Thursday, July 10, 2014

20 வது லோக்கல் கவுன்சில் கூட்டம்

          09-07-2014 அன்று விருதுநகர் மாவட்ட 20 வது லோக்கல் கவுன்சில் கூட்டம்  பொது மேலாளர் திருமதி .S E ராஜம் ,ITS  தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் லேண்ட் லைன் பழுதுகளை சரி செய்ய போதுமான கேபிள் இல்லை. க்ரூப்ஸ் பகுதியில் வேலை செய்ய போதுமான ஒப்பந்த ஊழியர்கள் இல்லை மற்றும் மாவட்டத்தில் ஏராளமான பில்லர்கள் சரிந்த நிலையிலும், தரைமட்டத்திற்கு கீழேயும் உள்ளதை சரி செய்ய வேண்டும் என்பதையும்,அதே போல் BTS இல் உள்ள பழுது அடைந்த பாட்டரிகளை   மாற்றுவதற்கு போதுமான புதிய பேட்டரிகள் இல்லை என்பதால் செல் சேவை பாதிக்கப்படுவதையும் சுட்டி காட்டினோம்.
          பொது மேலாளரின் உத்தரவுகள் மாவட்டத்தில் கீழ் மட்டங்களில்  செயல் படுத்தப்படவில்லை என்பதையும், நிறுவனத்தின்  விதிகளை  புரிந்து கொள்வதில் ஏற்படும்  கோளாறுகளை களையவும், சேவையை சரி செய்ய இலாகா வண்டிகளை மற்றும் ஒப்பந்த  அடிப்படையில் ஓடும் கார்களை அனுமதிப்பதில் நிதியை காரணம் சொல்லி தட்டி கழிக்கும் அதே வேளையில் ஒப்பந்தகாரர்கள் துணையுடன் கார்கள் தவறாக பயன்படுத்துவது மாவட்டத்தில் அதிகரித்து உள்ளதை சுட்டி காட்டியும் நமது சங்க லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து நமது எதிர்ப்பை பதிவு செய்தோம்.
கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டு சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டன :
1. விருதுநகர் பழைய தொலைபேசி நிலையத்தில் உள்ள கோட்ட பொறியாளர், மற்றும்  துணைகோட்ட பொறியாளர்கள் அலுவலகங்களை மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்திற்கு  இடமாற்றம் செய்வதை 15-08-2014 க்குள்   செய்து முடிக்க வேண்டும். அதன் பின் பழைய தொலை பேசி நிலையத்தை வாடகைக்கு விடுவது.
2. அல்லம்பட்டி தொலைபேசி நிலையத்தை மெயின் தொலைபேசி நிலையத்தோடு  இணைப்பதற்கு கேபிள் வரைபடத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது.
3. மாவட்டம் முழுவதும்  பழுதடைந்த, தரை மட்டத்திற்கு  கீழே இருக்க கூடிய   பில்லர்களை சரி செய்ய விரைவில் டெண்டர் விடப்படும்.
4. கேபிள் மற்றும் பாட்டரிகள் தேவையை மாநில நிர்வாகத்திடம் பேசி வாங்குவதற்கு முயற்சி செய்வது .
5. வாடகை கட்டிடங்களில்  இயங்கும் RR நகர் மற்றும் வெம்பகோட்டை தொலைபேசி நிலையங்களை நமது கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிகையை துரிதப்படுத்துவது.
5. அனைத்து OUTDOOR டெலிகாம் மெக்கானிக்களுக்கும்  டேப்பர் வழங்க மாநில நிர்வாகத்திற்கு நிர்வாகத்தரப்பில் இருந்து மீண்டும் கடிதம் எழுதுவது.
6. Outdoor டெலிகாம் மெக்கானிக்களுக்கும், Power Plant பணியில் ஈடுபடும் TTAக்களுக்கும் Power Shoe வழங்கவும் TTAக்களுக்கு Tools Kit வழங்களும் நிர்வாகத் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது.
7.சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள திருச்சுழி தொலை பேசி நிலையத்தை சரி செய்ய estimateக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.
8. PORT OUT சந்தாதாரர்கள் பட்டியலை சேல்ஸ் மற்றும் IMPCS பகுதிகளுக்கு கொடுக்க வேண்டும்  என்பது ஏற்று கொள்ளப்ட்டுள்ளது .
9. Wimax சேவை நிறுத்தப்பட்டதால் உபரியான TTA வை outdoor பகுதிக்கு போடாமல் SDE(Indoor)  பகுதிக்கு நியமனம் செய்ய பொது மேலாளர் கூறி உள்ளார். சிவகாசி OCB தொலைபேசி நிலையத்தில் SDE(Indoor) பகுதியில் ஒரு TTA நியமனம் செய்யப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
10. Transmission Team பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதைச் சுட்டிக்காட்டினோம். வரும் நாட்களில் இது போன்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் வலியுறுத்தியுள்ளது.
11. அருப்புக்கோட்டை Groups II பகுதிக்கு JTO அவசியம் தேவை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளோம். நிலைமைகளை DGM ஆய்வு செய்து விரைவில் ஆவண செய்வார் என பொதுமேலாளர் உறுதியளித்துள்ளார்.
       கடுமையான நிதி நெருக்கடியை நிறுவனம் சந்தித்து வருகின்ற சூழலில் பிரச்சனைகளின் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்து நிதிச் சுமையைக் குறைக்கும்படியான திட்டமிடலை வேண்டுவதாக லோக்கல் கவுன்சில் அமைந்தது.
அத்துடன் வளர்ச்சிப் பணிகளில் தோளோடு தோள் நின்று அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாற்றிட வேண்டும் என்ற உணர்வையும் இக் கவுன்சில் உருவாக்கியிருந்தால் அது லோக்கல் கவுன்சிலுக்கும் நமக்கும் கிடைத்த வெற்றியே.விளாம்பட்டி பகுதியில் 3 ஆண்டுகளாக 300 இணைப்புகள் பழுதாகி இருந்ததை 1 மாத கால அவகாசத்தில் சரி செய்ததில் பெரு முயற்சி செய்த DE (Mtce ) திரு  தனுஸ்கோடி அவர்களையும் ,GSM பகுதியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து 2 கோடிக்கும் மேல் வருவாய் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்த AGM(S-CM) திரு ராஜகோபால் அவர்களையும் ,குறுகிய காலத்தில் தமிழ்நாடு போலீஸ் துறைக்கு 2500 மேல் செல் இணைப்புகளை வழங்கியதில் பெரும் பணியாற்றிய மார்க்கெட்டிங் SDE திரு பழனிவேல்ராஜன் அவர்களையும் ஊழியர் தரப்பு சார்பாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தோம் . 

