தன் இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்த தோழன் . தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்ட தோழன் .நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்த தோழன் . தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்த தோழன் . தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.அவர் தம் நினைவு நாளில் பொதுவுடைமை சமுதாயம் அமைக்க சபதமேற்போம் !
Wednesday, October 8, 2014
7 th AIC
கொல்கொத்தாவில் நடைபெற உள்ள BSNLEU சங்கத்தின் 7வது அகில இந்திய மகாநாட்டை நவம்பர் மாதம் 6 ஆம் தேதி காலை 1000 மணிக்கு சி ஐடி யூ சங்கத்தின் அனைத்திந்திய தலைவர் தோழர் A K பத்மநாபன் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார் . 7 ஆம் தேதி பொது அரங்கம் நிகழ்ச்சியும் ,பேரணியும் மற்றும் உழைக்கும் மகளிர் கருத்தரங்கமும் நடைபெறும் . BSNL புத்தாக்கம் பற்றிய கருத்தரங்கம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது .CMD ,டைரக்டர் (CM), சகோதர சங்க தலைவர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர் . சார்பாளர் கட்டணம் ரூபாய் 800/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .ராஜ்கோட் செயற்குழுவின் அடிப்படையில் அனுமதிக்கபட்ட சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் .
Monday, October 6, 2014
Sunday, October 5, 2014
JAC
JAC யின் மிக முக்கிய கூட்டம் 07-10-2014 அன்று நடைபெற உள்ளது . 30 அம்ச கோரிக்கைகள் தீர்விற்கு அடுத்த கட்ட நடவடிக்கை அதில் எடுக்கப்படும்
பக்ரீத் நல் வாழ்த்துக்கள்.
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் இதயங்கனிந்த பக்ரீத் நல் வாழ்த்துக்கள்.
Wednesday, October 1, 2014
செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அ.சேகர் 30-09-2014 அன்று காலை 11 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார் ,அன்னாருக்கு இன்று (01-10-2014) நடைபெற்ற இறுதி அஞ்சலி கூட்டத்தில் அவர் தம் உடலுக்கு நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது .நமது மாவட்ட சங்கம் சார்பாக சமுத்திரகனி ,ரவீந்திரன், முத்துசாமி,கண்ணன் ,ஜெயக்குமார் ,சோலை ,அஷ்ரப்தீன் ,சந்திரசேகரன் ,இளமாறன், சிவஞானம் ,தங்கதுரை ,காதர் மொய்தீன் ,ஜெயச்சந்திரன் ,கருப்பசாமி மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...