JE Outsider result பார்க்க :-Click Here
Monday, November 21, 2016
ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் ?
மாவட்ட நிர்வாகமே !
ஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் ?
அலெர்ட் நிறுவனமா ? SDE (குரூப்ஸ் ) ஸ்ரீவில்லிப்புத்தூரா ?
ஸ்ரீவில்லிபுத்தூர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் 2 ஒப்பந்த ஊழியர்கள் போடுவதற்கு மாவட்ட பொது மேலாளர் ஒப்புதல் கொடுத்தவுடன் அலெர்ட் நிறுவனம் 2 தொழிலார்களை நியமித்தது .உடனடியாக யாரோ பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று SDOT ஸ்ரீவில்லிபுத்தூர் உடனடியாக நியமனத்தை நிறுத்தி விட்டார் .அதன் பின் அதே நிறுவனம் மீண்டும் 2 பேரை நியமித்தது .அவர்கள் இரண்டு பேரும் பணிக்கு வந்தவுடன் அவர்களை நாளை முதல் வாருங்கள் என்று சொல்லிவிட்டார் அந்த SDOT ஸ்ரீவில்லிபுத்தூர். அன்று மாலையே அலெர்ட் நிறுவனம் மீண்டும் புதிதாக 2 ஊழியர்களை நியமித்து கடிதம் எழுதியுள்ளது .முதல் இரண்டு நியமனங்களை ரத்து செய்தது ஏன் என்ற கேள்விக்கு அந்த நிறுவனம் SDE (குரூப்ஸ் ) ஸ்ரீவில்லிபுத்தூர் கடுமையாக நிர்பந்தம் செய்கிறார் என்று கூறியது .இன்னொரு அதிகாரி வட்டத்தில் இவர் தலையிட வேண்டிய அவசியம் என்ன ? மற்றும் ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் ஒப்பந்ததாரர் மீது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ? ஒப்பந்ததாரர் மீண்டும் மீண்டும் நியமனம் செய்ததின் அவசியம் என்ன ?
1.ஒப்பந்த ஊழியர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த SDE(குரூப்ஸ்) ஸ்ரீவில்லிபுத்தூர் மீது மாவட்ட நிர்வாகமே உரிய நடவடிக்கை எடு
2. அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக மீண்டும் மீண்டும் ஊழியர் நியமனத்தில் குளறுபடி செய்த அலெர்ட் நிறுவனம் மீது நடவடிக்கை எடு
3.முதலில் வந்த கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக 2 ஊழியர்களை நியமனம் செய்ய SDOT, ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு அறிவுரை வழங்கிடு .
உடனடியாக தலையிடாவிட்டால் மாவட்ட சங்கம் SDE குரூப்ஸ் ,ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டதை 23/11/2016 அன்று நடத்தும் . அடுத்த கட்ட போராட்டமாக பெரும் திரள் முறையீட்டு போராட்டம் GM அலுவலகம் முன் நடைபெறும் .
BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம்
Saturday, November 19, 2016
முற்றுகை போராட்ட காட்சிகள்
நேற்று தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்ட காட்சிகள்










நிர்வாக வாக்குறுதியை மீறி 11 ஒப்பந்தத் தொழிலாளர் நீக்கம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் எதிர்ப்பு - போராட்டம்
தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 11 ஒப்பந்தத் தொழிலாளர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரியும் ஊழியர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (நவ. 18) நடைபெற்றது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப 2009ம் ஆண்டு மே மாதம் முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி இபிஎப், இஎஸ்ஐ விதிகளை கறாராக அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக் கைகளும் முன்வைக்கப்பட்டன.பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் இணைந்து சென்னையில் தலைமை பொது மேலாளர் அலுவலக வாயிலில் இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்தின.மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாநில தலைவர் எம்.முருகையா, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார், ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஊழியர் சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு பழைய நிறுவனத்திடம் ஒப்பந்தம் முடிந்தவுடன் புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மாறும்.ஆனால் பழைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் தொடர்ந்து வேலை செய்து வருவார்கள். இதுதான் பல்லாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.இந்நிலையில் கடந்த செப்டம் பர் மாதம் 30ம் தேதியுடன் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் பெங் களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந் தம் எடுத்திருந்தது. தொலைத் தொடர்புத் துறை நிர்வாகம், ஊழியர் சங்கத்திடம் அந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருப்பார்கள் என உறுதி அளித்தது.