Broadband subscriber base grew 6% to 65.3 mn till 31 May

 செய்தி படிக்க :-Click Here

Economic Survey 2013-14: Investments in telecom surged 4 times to $1.3 bn

    The telecom sector attracted over 4-fold growth in foreign investments at USD 1.3 billion during the financial year 2013-14.The sector had attracted investment worth USD 304 million in 2012-13 - about 84 percent lower compared to 2011-12, the Economic Survey tabled in Parliament said Wednesday.India's telecom sector has registered phenomenal growth during the past few years and has become the second largest telephone network in the world, next only to China, it added.Under this scheme BSNL is to provide 8,88,832 wireline broadband connections to individual users and government institutions, and set up 28,672 kiosks over six years ending 2015 at estimated subsidy of Rs 1,500 crore.The survey said: "As on March 31, 2014, a total of 5,89,783 broadband connections had been provided and 14,186 kiosks set up in rural and remote areas."The subsidy disbursed till March 31, 2014 under the scheme was Rs 329.55 crore."
"A series of reform measures by the government, innovations in wireless technology and active participation by the private sector played an important role in the growth of the telecom sector in the country," the survey said.The total telephone connections in the country increased to 933.02 million at the end of March 31, 2014 from 898.02 million a year ago. However, the total connections at the end of March 2012 were 951.35 million.Foreign Direct Investment in telecom and computer sectors outshone other top key sectors such as financial/non-financial services, construction, hotels and tourism. The top 5 sectors cumulatively accounted for 45 percent of total investments in the country last fiscal.Overall, however, cumulative FDI inflows in these top 5 services sectors declined sharply by 37.6 percent to USD 6.4 billion. FDI in computer software and hardware sector grew about 2.3 times to USD 1.12 billion in 2013-14, from USD 486 million in 2012-13."We are extremely pleased with increase in FDI. The clarity on policy and regulatory front and the expectation of new government clearly enhanced attractiveness of India as investment destination," telecom industry body COAI's Director General Rajan S Mathews said reacting on the survey data.During 2013-14, government also obtained Rs 61,162 crore from auction of spectrum. The final price were 27.6 percent more than the minimum price of telecom radiowaves fixed by government at that time.The government last fiscal had introduced new telecom licencing regime, Unified Licences, under which companies interested in providing mobile or any wireless services are required to buy spectrum separately.To enhance fixed line broadband connection in rural areas, the government entrusted state-run BSNL to provide broadband connection with minimum speed of 512 kbps in rural and remote areas under the Rural Wireline Broadband Scheme. Under this scheme BSNL is to provide 8,88,832 wireline broadband connections to individual users and government institutions, and set up 28,672 kiosks over six years ending 2015 at estimated subsidy of Rs 1,500 crore.The survey said: "As on March 31, 2014, a total of 5,89,783 broadband connections had been provided and 14,186 kiosks set up in rural and remote areas.

