Thursday, September 4, 2014

அருப்புகோட்டை அனர்த்தம்

      அருப்புகோட்டை பகுதியில் எழுத்தர் கேடரில் சுழல் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட பொது மேலாளரிடம் பல முறை மாவட்ட சங்கம் பேசியுள்ளது .மாநில தலைமை பொது மேலாளர் எந்த மாறுதல் உத்தரவையும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைமுறை படுத்த கூடாது என கூறியுள்ளதால் உங்கள் "Grievance " என்ன என்பதை கூறுங்கள்..அதை நடைமுறைப்படுத்துகிறேன் என்று கூறிய மாவட்ட பொது மேலாளர் அவர்கள் தற்போது 1 மாத அவகாசம் கேட்டுள்ளார் .நேற்று நடைபெற்ற பேட்டியின் போது கீழ்க்கண்ட கருத்துக்களை நாம் கூறியுள்ளோம் .
1.அருப்புகோட்டையில் எழுத்தர் கேடரில் சுழல் மாற்றம் செய்யும் போது சுழல் மாற்றல் நடைபெறாத அனைத்து ஊர்களிலும் அதை நடைமுறைப்படுத்த நமது சங்கம் ஒத்து கொண்டது .
2.அதை அமல்படுத்த தாமதமாகும் பட்சத்தில் நமது சங்க "Grievance " ஐ  அமல்படுத்தப்படும்போது NFTE சங்கத்தின் "Grievance " இருந்தால் அதையும் செட்டில் செய்ய நாம் ஒத்து கொண்டோம் .
3.சென்ற ஆண்டு ஒரு ஊழியர்க்கு மாவட்ட நிர்வாகத்தால் போடப்பட்ட மாறுதல் உத்தரவு இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதை பொது மேலாளரிடம் சுட்டி காட்டிய போது அதை அமல்படுத்தாத அருப்புகோட்டை கோட்ட பொறியாளரிடம் விளக்கம் கேட்டு உடனடியாக கடிதம் எழுத உத்தரவு இட்டுள்ளார் .
4. CSC அருப்புகோட்டையில் ஒரு ஊழியர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஒரே  சீட்டை பார்க்க கூடிய விசயத்தை பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
5.DE லெவலில் முடியக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தட்டி கழித்து மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு அனுப்புகின்ற DE ,அருப்புகோட்டை அவர்களின் போக்கை பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .

Wednesday, September 3, 2014

மறைமுக விற்பனைக்கு நமது BSNL

   பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNL நிறுவனத்தை BSNL நிறுவனத்தோடு இணைக்க DOT அமைப்பு தேதியை நிர்ணயம் செய்துவிட்டது . வரும் 31-07-2015 அன்று இரண்டு நிறுவனங்களும் இணைக்கபட்டுவிடுமாம். சங்கங்களிடம் (ஒப்புக்கு) ஆலோசனை கேட்டு அமைச்சரவை குறிப்பை வரும் 2015 ஏப்ரல் மாதம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுமாம் . செய்தி படிக்க :-Click Here

Monday, September 1, 2014

செயல்பாட்டிற்கான சர்வதேச தினம்


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மூன்றாம் தேதியை செயல்பாட்டிற்கான சர்வதேச தினமாக - தொழிற்சங்கங்களின் உலகக் கூட்டமைப்பு (WFTU) அனுசரித்து வருகிறது. இவ்வாண்டும் அக்டோபர் 3ஐ “வேலையிண்மை”யை மையப்படுத்திய ‘செயல்பாட்டிற்கான சர்வதேச தினமாக’ அனுசரிக்க அறைகூவல் விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பலகோடி இளைஞர்கள் வேலைதேடி அலைபவர்களாக இருக்கிறார்கள். இது உழைக்கும் வர்க்கத்துடன் தொடர்புடையது. 2008ல் தொடங்கிய உலக நிதி நெருக்கடி பலகோடித் தொழிலாளர்களின் வேலையைப் பறித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பியது. வேலைபறிக்கப்பட்ட தொழிலாளர்களைக் காக்க எந்த முயற்சியும் எடுக்காமல் நட்டாற்றில்விட்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் நிதி நெருக்கடியில் இருந்து முதலாளிகளை மீட்டெடுப்பதற்காக கோடிகோடியாய் நிதி ஒதுக்குகிறன.
1945 அக்டோபர் 3ல் தொடங்கப்பெற்று 105 நாடுகளைச் சேர்ந்த 210 தொழிற்சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட WFTUவில் நமது BSNLEU சங்கமும் உறுப்பினராக உள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்ற நமது சங்கத்தின் மத்திய செயற்குழு செயல்பாட்டிற்கான சர்வதேச தினத்தை வேலையின்மைக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் அனுசரிக்க முடிவு செய்தது. மத்திய சங்கம் மற்றும் கூட்டமைப்பின் முடிவுகளை செயல்படுத்த வேண்டியது நமது கடமை.

