Friday, March 11, 2016

கார்ட்டூன்!


                                  நன்றி :-விகடன் 

Tuesday, March 8, 2016

JTO LICE தேர்வு

JTO LICE 2013-14 தேர்வில் 2008ம் வருடத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் தேர்வு எழுத அனுமதிப்பது தொடர்பாக மத்திய சங்கத்திற்கு கடிதம் படிக்க :-Click Here

இ‌ன்று உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!

           மா‌ர்‌ச் 8 உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!
Happy women's day animations
மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது. எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌த் த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது. இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார். அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம்.(நன்றி :-வெப் துனியா )
அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம் நமது BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

Tuesday, February 16, 2016

மக்களின் பிஎஸ்என்எல் எப்படி வீழ்த்தப்படுகிறது? - டி.கே.ராஜலக்ஷ்மி

ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடு வெறுமனே லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. மக்கள் சேவையே பிரதானம். இன்றைக்கும் 98% கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமே சேவை அளித்துவருகிறது.
சென்னைப் பெருமழை வெள்ளத்தில் பிஎஸ்என்எல் மட்டுமே தொடர்ந்து சேவையை வழங்கியது. இதற்காக டீசல் ஜெனரேட்டர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் இயக்கப்பட்டன. தலைமைப் பொது மேலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை இரவு பகலாக வீட்டை மறந்து வேலை பார்த்து தகவல் தொடர்பு அறுந்துபோகாமல் பார்த்துக்கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் நீரில் மூழ்கிய கருவிகளைச் சீரமைத்து தொடர்பை மீண்டும் ஏற்படுத்த அதன் ஊழியர்கள் நீந்திச் சென்று சேவையாற்றினர்.
மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் சொல்ல ஒரு வாரத்துக்குக் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட்டது. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு 2 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் சேவையை நிறுத்திவிட்டன.
அரசு நிர்வாகிகளின் உள்நோக்கம் எப்படி இருந்தாலும் துறையின் 2.5 லட்சம் ஊழியர்கள் தங்களுடைய கடமையை நிறைவாகவே செய்கின்றனர். 2006 வரையில் பிஎஸ்என்எல். ஆண்டுதோறும் ரூ.40,000 கோடி வருவாய் ஈட்டியது. ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை லாபம் கிடைத்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வருவாய் தொடர்ந்து சரிகிறது. இதற்கான காரணம் உரிய காலத்தில் கருவிகளை வாங்க முடியாதது. அரசு முடிவுகளைத் தாமதமாக எடுப்பது. கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிலவழித் தொலைபேசி மற்றும் செல்பேசி வாடிக்கையாளர்களை இதனாலேயே பிஎஸ்என்எல் இழந்தது.
2007-ல் 450 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரை ஐமுகூ அரசு ரத்துசெய்தது. 2010-ல் 930 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரும் ரத்துசெய்யப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சரிவு அப்போதுதான் தொடங்கியது. 2007 தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய கருவிகளை வாங்க முடியாமல் தடுக்கப்பட்டது. 2008-09 வரையில் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது. அதன் பிறகுதான் இந்த இழப்பு ஏற்பட்டது. அடுத்து நஷ்டத்தில் சிக்கியபோது, கேபிள்கள், கருவிகள், வயர்கள், பிராட்பேண்ட் மோடம்கள் வாங்க முடியாமல் பிஎஸ்என்எல் பாதிப்புக்கு உள்ளானது.
இது மட்டும் அல்ல, இப்படி நிறைய. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அது ஒப்படைத்த அலைக்கற்றை வரிசைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்கு அளித்து வந்த மானியங்களும் நிறுத்தப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். இதே காலத்தில் வெறும் 30,000 பேர் மட்டுமே புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.
திட்டமிட்டே ஆள் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. மற்ற தனியார் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியபோதும் பிஎஸ்என்எல் உயர்த்த அனுமதிக்கப்படவில்லை. செல்பேசி சேவையில் பிற நிறுவனங்களுக்கு 1995 முதலே செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்பட்டாலும் பிஎஸ்என்எல் 2 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த உரிமத்தைப் பெற முடிந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் அடுத்த அடி கொடுக்க அரசு தயாராகியிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 75,000 செல்பேசிக் கோபுரங்களில் 61,000-த்தைத் தனியாகப் பிரித்து, சார்புக் கோபுர நிறுவனத்தை அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இத்துறையின் தொழிற்சங்க அமைப்புகளுக்கே இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்தது. இதற்கு அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துகளைச் சிறப்பாகப் பராமரிப்பதற்காக இந்த முடிவை எடுக்கிறார்களாம்.
உண்மையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது செல்பேசிக் கோபுரங்களைத் தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொண்டு அதற்கு வாடகை பெறுகிறது. ஆக, அரசின் புதிய முடிவு அவற்றைத் தனியார் கையில் ஒப்படைக்கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தவுமே உதவும். மேலும், படிப்படியாக இந்நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் வழிவகுக்கும்.
பிஎஸ்என்எல் மக்களுக்கான நிறுவனம். மக்களுடைய நிறுவனம். இதை மக்கள் உணர வேண்டும்!
© ஃபிரண்ட்லைன்

நன்றி : தமிழ் இந்து

Sunday, February 14, 2016

விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம்

 விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் வரும் 19-02-106 முதல் 21-02-2016 வரை  மகாராஷ்டிர மாநிலம் அஹ்மத் நகரில் நடைபெற உள்ளது .

அடுத்த அனைத்திந்திய மாநாடு

chennaiஅடுத்த அனைத்திந்திய மாநாடு சென்னையில் நடைபெறுவதற்கு  நமது தமிழ் மாநில செயற்குழு ஒப்புதல் கொடுத்துவிட்டது . 12-02-16 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் மாநில மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைத்திந்திய மகாநாட்டுக்கு தங்கள் பங்களிப்பை உடனடியாக செலுத்தினர் . அங்கேயே ரூபாய் 1 லட்சம் வசூலாகியது . நமது மாவட்ட சங்கத்திற்கு 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...