BSNL worst performer, ONGC highest profit-making PSU: Survey

             Oil explorer ONGC again emerged as the highest profit-making PSU of the country during 2012-13 while telecom major BSNL turned out to be the biggest loss-making enterprise, says the Economic Survey.The Survey, presented a day ahead of the General Budget, said the net profit of 149 profit-making CPSEs stood at Rs 1,43,559 crore in 2012-13 while the net loss of 79 loss-making CPSEs stood at Rs 28,260 crore. Oil and Natural Gas Corporation Ltd (ONGC), National Thermal Power Corporation Ltd (NTPC), Fertilizer Corporation of India Ltd, Coal India Ltd and Bharat Heavy Electricals Ltd (BHEL) were the top five profit-making CPSEs during 2012-13. Meanwhile, Bharat Sanchar Nigam Ltd (BSNL), Mahanagar Telephone Nigam Ltd (MTNL), Air India Ltd, Chennai Petroleum Corporation Ltd, Hindustan Photo Films Manufacturing Co Ltd, were among the top five loss-making CPSEs during 2012-13.“There was a marginal increase in the total contribution of central public sector enterprises (CPSEs) to the central exchequer by way of dividend payment, interest on government loans and payment of taxes and duties during the year, from Rs 1,62,402 crore in 2011-12 to Rs 1,62,761 crore in 2012-13,” the survey pointed out. ”This was primarily owing to increase in contribution towards service tax and sales duty. There was, however, a decline in customs duty and excise duty,” it said. There were altogether 277 CPSEs under the administrative control of various Ministries/Departments as on March 31, 2013. Out of these, 229 were operational and 48 under construction.

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்வு!

        நிதியமைச்சரின் புதிய அறிவிப்புபடி, ஆண்டு வருவாய் ரூ. 2.5 லட்சம் வரை இருந்தால், வருமான வரி கிடையாது. ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும். ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால் 20 சதவீத வரி விதிக்கப்படும். ரூ. 10 லட்சத்தக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும்.
             மாத ஊதியம் வாங்குவோருக்கு வருமான வரியில் இருந்து கொஞ்சம் சலுகை தரப்பட்டுள்ள நிலையில், 80 C எனப்படும் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கும் வரிச் சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சமாக உயர்த்தியது. இதேபோல் 80 சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகையும் அதிகரித்துள்ளது. மாத ஊதியம் வாங்குவோரில் பெரும்பாலானோர் இந்த 80சி பிரிவின் கீழ் முதலீடுகள் செய்பவர்களே. வருமான வரி சட்டத்தின்படி 80சி, 80சிசி, 80சிசிசி ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் காப்பீடு எனப்படும் இன்ஷூரன்ஸ், வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப், குழந்தைகளுக்கான கல்விக்கு செலுத்தப்படும் கட்டணம், வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் அசல் (80-சியில் வீட்டுக் கடனுக்கான வட்டி வராது), தேசிய சேமிப்பு பத்திரம், இ.எல்.எஸ்.எஸ். (மியூச்சுவல் ஃபண்ட்), ஐந்து வருட வங்கி டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தால் 1 லட்ச ரூபாய் வரை வருமான வரிச்சலுகை கிடைத்து வருகிறது. இதுவரை மேலே சொன்ன விஷயங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு வந்தது. இந் நிலையில் இது ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு பி.எப், இன்சூரன்ஸ் பாலிஸி, வீட்டுக் கடனுக்கான அசலை திருப்பிச் செலுத்துதல். 
                                       <நன்றி :-ஒன் இந்தியா >

