Monday, May 19, 2014
எல்லையை விரிவுபடுத்துவோம்
விருதுநகர் மாவட்டத்தில் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க தோழர்கள் ஒரு குடும்ப சுற்றுலாவாக கேரள மாநிலத்திற்கு கடந்த 14,15 தேதிகளில் சுமார் 153 பேர் மூன்று பேருந்துகளில் சென்று வந்தோம். நமது சங்கத்திற்கு இது ஒரு புதிய அனுபவம் ஆனதால் பல நடைமுறை சிக்கல்களை சந்தித்த போதிலும் நம் ஊழியர்களிடையே சங்க ஒருங்கிணைப்பை தாண்டி ஒரு குடும்ப ஒருங்கிணைப்பை பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதில் ஒரு வெற்றியை பெற்றோம் என்றால் மிகையல்ல. மாவட்ட சங்கம் சார்பாக பல போட்டிகளை நடத்தியபோது அனைவரும் பெரும் மகிழ்வோடு கலந்து கொண்டது சிறப்பான அம்சமாகும் .ஒரு சுற்றுலாவை எப்படி நடத்த வேண்டும், தவிர்க்க வேண்டியவை என்ன என்பதை ஒரு பாடமாக கற்று கொடுத்தது இந் நிகழ்ச்சி. நமது 8 கிளை செயலர்களில் தோழர் காதர் மொய்தீன் உட்பட 5 பேர் பங்கேற்றனர். தோழர் ஜெயபாண்டி, தோழர் முத்துராமலிங்கம், தோழர் சமுத்திரம், தோழர் சிங்காரவேல் ஆகியோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். மாவட்ட சங்க நிர்வாகிகளில் இளைய தோழர் அஷ்ரப்தீன், தோழர் மதிகண்ணன், தோழர் ராஜ்மோகன், தோழர் சந்திரசேகரன், தோழர் ரவீந்திரன், தோழர் ராஜாராம் மனோகரன் தோழர் K.R.கிருஷ்ணகுமார் ஆகியோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். நமது முன்னாள் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் மூத்த கணக்கு அதிகாரி தோழர் ராதாகிருஷ்ணன் இருவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Homage to Com. Moni Bose on his IV Death Anniversary
Comrade Moni Bose is one of the tallest leaders of the P&T Trade Union movement. His life is a continuous struggle and sacrifice for the cause of the P&T and Central Government employees. 19th May 2014 is the 4th death anniversary of this veteran leader.His memory is always an inspiration to the telecom workers and their movement.
Com. Moni Bose Zindabad !
Red Salute to Com. Moni Bose !
Saturday, May 17, 2014
தேர்தல் முடிவுகள் உணர்த்தும்திட்டவட்டமான செய்திகள்
உலகமே எதிர்பார்த்த 16வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் சில செய்திகளைத் திட்டவட்டமாக உணர்த்துகின்றன. வெளித்தோற்றத்தில் காங்கிரஸ், பாஜக அணிகளுக்கிடையேயான மோதல் போலத் தெரிந்தாலும், அடிப்படையில் இது நாட்டின் பொருளாதாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் பெருமுதலாளித்துவ அணிக்கும், உழைக்கும் வர்க்க அணிக்கும் இடையேயான போட்டிதான். வெவ்வேறு கட்சிகளாக நின்றாலும், உண்மையில் அந்த மகா சுரண்டல் சக்திகளுக்கு சேவை செய்வதில் முதல் படிக்கட்டில் இருப்பது யார்என்ற போட்டிதான் அந்த அணிகளின் கட்சிகளுக்கிடையே நடந்தது. உழைக்கும் மக்களுக்காக இடதுசாரி கட்சிகள் களம் கண்டன.எனினும் காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள் பாஜகவுக்கு உதவியுள்ளன என்பதே உண்மை. “பொருளாதார நிபுணர்” மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் தொண்டாற்றுவதே லட்சியமாகத் திணித்த பொருளாதாரக் கொள்கைகளின் நாசகர விளைவுகளால் எளிய மக்கள் பெருந்துயரங்களையே சந்திக்க வேண்டியதாயிற்று. குறையாத விலைவாசி, பெருகாத வேலைவாய்ப்பு, ஓயாத தொழில் நெருக்கடி, மீளாத விவசாய வீழ்ச்சி, நியாயமற்ற கல்வி வியாபாரம் என பல சுமைகளை சுமக்க வேண்டியதாயிற்று. அந்த அதிருப்திகளை பாஜக அறுவடை செய்யும் என்ற எச்சரிக்கைகளையும் காங்கிரஸ் புறக்கணித்தது.நரேந்திர மோடி என்ற தனிமனிதர் அனைத்தையும் மாற்றிப்போட அவதாரம் எடுத்திருப்பதான மாயையை அதே கார்ப்பரேட் சக்திகள் திட்டமிட்ட முறையில் தொடர்ந்து உருவாக்கி வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், மன்மோகனை பிரதமராக்கிய நோக்கம் ஓரளவுக்கு நிறை வேறியிருக்கிறது- பொதுத்துறைகள் சீர்குலைப்பு, பெட்ரோலிய விலை நிர்ணயத்தை சந்தை சக்திகளிடமே விடுவது, அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கதவு திறப்பு, ஓய்வூதியத்தைப் பங்குச் சூதாட்டமாக்குவதற்கான வழி போன்ற சில அடிப்படை யான ஏற்பாடுகளை ஐ.