Monday, January 6, 2014

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு

          தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு- செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம் ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும்,சிக்கலையும் ற்படுத்தியுள்ளது.ஐகோர்ட் நீதிபதிகள் பிரதீப்நந்த்ரோஜாக், காமேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இது தொடர்பான மனுவை விசாரித்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர். நாங்கள் தனியார் கம்பெனிகள், எங்களின் கணக்கை பார்க்க இந்த ஆணையத்திற்கு உரிமை கிடையாது, ஸ்பெக்ட்ரம் என்பது நாங்கள் விலைக்கு வாங்கவில்லை, இதற்கான லைசென்ஸ்தான் பெற்றுள்ளோம் என்று தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எடுத்து வைத்த வாதத்தை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. இதன்படி மத்திய தணிக்கை துறை, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணக்கை ஆய்வு செய்ய முடியும். மேலும் தங்களின் வரவு செலவுகளை முழுமையாக இந்த ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் அதிர்ந்து போய் இருக்கின்றன.
                            < நன்றி : தினமலர் >

Saturday, January 4, 2014

கிளை செயலர்கள் கூட்டம்

         இன்று (04-01-2014) நமது சங்க கிளை செயலர்கள் கூட்டம் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . தோழர் M .முத்துசாமி அவர்கள் தலைமை தாங்கினார் .மாவட்ட மகாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் ஒப்புதல் பெறப்பட்டது .மாவட்ட மகாநாட்டின் பொது அரங்க நிகழ்ச்சி நடைபெறும் மார்ச் 6 ஆம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் பெருவாரியாக  கலந்து கொள்ள முடிவு செய்யபட்டுள்ளது 07-01-2014 அன்று நடைபெற உள்ள கருத்தரங்கம் மற்றும் நமது பொது செயலர் தோழர் .P .அபிமன்யு அவர்களின் பாராட்டு விழாவிற்கு 50 தோழர்கள் கலந்து கொள்வது என்பது உறுதி செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு பஸ் சிவகாசி பழைய தொலைபேசி நிலையத்தில் இருந்து இரவு 1000 மணிக்கு கிளம்பும்.ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்கள் உரிய நேரத்தில் சிவகாசிக்கு வந்து விட வேண்டும் .விருதுநகர் , சாத்தூர் மற்றும் அருப்புகோட்டை தோழர்கள் 1100 மணி அளவில் GM அலுவலக வளாகத்திற்கு வந்து விட வேண்டும் . பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நமது மாவட்ட செயற்குழு நடைபெறும் .அக் கூட்டத்தில் கிளை செயலர்கள் தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கோட்டாவை மாவட்ட சங்கத்திடம் செலுத்தி விட வேண்டும், தோழர் வெங்கடப்பன் நன்றி கூற கிளை செயலர் கூட்டம் இனிதே முடிவுற்றது .

Friday, January 3, 2014

மத்திய சங்க செய்திகள்

        டைரக்டர் (மனிதவளம் ) திரு .A .N .ராய் அவர்களுடன் நமது பொது செயலர் இன்று பேசிய போது  18-10-2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நிர்வாகத்துடன்  உடன்பாடு ஏற்பட்ட பிரச்சனைகளில்  தீர்வில்  எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டி கட்டியுள்ளார் .
  01-01-2007 க்கு பிறகு பணி நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனையிலும் தீர்வில் கடும் கால தாமதம் ஏற்படுவதை கடுமையாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் .இது விசயமாக நமது மத்திய சங்கம் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம் படிக்க :Click Here
   மார்ச்-2014 இறுதிக்குள் 1800 க்கும் மேற்பட்ட  Officiating JTO க்களின் பிரச்னை தீர்வாகும் என நமது மத்திய சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது .இப் பிரச்சனையை நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் எழுப்பி வருகிறது .
              TTA கேடர்க்கான புதிய ஆளெடுப்பு விதிகளை நிர்வாகம் இறுதி செய்து விட்டது .10+2 தகுதி அல்லாத ஊழியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறுபவர்களை போட்டி தேர்வில் அனுமதிப்பது என்ற நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை .இது விசயமாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் இன்று பேசிய போது குறைந்த பட்சம் ஒரு தகுதி தேர்வை மட்டுமாறு நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது நிர்வாகம் இந்த பிரச்னை விசயமாக நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் நடத்துவதாக உறுதி கூறி உள்ளார்.அதே போல் JTO ஆளெடுப்பு விதிகளை இறுதி செய்யும் போது தேர்வில் பங்கேற்க சேவைக்கால வரம்பை குறைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளார் .

Wednesday, January 1, 2014

புத்தாண்டு இலட்சியம்


          புத்தாண்டு பிறந்து விட்டது. இன்றைய சூழலில்தான் அனைத்து தொழிற்சங்கங்களும் அசோசியேஷன்களும் நமது பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாத்து வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கத்தின் பொதுத்துறைக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், நாம் நமது சேவைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல் வேலை கலாச்சாரத்தை மேம்படுத்துவது BSNLஐ காப்பாற்ற மிகவும் அவசியம். நாம் அனைவரும் நமது வேலை கலாச்சாரத்தை இன்னும மேம்படுத்துவோம் என இந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டுத் தீர்மானமாக கொள்வோம்.

BSNLEU சாத்தூர் கிளையின் புதிய நிர்வாகிகள்

BSNLEU - SATTUR

28-12-2013 அன்று சாத்தூரில் நடைபெற்ற கிளை மாநாட்டில்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்

தலைவர்                        : தோழர் E.கனகாம்பரம், TSO
உப தலைவர்                   : தோழர் R.வெங்கடாசலபதி, STS

செயலர்                         : தோழர் H.காதர் மொகைதீன், TM
துணைச் செயலர்கள்           : தோழர் N.கணபதிராமன், STS
                                    தோழர் N.கருப்பசாமி, STM

பொருளாளர்                    : தோழர் T.கலையரசன், TM
உதவி பொருளாளர்            : தோழர் J.ஜெயஜோதி, TOA

அமைப்புச் செயலர்கள்         : தோழர் M.ஜெயசந்திரன், TM
                                    தோழர் S.தனலட்சுமி, STS

தணிக்கையாளராக தோழர் S.குருநாதன் நியமிக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...