Sunday, March 8, 2015

BSNL working to provide broadband through cable networks

செய்தி படிக்க :-Click Here

Sakthi Mariamman College signs an MoU with BSNL’s RTTC for training programmes

செய்தி படிக்க :-Click Here

சபாஷ் சிவகாசி

                  ஒரு குறுகிய கால அவகாசத்தில் SAVE BSNL கருத்தரங்கு மற்றும் விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை மிக சிறப்பாக எழுச்சியுடனும் , கட்டுபாட்டுடனும் காலை மட்டும் மதியம் அனைவருக்கும் நல் விருந்தை நல்கியும்  நடத்திய சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளுக்கு மாவட்ட சங்கம் தன் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .மாவட்டம் முழுவதும் ஊழியர்களை அணி திரட்டிய அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கம் தன்  புரட்சிகர நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது .நம் அழைப்பை ஏற்று வாழ்த்துரை வழங்கிய சீனியர் கணக்கு அதிகாரி திரு .ராதாகிருஷ்ணன் , NFTE சங்கத்தின் உதவி மாவட்ட் செயலர் தோழர் முத்துசாமி, SNEA கிளை செயலர் தோழர் M  சுப்ரமணியன் , CITU மாநில செயலர் தோழியர் மகாலட்சுமி , மாவட்ட பொது மேலாளர் திருமதி S E ராஜம், ITS , துணை பொது மேலாளர் திரு ராதாகிருஷ்ணன் ,உதவி பொது மேலாளர் திரு ராஜகோபால் , கோட்ட பொறியாளர் திருமதி தமிழ்செல்வி ஆகியோருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றி .

SAVE BSNL கருத்தரங்கம்

இன்று காலை 10 மணி அளவில் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் SAVE BSNL கருத்தரங்கம் தொடங்கியது .தோழியர் கீதா அவர்கள் தேசிய கொடியை ஏற்ற ,நமது சங்க கொடியை மூத்த தோழரும் OCB கிளை  செயலருமான தோழர் ஜெயபாண்டியன் ஏற்றி வைக்க ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை தோழர் மூக்கன் அதிர் வேட்டு முழங்க ஏற்றி வைக்க  எழுச்சி மிகு கோஷங்களை தோழர் ரசூல் எழுப்ப மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமை தாங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கருத்தரங்கை முறையாக துவக்கி வைத்தார் .AIBSNLEA மாவட்ட  செயலர் தோழர் T ராதாகிருஷ்ணன் , NFTE மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் .M  அய்யாசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .சிறப்புரை நிகழ்த்திய நமது அன்பு  தோழரும் ,அனைத்திந்திய சங்கத்தின் உதவி பொது செயலரும் ,நமது தமிழ் மாநில சங்கத்தின் தலைவரும் ஆன தோழர் .S .செல்லப்பா தனது உரையில் BSNL நிறுவனம் எதிர் நோக்கி உள்ள பிரச்சனைகளையும் , பொது துறைகளை பலவீனப்படுத்தும் மத்திய    அரசின் அரசின் போக்கையும் ,தனியார் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் போக்கையும் குறிப்பாக வோடபோன் நிறுவனத்திற்கு 11,000 கோடி வரி சலுகை கொடுத்த  மத்திய அரசு  நமது BSNL நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்ததற்கு அளிக்க வேண்டிய 6300 கோடி ரூபாயை தராமல் திட்டமிட்டு BSNL ஐ முடக்கிட நினைக்கும் போக்கை சுட்டி காட்டினார் .வர உள்ள போராட்டங்களை 100% பங்கேற்புடன் செய்தால் மட்டுமே இன் நிறுவனத்தை காத்திட முடியும் என்பதை நாம்  நினைவில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார் . BSNL நிறுவனத்தை 47% பங்கு விற்பனை செய்யப்பட்ட மற்றும் கடன் அதிகம் உள்ள MTNL நிறுவனத்தோடு இணைப்பது  என்பது இன் நிறுவனத்தை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என நினைவூட்டினார் . ஆணாதிக்க இவ் உலகில் பெண்கள் படும் இன்னல்களை குறிப்பிட்ட அவர் வலுவான இயங்கங்கள் மூலமே இன் நிலையை மாற்ற முடியும் என்பதை உலக மகளிர் தின செய்தியாக கூறினார் .தோழர் செல்லப்பா வின்  எழுச்சி மிகு உரை ஊழியர்களின் கவனத்தை பெரிதும்  ஈர்த்தது . அடுத்து பேசிய CITU சங்கத்தின் மாநில செயலர் தோழியர் மகாலட்சுமி இன்றைய அரசின் கொள்கைகளையும் , மகளிர் பிரச்சனைகளையும் விரிவாக பேசினார் .மதியம் 12 மணி அளவில் மாவட்ட பொது மேலாளர் திருமதி S .E .ராஜம் ,ITS அவர்கள் தனது உரையில் நமது  மாவட்டத்தில் BROAD BAND இணைப்புகளை அதிகப்படுத்துவதற்கு ஒவ்வொரு ஊழியரும் ஒரு இணைப்பை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினார் .உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிரும் ஒன்று  கூடிட மாவட்ட பொது மேலாளர் 8 கிலோ கொண்ட கேக்கை வெட்டி மகளிர் தின கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார் .





















Saturday, March 7, 2015

சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு மாநாடு

சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு மாநாடு 06-03-2015 அன்று மாலை 05.30 மணி அளவில் தோழர்கள் கணேஷ் போஸ் மற்றும் அழகுராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் ஜெயபாண்டியன் மற்றும் கருப்பசாமி அவர்கள் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கை விவாதங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது . ஆண்டறிக்கையில் உலக சூழல் , BSNLன்  இன்றைய நிலை ,அரசியல்  சூழல் ஆகிய்வை மிக அழகாக, சுருக்கமாக ,சுட்டி காட்டியது அற்புதமாக இருந்தது . மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக துவக்கி வைக்க ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் அய்யாசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.SDOP கிளை   தலைவர் ,செயலர் மற்றும் பொருளராக தோழர்கள் அழகுராஜ், கருப்பசாமி , இன்பராஜ் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .OCB  கிளைக்கு தோழர்கள் R  கருப்பசாமி , ஜெயபாண்டியன் ,கணேசன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...