அருப்புக்கோட்டை கிளை துணைச்செயலர் தோழர் தியாகராஜன் அவர்களின் தாயார் இன்று காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
Monday, September 19, 2016
Thursday, September 15, 2016
அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு
நமது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக மற்றும் பார்வையாளர்களாக 14/09/2016 அன்று நடைபெற்ற சிறப்பு செயற்குழுவில் கீழ்க்கண்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
1. S .ரவீந்திரன் , மாவட்ட செயலர்
2. A .சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர்
3.K.சமுத்திரம் ,கிளை செயலர் ,ஸ்ரீவில்லிபுத்தூர்
பார்வையாளர்கள் :-
1. M.முத்துசாமி ,கிளை செயலர் ,சிவகாசி
2.S.வெங்கடப்பன் , மாவட்ட உதவி செயலர்
காத்திருப்போர் பட்டியல் :-
1.R.ராஜமாணிக்கம் ,மாவட்ட அமைப்பு செயலர் ,சிவகாசி
2.C .சந்திரசேகரன் ,மாவட்ட பொருளாளர் ,விருதுநகர்
ரோடு ஷோ
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நமது BSNLEU தோழர்கள் இன்று 15/09/2016 இரண்டாம் நாளாக ரோடு ஷோக்களில் பங்கேற்றனர்.இன்று விருதுநகர் MGR சிலை அருகே நடைபெற்ற ரோடு ஷோவில் பெண் தோழியர்கள் மங்கையர்கரசி ,தனலெட்சுமி மற்றும் வெங்கடப்பன் ஆகியோர் மாவட்ட செயலர் ரவீந்திரனுடன் பங்கேற்றனர் பெண் தோழியர்கள் கலந்து கொண்ட முதல் நிகழ்வு இது .இந்த ரோடு ஷோவில் 27 ஸ்டூடண்ட் ஸ்பெஷல் சிம்கள் உட்பட 158 சிம்கள் விற்கப்பட்டன .3 MNP பெறப்பட்டது .



அருப்புக்கோட்டை அத்திபட்டியில் நடைபெற்ற நிகழ்வில் தோழர்கள் மதிக்கண்ணன் மற்றும் கணேசன் பங்கேற்றனர் .இங்கு 30 சிம்களும் 2 MNP மற்றும் 1 லேண்ட் லைன் பெறப்பட்டது . காரியப்பட்டியில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி கலந்து கொண்ட நிகழ்வில் 40 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .இதில் 10 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்கள் .ஏழாயிரம்பண்ணையில் 75 சிம்கள் .இங்கு நமது தோழர்கள் தங்கராஜ் மற்றும் ஜெயராம்,SDE(MKTG )பங்கேற்றனர் .தம்பிபட்டியில் 45 சிம்கள் .இங்கு நமது தோழர் சுப்பையாயுவும் , மம்சாபுரத்தில் 54 சிம்கள் .இங்கு நமது தோழர் ராமசந்திரன் அவர்களும் பங்கேற்றனர் .ராஜபாளையம் பகுதியில் 144 சிம்கள் மற்றும் 2 MNP .இங்கு நமது தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,I .முருகன் தலைமையில் ரோடு ஷோ நடைபெற்றது .சிவகாசியில் மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி மற்றும் ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,குருசாமி, நாகேந்திரன் ,கருப்பசாமி ,செல்லம்,இருளப்பன் கலந்து கொண்ட நிகழ்வில் 401 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .இரண்டு நாட்கள் நடைபெற்ற மேளாவில் கிட்டத்தட்ட 2200 சிம்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது .
Wednesday, September 14, 2016
இரங்கல்
சிவகாசி SDOP கிளை தலைவர் தோழர் A .அழகுராஜ் அவர்களின் தாயார் இன்று காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Tuesday, September 13, 2016
ரோடு ஷோ
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நமது BSNLEU தோழர்கள் 12/09/2016 அன்று நடைபெற்ற ரோடு ஷோக்களில் பங்கேற்றனர் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1300 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .



GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ,SDOP,VR கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட பொருளர் சந்திரசேகரன் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி சந்திரசேகரன் ,GM அலுவலக கிளை பொருளர் தோழர் மாரியப்பா ஆகியோர் பங்கேற்ற கள்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வில் 50 நியூ வசந்தம் சிம்களும் ,25 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்கப்பட்டன . ராஜிவ் நகரில் நடைபெற்ற ரோடு ஷோவில் அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் பங்கேற்றதில் 20 சிம்களும் 2 லேண்ட் லைன் இணைப்புகளும் பெறப்பட்டன .காரியாபட்டியில் நடைபெற்ற ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ராசு மற்றும் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 40 நியூ வசந்தம் சிம்களும் 13 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்பனை செய்யப்பட்டன .பாலவநத்தம் கிராமத்தில் 120 நியூ வசந்தம் சிம்களும் 9 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்கப்பட்டன .இங்கு நமது தோழர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட உதவி செயலர் வெங்கடப்பன் ஆகியோர் பங்கேற்றனர் .சிவகாசியில் 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் 507 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி கிளை செயலர்கள் கருப்பசாமி மற்றும் முத்துசாமி ,தோழர்கள் சுப்பிரமணி ,குருசாமி ,அழகுராஜ் ,பாஸ்கரன் ,செல்லம் ,நாகேந்திரன் மற்றும் DE (mtce ) சிவகாசி அவர்களும் கலந்து கொண்டனர் .





மாவட்ட செயலர் ரவீந்திரன் அழகாபுரியில் நடைபெற்ற ரோடு ஷோவில் SDE (MKTG ) அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டார் .இங்கு 79 நியூ வசந்தம் சிம்களும் 20 ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்கப்பட்டன .எரிச்சநத்தம் பகுதியில் 31 சிம்கள் விற்கப்பட்டன .இங்கு நமது தோழர்கள் தங்கராஜ்,ஜெயராம் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .நத்தம்பட்டியில் 22 சிம்கள் , சத்திரப்பட்டியில் 15, கீழராஜகுலராமன் பகுதியில் 5 வத்ராப்பில் 35,விற்பனை செய்யப்பட்டன .இங்கு நமது தோழர்கள் முனீஸ்வரன் ,I .முருகன் ,அர்ஜுனன் மற்றும் தங்கதுரை ஆகியோர் பங்கேற்றனர் .ராஜபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் தோழர்கள் முத்துராமலிங்கம் ,ராதாகிருஷ்ணன் ,தியாகராஜன் ,வெள்ளை பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் , அனவரதம் ஆகியோர் பங்கேற்றதில் 140 நியூ வசந்தம் சிம்களும் 22 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்பனை செய்யப்பட்டன மற்றும் 7 MNP பெறப்பட்டு உள்ளது .
மீண்டும் நமது பணி வரும் 15 ஆம் தேதி தொடரும்
Sunday, September 11, 2016
Saturday, September 10, 2016
சிறப்பு செயற்குழு கூட்டம்
சிறப்பு செயற்குழு கூட்டம்
நாள் :- 14/09/2016 இடம் :-சங்க அலுவலகம்
நேரம் :- மாலை 300 மணி
தலைமை :- தோழர் A .சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர்
தியாகிகளுக்கு அஞ்சலி :- தோழர் .அஷ்ரப்தீன் ,மாவட்ட உதவி செயலர் .
ஆய்படு பொருள்
1.ஸ்தல மட்ட பிரச்சனைகள்
2.அகில இந்திய மாநாட்டு பிரதிநிதி மற்றும் பார்வையாளர் தேர்வு
3.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
சிறப்புரை
தோழர் .A.பாபு ராதாகிருஷ்ணன் ,மாநில செயலர் ,BSNLEU
நன்றியுரை :-தோழர் C .சந்திரசேகரன்
மாவட்ட பொருளர்
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
