 15 ம் ,காரியப்பட்டியில் 5 ம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது .மேளாவில் நமது  தோழர்கள் கணேசமூர்த்தி ,சமுத்திரக்கனி ,முத்துசாமி ,முனியாண்டி ,பொன்ராஜ் ,திருப்பதி ,ராதாகிருஷ்னன் ,அனவ்ரதம் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் ,சமுத்திரம் ,வெங்கடசாமி ,சுந்தரமஹாலிங்கம் ,பாண்டியம்மாள் ,பாண்டிச்செல்வி ,சுசிலா ,தனலட்சுமி ,முத்துலட்சுமி ,மேரி ,ஷண்முகசுந்தரம்  ஆகியோர் பங்கேற்றனர் .
Image may contain: 4 people, people sitting
Image may contain: 3 people, people sitting and table
Image may contain: 2 people, people standing and outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...