Saturday, July 18, 2015

ரமலான் வாழ்த்துக்கள்

BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது  

Wednesday, July 15, 2015

அடையாளங்களை தொலைக்கும் தமிழன்!

   வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது. நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.புதிய நாகரிகம் நல்லதுதான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன். இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியைதான். தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில்தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், நாமோ நவீன காங்கீரிட் கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்? அதனால்தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது. கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.


நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும். நாம் உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது.பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே பருகுகிறோம். இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது. முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட நாம் பாதுகாப்பது இல்லை. வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும்தான். இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.


இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்!
         நன்றி :- விகடன் செய்திகள் 

'வீதி'தான் 'விதி'யா?


                   நன்றி : தி ஹிந்து 

அத்தனை கிரகத்தையும் எட்டிப் பார்த்து விட்டோம்... பெரும் மகிழ்ச்சி + பெருமிதத்தில் நாசா

விண்வெளி ஆராய்ச்சியில்  இன்னுமொரு மைல்கல் 



சூரியக் குடும்பத்தில் உள்ள அத்தனை கிரகத்தையும் பார்த்து விட்டோம் என்று நாசா பெருமிதத்துடன் கூறியுள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களுக்கும் விண்கலம் மூலம் போய் வந்த ஒரே நாடு அமெரிக்கா என்ற பெருமையும் அதற்குக் கிடைத்துள்ளது. புளூட்டோ பயணம் வெற்றிகரமாக அமைந்ததை நாசா விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.கடைசி "கிரக"ப் பிரவேசம் சூரியக் குடும்பத்தில் இதுவரை மனித வாடை எட்டிப் பார்க்காத ஒரே கிரகமாக புளூட்டோ மட்டுமே இருந்து வந்தது. தற்போது அதற்கும் போய் விட்டான் மனிதன். இதுவே நாசாவின் உற்சாகத்திற்கு முக்கியக் காரணம்.
                 நன்றி :- ஒன்  இந்தியா 

Tuesday, July 14, 2015

ஆறப் போட்டுடுவாங்களோ?


                              நன்றி :- தி ஹிந்து 

‘வியாபம்’ ஊழல்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்?



உலக விஷயங்கள் பற்றி எல்லாம் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் நமது பிரதமர் மோடி, பாஜக அரசின் ஊழல் விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருப்பது ஏன்?காங்கிரசின் திட்டங்களை எல்லாம் குறை கூறி ஆட்சிக்கு வந்தவர் நமது பிரதமர் மோடி. ஆட்சிக்கு வந்தபின்பு எதையெல்லாம் குறை கூறினாரோனா அதை எல்லாம் தீவிரமாக நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்- ஊழல் உட்பட. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல ஊழல்களை நாம் கண்டிருந்தாலும் இந்த வியாபம் ஊழலும், அதைத் தொடர்ந்து நிகழும் மர்ம மரணங்களும் நம்மை ஆழ்ந்த சிந்தனையில் தள்ளியுள்ளது என்றே சொல்லலாம். இந்த ஊழல்கள் மூலம் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இனியும் மோடியின் அரசு ஊழலுக்கு எதிரானது என்றும், வளர்ச்சியின் நாயகன் இவர் என்றும் இவர்களின் சகாக்களும், சங்கபரிவாரங்களும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.'வியாபம்' என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு.இதன்மூலம் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் ஆள் மாறாட்டம், புத்தகங்களை வைத்து பரீட்சை எழுத அனுமதிப்பது, பரீட்சை எழுதுவதற்கான அனுமதி அட்டையில் மோசடிகள், இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்றுள்ளனர்.இந்த பணியாளர் தேர்வாணையத்தில், அரசியல் செல்வாக்கும், பணபலமும், அதிகார துஷ்பிரயோகங்களும் இன்றைக்கு அங்கு ஆளும் பாஜக அரசு மூலம் புகுந்துள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பலர் மீது இந்த ஊழலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன.
இந்த விசாரணையை முன்னின்று நடத்திய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் ஷர்மாவும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் அக் ஷய் சிங்கும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்று மருத்துவர்களாக பணியில் சேர்ந்தால் நாளைக்கு இவர்களிடம் மருத்துவம் பார்க்கச் செல்லும் மக்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்?
                 நன்றி :- விகடன் செய்திகள் 

மோடி சொன்ன நல்ல நாள் வர 25 ஆண்டுகள் ஆகுமாம்: அமித்ஷா சொல்கிறார்!

காத்திருந்து  காத்திருந்து  காலங்கள் போகுதடி :- செய்தி படிக்க :-Click Here
                       நன்றி :- விகடன் செய்திகள் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...