மு.கூ. அரசு விசுவாச மாகச் செய்துகொடுத்தது.இதையடுத்து, மேன்மேலும் தங்குதடையற்ற சுரண்டலுக்கு ஏதுவாக, மக்களின் ஆவேசத்தைத்தை திசை திருப்பக்கூடியவராக மோடியை முன்னிறுத்தினார்கள். கார்ப்பரேட் உலகம்தான் இதைத் தீர்மானிக்கிறது என்பதற்கு ஒரே சான்று, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என வெளியிடத் தொடங்கியதிலிருந்தே பங்குச் சந்தைப் புள்ளி மிக உச்சத்திற்குச் சென்றதுதான். முன்பு மன்மோகன் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரத்திலும் இதுதான் நிகழ்ந்தது. உலகின் பல பகுதிகளில் மதவாதத்தையும் இனவாதத்தையும் முன்னிலைப்படுத்துகிற வலதுசாரி சக்திகள் அரசியலில் ஆதிக்கம் பெறுகின்றன. அதன் பிரதிபலிப்பாகவே இந்தியாவில் நிகழ்வதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.மதச்சார்பின்மை, சமூகநீதி, பாலின சமத்துவம், கருத்துச் சுதந்திரம், தொழிலாளர் நலன்கள்,சிறு தொழில்கள் பாதுகாப்பு, உறுதியான வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என அனைத்துத் தளங்களிலும் நெடும் போராட்டங்கள் காத்திருக்கின்றன. மக்கள் இயக்கங்களுக்கு - குறிப்பாக இடதுசாரிகளுக்கு - வரலாறு விடுத்துள்ள கடமை இது. உண்மைகளை மக்கள் முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டிய பொறுப்போடும் இணைகிற கடமை அது.
<நன்றி : தீக்கதிர் >
Tuesday, May 13, 2014
2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்
நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட செயற்குழு தோழர் சமுத்திரகனி, மாவட்ட தலைவர் தலைமையில் சிவகாசியில் நடைபெற்றது. தோழர் M.முத்துசாமி, மாவட்ட துணைச்செயலர் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க, தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார். நமது மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளில் பெரும் தேக்கம் உள்ளதை அவர் சுட்டி காட்டினார். ஸ்தலமட்ட பிரச்சனைகளை அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் செயற்குழுவில் சுட்டி காட்டினர். மாவட்ட செயலர் சமர்ப்பித்த அறிக்கையின் மீது விவாதம் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய மாநாட்டிற்கு சார்பாளர்களாக தோழர் ரவீந்திரன், தோழர் சமுத்திரகனி, தோழர் முத்துராமலிங்கம், TTA ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பார்வை யாளர்களாக 8 தோழர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களை அனுமதிப்பதில் மாநில மற்றும் அகில இந்திய சங்கங்கள் காட்டும் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும். லாங்ஸ்டே மாறுதல்கள் பற்றி ஒரு முறை நிர்வாகம் நமது சங்கத்தையும், NFTE சங்கத்தையும் அழைத்து விவாதித்துள்ளது. மீண்டும் விவாதம் 16-5-2014 அன்று நடைபெற உள்ளது. RGB தேர்தலில் 2 இடங்களையும் நாம் வெற்றி பெற்றதற்கு அனைத்து நிர்வாகிகளையும் மாவட்ட சங்கம் மனதார பாராட்டியது. 30-8-2014 அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சிவகாசியில் தோழர் செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பணி ஒயவு பாராட்டு விழாவோடு இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழுவிற்கு வந்த அனைவருக்கும் விருந்து தந்து உபசரித்த மாவட்ட உதவி தலைவர் தோழர் G .ராஜு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. 31-05-2014 அன்று பணி ஓய்வு பெற உள்ள தோழர் ராஜாகனி அவர்கள் மாவட்ட சங்கத்தால் கௌரவிக்கபட்டார்.வொர்க் கமிட்டி பொறுப்பில் இருந்து தோழர் சந்திரசேகரன் விடுவிக்கபட்டு தோழர் U .B .உதயகுமார் ,SSS அவர்கள் நியமிக்க படுவதற்கு மாவட்ட செயற்குழுவில் உரிய ஒப்புதல் பெறப்பட்டது .
Thursday, May 8, 2014
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...




























