Wednesday, January 8, 2014

BSNL awaits approval for Rs 3,000 cr network gear purchase

செய்தி படிக்க : Click Here

மத்திய சங்க செய்திகள்

மத்திய சங்க செய்திகள் விசயமாக  மாநில சங்க சுற்றறிக்கை படிக்க : Click Here

பொதுச் செயலரின் பணி ஓய்வு பாராட்டு விழாவில்...

  







      07-01-2014 சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் செயலர் தோழர் அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு நமது மாவட்டத்தில் இருந்து 6 தோழியர்கள், 6 ஒப்பந்த ஊழியர்கள், 1 அதிகாரி உட்பட மொத்தம் 61 பேர் கலந்து கொண்டனர்.
          திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஊழியர்களைத் திரட்டிய அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறது.
          நடைபெற்ற கருத்தரங்கத்தில் நமது பி எஸ் என் எல் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் திரு A.N.ராய், இயக்குனர் (மனித வளம்), திரு அஸ்ரப்கான், தலைமை பொது மேலாளர், தமிழகம், பாலசுப்ரமணியம், பொது மேலாளர், சென்னை வட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
          திரு A.N.ராய், இயக்குனர் (மனிதவளம்), அவர்கள் பேசியபோது பிஎஸ்என்எல் ஊழியர்கள் வாடிக்கையாளர் அனைவருக்கும் திருப்தியான சேவை செய்ய வேண்டியதின் அவசியத்தையும் நிறுவனத்தை மீட்டு எடுக்க வேலையின் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் கூறினார்.
          நமது பொது செயலர் பேசும் போது வேலை கலாச்சாரம் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியத்தை பல்வேறு உதாரணங்களுடன் சுட்டி காட்டினார்.
          பின்னர் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது பொது செயலரின் பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற தொழிற் சங்க பணிகள் பற்றி நமது தலைவர்கள் தோழர்கள் V.A.N.நம்பூதிரி, CITU அகில இந்திய தலைவர் A.K.பத்மநாபன், தமிழ் மாநில செயலர் செல்லப்பா, சென்னை தொலைபேசி மாநில செயலர் கோவிந்தராஜன் மற்றும் P.சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தோழர் M.முருகையா, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர்,   SNEA கோபிநாதன், வள்ளிநாயகம் (FNTO), சேவா BSNL ரவீந்திரன், NFTE சங்க R.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.
          நமது பொது செயலர்  பயணித்த தடங்களில் நாம் அனைவரும் பயணம் செய்வதே நாம் அவருக்கு  அளிக்கும் பாராட்டுச் செய்தியாகும்.

BSNL Revenue Growth Up 5% in TN Circle

செய்தி படிக்க : Click Here

BSNL, MTNL could get Rs 12,800 cr refund after govt meeting on Jan 9

 செய்தி படிக்க : Click Here

Monday, January 6, 2014

விருதுநகர் மாவட்ட ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு

          ‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை’  என்பதற்கினங்க ஆறு நாள் உடல் உழைப்பு சார்ந்த வேலைக்குப் பின்னர் ஏழாம்நாள் ஓய்வு என்பதனை மாற்றி, ஆறுநாட்கள் தனக்கான/தன் குடும்பத்திறகான உழைப்பு... ஏழாம் நாள் தான் சார்ந்த வர்க்கத்திற்கான பணி என்ற வகையில் இந்த ஆண்டின் முதல் ஞாயிறான ஜனவரி  5ஆம் நாள் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
          கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார்.மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வேல்ச்சாமி தனது தொடக்க உரையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்யத அவசியத்தையும், கிளைப் பொருப்பாளர்கள் அனைவருக்கம் தொழிற்சங்க வகுப்ப நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
          நிதிநிலையை மாவட்டப் பொருளாளர் மாரிமுத்து முன்வைத்து நிதிநிலையைச் சீர்படுத்த வேண்டியதில் தோழர்களின் பங்கை வலியுறுத்தினார். தோழர் ஜோதி பெண்கள் பயிலரங்க அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். வாழ்த்துரையாற்றிய BSNLEU  மாவட்ட துணைச் செயலர் தோழர் முத்துச்சாமி அமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தோழர் அபியமன்யு அவர்களின் பாராட்டுவிழாவில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
          தொகுப்புரை வழங்கிய மாவட்டச் செயலர் தோழர் முனியசாமி, 6 கிளைகளின் செயல்பாடுகளின் மீதான தன்னுடைய பார்வையாக கிளைக்கூட்டக்ளை முழுமையாக நடத்துவது, சந்தா வசூலை முறைப்படுத்துவது, போராட்டக்ளின் கலந்து கொள்வது போன்ற விஷயங்களின் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். EPF, ESI விஷயக்களை ஒழுங்குபடுத்துவதற்காக பெறப்பட்ட படிவத்தில் இருக்கும் குளறுபடிகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றார். பிப்ரவரிக்குப் பின்னர் பிரதி மாதம் 10ஆம் தேதிக்குள் சம்பளம் உத்தரவாதப்படுத்தப்படும். இல்லையெனில் தலைநகர் நோக்கிய போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
          இறுதியாக விருதுநகர் கிளைச் செயலர் தோழர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

நாடுமுழுவதும் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம்

        நாடுமுழுவதும் வங்கித்துறை ஊழியர்கள் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளதாவது:-
வங்கித்துறையில் வெளிநாட்டு வங்கிகளை அனுமதிக்க கூடாது, வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாகவும் இந்த வேலைநிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மட்டுமின்றி மண்டல கிராம வங்கிகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் நாடுமுழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 50 ஆயிரம் கிளைகளில் உள்ள சுமார் 8 லட்சம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
                   <நன்றி :- தினமணி >

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...