ஆனால் புதிய ஒப்பந்த நிறுவனம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா, ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் உள் ளிட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டது என்று செல்லப்பா தெரிவித்தார்.இதுகுறித்து ஊழியர் சங்கம் சார்பில், நிர்வாகத்திற்கு 3 முறை கடிதம் அளித்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிர்வாகம் தீர்வு காணவில்லை என்றால் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் போராட்டம் நடைபெறும் என்றார்.
நன்றி :- தீக்கதிர்
Wednesday, November 9, 2016
சிம் விற்பனையில் BSNLEU விற்கு மீண்டும் ஒரு மணிமகுடம்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நமது BSNLEU ஊழியர்கள் மார்க்கெட்டிங் டீம் முடன் இணைந்து முதல் கட்ட ரோடு ஷோ வை 08/11/2016 அன்று நடத்தினர் அருப்புக்கோட்டையில் தொடங்கி ராஜபாளையம் வரை ஒரு உற்சாகதோடு நமது தோழர்கள் பங்கேற்றனர் .சாத்தூர் நகரில் மாவட்ட செயலர் ரவீந்திரன் நமது சேல்ஸ் டீம் ஊழியர்கள் தோழர் .தங்கராஜ் மற்றும் தோழர் . ஜெயராம் ,SDE (MKTG ) ஆகியோருடன் இணைந்து பங்கேற்றார் .அங்கு 166 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அருப்புக்கோட்டையில் நமது கிளை தலைவர் தோழர் உதயகுமார் ,கிளை செயலர் தோழர் மதி கண்ணன் ,தோழர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றத்தில் நமது முன்னணி தோழர் ராஜேந்திரன் பங்கேற்றார் .அருப்புக்கோட்டையில் 154 சிம்கள் சேல்ஸ் செய்யப்பட்டன .காரியப்பட்டியில் நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கணேசமூர்த்தி பங்கேற்ற நிகழ்வில் 30 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .விருதுநகர் MGR சிலை அருகில் நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழியர் மங்கையற்கரசி ,தோழியர் தனலட்சுமி ,தோழியர் பாண்டியம்மாள் மற்றும் மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடப்பன் பங்கேற்ற நிகழ்வில் 54 சிம்களும் ,நமது SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,தோழர் மாரியப்பா ,மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் ,GM அலுவலக கிளை செயலர் இளமாறன் பங்கேற்ற பாண்டியன் நகரில் 34 சிம்கள் விற்பனைசெய்யப்பட்டன .சிவகாசியில் நமது தோழர்கள் பங்கேற்ற நிகழ்வில் ஒரு சாதனை அளவாக 517 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அதே போல் ராஜபாளையத்தில் தோழர்கள் பொன்ராஜ் ,தியாகராஜன் ,வெள்ளை பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,பொன்னுச்சாமி ,ராதாகிருஷ்ணன் ,I .முருகன் ,ஓய்வூதியர் சங்க நமது தோழர் சிவஞானம் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் 280 சிம்களும் ,மம்சாபுரத்தில் தோழர் ராமசந்திரன் 11 சிம்களையும் விற்பனை செய்துள்ளார் .ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 1250 சிம்கள் விற்பனை செய்யப்பட்டது BSNLEU சங்கத்திற்கு மீண்டும் ஒரு மணி மகுடம் .




AC இருந்து விற்பதை விட தூசியில் ,வெயிலில் ,மழையில் இருந்து சாதனை விற்பனை செய்த நமது தோழர்களுக்கு நமது நெஞ்சு நிறை நன்றி .