பட்ஜெட் எதிரொலி: விலை உயர்பவையும், விலை குறைபவையும்

மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக, சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கிறது. செல்பேசி, கம்ப்யூட்டர் விலை குறைகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின் விவரம்:
விலை உயர்பவை:

* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள்

* குளிர்பானம்

* இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள்

* எவர்சில்வர் பொருட்கள்.

* தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரக் கட்டணம்.

* உடைந்த வைரம்

* இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள்

* போர்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்

விலை குறைபவை:

* மொபைல் போன்கள்.

* கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்

* 19 இன்ச்களுக்கு குறைவான எல்.இ.டி. எல்.சி.டி. டிவி-க்கள்

* காலணிகள் விலை

* சோப்பு

* தீப்பெட்டிகள்

* லைப் மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகள்

* பிளாஸ்டிக் பொருள்கள்

* ஆடம்பர கற்கள்

* அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

* அச்சு விளம்பரங்களுக்கான கட்டணம்

* மின் புத்தகங்கள்

* ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்

* எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்

* ஸ்போர்ட்ஸ் உறைகள்

* பிராண்டட் பெட்ரோல்

* எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்

* டி.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்
                                <நன்றி :தி ஹிந்து >

ஒரு சில திட்டங்களை தவிர்த்து, பழைய ஆட்சியின் பல்லவியையே பாடிய ஜேட்லி

இன்றைய மத்திய பட்ஜெட்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த பத்தாண்டுகளில் பாடிய அதே பல்லவியை பாடினார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ஒரு சில அறிவிப்புகளை தவிர்த்து பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியான பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. கடந்த, காங்கிரஸ் தலைமையிலான அரசின் அனைத்து 10 பட்ஜெட்களிலும் தவறாமல் இடம் பெறுவது, வறுமை ஒழிப்பு, ஊரக மேம்பாடு, சாலை மேம்பாடு, சுகாதாரம், சுத்தம் என்ற வார்த்தைகள். ஆனால் இதை நிறைவேற்ற சொல்லிக் கொள்ளும் பெரிய திட்டம் எதையும் கொண்டு வரவில்லை
ஜேட்லியின் முதல் பட்ஜெட்டிலும் இதே வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் செயல் திட்டம் வரையறுக்கப்படவில்லை. எனவே, வழக்கம்போல காகித உரையாகத்தான் இது பார்க்கப்படுகிறது. எந்த திட்டத்தையுமே எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற விவரம் இல்லாதது மட்டுமின்றி, போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. அதே நேரம், வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டது பெரும்பான்மையோரால் பாராட்டப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி மீதான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதும், வீட்டுக் கடன் பெற்றோரை நிம்மதியடையச் செய்துள்ளது. கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட ரூ.2037 கோடி ஒரு பெரிய திட்டமாகும். நதிநீர் இணைப்பு குறித்து ஆய்வு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது நல்ல திட்டமாகும். மற்றபடி புதிய திட்டங்கள் எதுவுமில்லாமல், புதிய கோப்பையில் பரிமாறப்பட்ட பழைய ஒயினாகவே காட்சியளிக்கிறது மோடி அரசின் முதலாவது பட்ஜெட். மக்கள் விலைவாசி உயர்வால் பசியும் பட்டினியுமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வரிகளை குறைக்க இந்த நிதியை பயன்படுத்தியிருக்கலாம். லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில், திட்டம் அமைக்க ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கிய ஜெட்லி, சிலைக்கு 200 கோடியை ஒதுக்கியுள்ளார். மெட்ரோ திட்டத்தின் ஆய்வுக்கே அவர் ஒதுக்கிய நிதி போதாது.
                                   <நன்றி :- ஒன் இந்தியா >

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...