Monday, October 17, 2016

26.10.2016 FORUM ஆர்ப்பாட்டம்

துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 26.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம்:- 14.10.2016 அன்று கூடிய FORUMத்தின் CORE COMMITTEE கூட்டம், 26.10.2016 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து ஊழியர்களையும், அதிகாரிகளையும் திரட்டி இந்த முதல் கட்ட இயக்கமான 26.10.2016 ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கிளை  செயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம்.
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

தமிழ் மாநிலத்திலேயே இலக்கை எட்டிய முதல் முத்தான மாவட்டம் விருதுநகர்

நன்றி வாழ்த்துக்கள் க்கான பட முடிவு
     அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 3 லட்சம் என்று நமது மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது ஒரு மிக பெரிய தயக்கம் ஏற்பட்டது .மாவட்ட செயற்குழுவில் எடுத்த முடிவை நமது ஊழியர்களிடம் சென்ற போது ஊழியர்கள் வாரி வழங்கினர் .16,000 ரூபாயில் ஆரம்பித்து குறைந்த பட்சமாக 200 ரூபாய் வரை கிட்டத்தட்ட 99% நமது சங்க தோழர்கள் வழங்கியதின் விளைவு இன்று நமது தமிழ் மாநில சங்கம் நிர்ணயித்த இலக்கை (ரூபாய் 3,00,000)எட்டி தமிழ் மாநிலத்திலேயே இலக்கை எட்டிய முதல் மாவட்டமாக்கிய நமது விருதுநகர் தோழர்களுக்கும்,அதற்க்கு பணி புரிந்த கிளை செயலர்களுக்கும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் நமது முத்தான பாராட்டுக்கள் .நமது மாவட்டத்தில் ஊழியர்களின் உணர்வோடு கலந்தது நமது சங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து இருக்கிறோம் . 

Friday, October 14, 2016

ஊழியர்களின் உழைப்பிற்கும் ஒற்றுமைக்கும் கிடைத்திட்ட வெற்றி!!!!

ஊழியர்களின் உழைப்பிற்கும் ஒற்றுமைக்கும் கிடைத்திட்ட வெற்றி!!!! 2014-15ஆம ஆண்டிற்கு CMD முதல் காசுவல் மஸ்தூர் வரை ரூ.3,000/- PLI.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Thursday, October 13, 2016

நிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக போராட்டம் தள்ளிவைப்பு

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க நிர்வாகம் உறுதி மொழி கொடுத்துள்ளதின் அடிப்படையில் 14.10.2016 அன்று நடைபெற இருந்த மாலை நேர தர்ணா போராட்டம் தள்ளி வைப்பு.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Tuesday, October 11, 2016

ஆர்ப்பாட்டம்

சென்னை CGM அலுவலகத்தில் 10 ஆண்டுகள் பணி நீக்கம் செய்த 11 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் 

Tuesday, September 27, 2016

மாநில செயற்குழு கூட்டம்

கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு 
நமது தமிழ் மாநில  சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது .அன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டமும் நடைபெற உள்ளது .அகில இந்திய மாநாட்டு நிதி நிலுவை தொகையை வரும் 10 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் செலுத்தி விட வேண்டும் என்று அனைத்து கிளை செயலர்களுக்கும் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் . .

TNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம்

TNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் அதன் தலைவர் தோழர் இளமாறன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் தொடக்க உரை நிகழ்த்தினார் .அதன் பின் BSNLEU மாவட்ட செயலர் வாழ்த்துரை வழங்கினார் .மாநில தலைவரும் ,அகில இந்திய துணை தலைவரும் ஆன தோழர் முருகையா சிறப்புரை நிகழ்த்தினார் .அதன் பின் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு உரிய விளக்கங்களை அவர் கூறிட மாவட்ட பொருளாளரும்  மாநில  சங்க நிர்வாகியுமான தோழர் வேலுச்சாமி நன்றியுரை கூறினார் .மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற  இக் கூட்டத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர்  தோழர் மதிக்கண்ணன் ,விருதுநகர் OUTDOOR கிளை செயலர் தோழர் மாரிமுத்து , மாவட்ட துணை தலைவர் தோழர்  அனவ்ரதம் ,மாவட்ட அமைப்பு செயலர் ராதாகிருஷ்ணன் ,மற்றும் ராஜாராம் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்  மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர் .ஊதிய நிலுவை பிரச்சனை , EPF ,ESI பிரச்சனைகள் ,ஊதிய மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டன .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...