Monday, November 7, 2016
தைரியம் இருந்தால் சொல்லு யார் அந்த இடை தரகர்
ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும் தன் நியாயமான பிரச்சனைகள் தீர்விற்கு போராட்ட உரிமை இருக்கிறது .ஆனால் தவறான பிரச்சாரம் செய்தால் அதற்கான பதிலை சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது .ஒரு ஊழியர் ஒரு வேலையும் செய்யமாட்டார் என்று நாம் சொல்லவிலலை .அந்த அதிகாரி தான் சொன்னார் .அப்படிப்பட்ட ஒருவர் தன முறையான டெனுரை (வந்து 6 மாதம் தான் ஆகிறது )முடிக்காமல் ஒரு தொலை பேசி நிலையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அந்த தொலைபேசி நிலைய ஊழியர் சிவகாசி அவுட்டோர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார் .அதே போல் ஒரு ஊழியர் விருதுநகர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அவரும் அவர் பணி செய்யும் பகுதியில் டெனுரை முடிக்கவில்லை .மேற்குறிய மாறுதல்களை போடவேண்டும் என்று போராட்டமாம் . இதே வாயால் இவர்கள் RM /TM கேடர் GM அலுவலக மாற்றலில் மட்டும் இவர் 4 வருடம் முடிக்கவில்லை அவர் முடிக்கவில்லை என்று ஆலாபனை செய்துள்ளனர் .இவர்களுக்கு வேண்டியபடி மாறுதல்கள் போட வேண்டுமானால் மாறுதல் விதிகளில் மாறுதல் செய்தால் தான் முடியும் .அதே போல் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு immunity கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இல்லை .ஆனால் தொலை தூர மாறுதல்கள் போட்ட பின்பு ஜூன் மாதம் முதல் விருப்பம் இல்லாமல் யாரையும் மாற்றல் செய்யமுடியாது என்று விதி தெளிவாக கூறுகிறது . பதிலுக்கு எந்த ஊழியரையும் நியமனம் செய்யாமல் தொலைபேசி நிலையங்களை (வீரசோழன் மற்றும் பரளச்சி )மூடி விட வேண்டுமாம் இவர்களுக்கு .BSNL வளர்ச்சிக்கு இவர்களால் ஆன கைங்கரியம் இது தான் .அதோடு நமது BSNLEU சங்கத்திற்கு வால்பிடிக்கும் நிர்வாகம் என்று வேறு கதைக்கிறார்கள் .ராஜபாளையம் தொடங்கி ,அருப்புக்கோட்டை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பிரச்சனைகளில் ஒரு எழுச்சிமிகு போராட்டம் நடத்தி ஜெயம் கொண்ட சங்கம் நமது சங்கம் .நமக்கு வால் பிடிக்கும் என்று இவர்கள் சொல்லும் அந்த அதிகாரிகள் முன்பாக களம் கண்ட சங்கம் நமது சங்கம் .இவர்களோ அரசியல் வாதிகளை வைத்து அதிகாரிகள் மேல் புகார் கொடுத்து ஆதாயம் தேட அலைந்தவர்கள் .அந்த அரசியல்வாதி இவர்களுக்கே அல்வா கொடுத்தது தனி கதை .புரோக்கர் வேலை பார்க்கிறது BSNLEU சங்கம் அல்ல .தில் இருந்தால் கூறு யார் என்று . விதிக்கு புறம்பான இவர்கள் மாறுதல்களை எல்லாம் நமது சங்கமும் ஒத்து கொண்டும் கூட ,சாத்தூர் பகுதியில் சேல்ஸ் பகுதிக்கு ஒரு ஊழியர் நியமிக்க பட வேண்டும் என்ற நமது சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையை நிர்வாகம ஏற்று கொள்ள கூடாது என்று இவர்கள் தடை போட்டால் நாம் வேடிக்கை பார்க்கணுமாம் .. இலாகாவின் விதிகள் இவர்கள் தான் என்பது பழைய காலம் .போராட்டத்தில் புடம் போட்ட தங்கம் நமது இயக்கம் .எதையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறது .
நேர்மை என்றும் வெல்லும் .
நிர்வாகம் நடு நிலை தவறினால் நமது போராட்டம் எப்படி இருக்கும் என்று நமது வலிமையை உணர்த்துவோம் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...