Sunday, August 31, 2014

சிறப்புமிகு சிவகாசி செயற்குழு

30-08-2014 அன்று சிறப்புமிகு சிவகாசி செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை தோழியர் கல்யாணசுந்தரி அவர்கள் ஏற்றி வைக்க , இன்னுயிர் ஈத்த தோழர்களை நினைவு  கூறும் அஞ்சலி உரையை தோழர் கிருஷ்ணகுமார் படிக்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் செயற்குழுவை தொடக்கி வைத்து செயற்குழுவின் அவசியத்தை கூறினார் .பின்னர் சிறப்புரை நிகழ்த்திய தோழர்கள் வெங்கட்ராமன் ,மாநில உதவி தலைவர் ,மாநில உதவி செயலர் தோழியர் V P இந்திரா அவர்கள் தற்போது BSNL நிறுவனமும் அதன் ஊழியர்களும்  எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தனர் .தோழர் வெங்கட்ராமனை தோழர் கருப்பசாமி ,SDOP கிளை செயலர் கௌரவித்தார் . தோழியர் இந்திரா அவர்களை தோழியர் ராஜேஸ்வரி ,TTA அவர்கள்  கௌரவித்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளரும் வில்லிசை கலைஞருமான   தோழர் லக்ஷ்மணபெருமாள் அவர்களை சாத்தூர் கிளை செயலர் தோழர் காதர் அவர்கள் கௌரவித்தார்.தோழர் லக்ஷ்மணபெருமாள் சிரிக்க வைத்து சிந்தனை உரையை நிகழ்த்தினார் . கேரளா மாநில குடும்ப சுற்றுலாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார் .ESI அட்டையை தோழியர் இந்திரா அவர்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கு வ்ழங்க , அடையாள அட்டைகளை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் வழங்கினார் .மாநில மகாநாட்டு நன்கொடைகளை முழுமையாக வசூலித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் , அதற்கடுத்த வசூலில் தோழர் ஜெயபாண்டியன் , தோழர் இளமாறன் ஆகியோருக்கு மாவட்ட தலைவர் சமுத்திரகனி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் .அதே போல் அதிக ஊழியர்களை மாவட்ட செயற்குழுவிற்கு திரட்டிய தோழர்கள் கருப்பசாமி, ஜெயபாண்டியன்,இளமாறன் ,சமுத்திரம் ,சிங்காரவேல் ஆகிய கிளை செயலர்கள் மாவட்ட தலைவரால் கெளரவிக்கபட்டனர் .செயற்குழுவை வாழ்த்தி தோழர் T .ராதாகிருஷ்ணன் , மாவட்ட செயலர் .AIBSNLEA, ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் M முத்துசாமி நன்றி உரை கூற செயற்குழு நிறைவுற்றது .செயற்குழுவின் ஒரு பகுதியாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் M செல்வராஜூ அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழரை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,DYFI செயலர் தோழர் முருகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்க நிர்வாகிகள் சார்பாக தோழர் செல்வராஜூ அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .தோழர் செல்வராஜூ ஏற்புரை நிகழ்த்த பணி ஓய்வு பாராட்டு விழா இனிதே நிறைவுற்றது .

IDA எதிர்பார்ப்பு

01-10-2014 முதல் IDA உயர்வு 6.9 முதல் 7.4 % வரை  இருக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.செய்தி படிக்க :-Click Here

Impressions of some Expressions on 30th August 2014















11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...