Sunday, September 15, 2013

ராஜபாளையம் கிளை 10 வது மாநாடு

          ராஜபாளையம் கிளை சங்கத்தின் 10வது  மாநாடு 15-09-2013 அன்று  தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் P.தர்மராஜ்  தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர்Cசெல்வராஜ் TTA  அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க தோழர் T.முத்துராமலிங்கம், TTA அஞ்சலி தீர்மானம் வாசிக்க, கிளைச்செயலர் தோழர் T.அனவரதம் வரவேற்புரை நல்க கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்கி  வைத்து  உரையாற்றினார்.
          தோழர்கள் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர், தோழர்  M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          தோழர் M முருகையா   மாநில உதவி செயலர்  சிறப்புரை நிகழ்த்தினார்.தோழர்கள் T.அனவரதம், T.முத்துராமலிங்கம், TTA, P.சிவஞானம்   ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டம்  முழுவதும் இருந்து திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
                           <புகைப்பட தொகுப்பு>

Saturday, September 14, 2013

நானே கேள்வி... நானே பதில்!


இந்திய அரசியல் மேல் நம்பிக்கை வைப்பதற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்களேன்...!
திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க் கார்தான் நாட்டின் மிகவும் ஏழையான முதலமைச்சர். இவருடைய வங்கி இருப்பு 6,500 ரூபாய் மட்டுமே. சொந்த வீடு கிடையாது. இவரது மனைவி சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணிக்கிறார். மாணிக், தன்னுடைய முதலமைச்சர் சம்பளத்தை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் தரும் மாதம் 5,000 ரூபாயில் தான் குடும் பம் நடத்துகிறார். இவரின் நேர்மை, எளிமை காரணமாக, தொடர்ந்து நான்காவது முறையாக திரிபுராவின் முதல்வராகத்  தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர் களும் பாராட்டும் இவரது நேர்மை மீது நம்பிக்கை வையுங்கள்.!
- கல்லிடை ஒய்.கே.சேகர் குஜராத்.நன்றி - ஆனந்த விகடன்(4.9.13)

Friday, September 13, 2013

உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் பிரயோகம்! தேசங்களின் அரஜாகம்! ஒரு வரலாற்றுப் பார்வை!

அமெரிக்காவும் அதன் ஜால்ரா அல்லது கூட்டணி நாடுகளும் எப்போதும் ரசாயன் ஆயுதங்களை உற்பத்தி செய்வதிலும் பிர்யோகிப்பதிலும் ஒரு போதும் தயங்கியதில்லை. ஆனால் தனக்கு வேண்டாத நாடுகள் இந்த ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா எப்பவுமே மூக்கால் அழுது கொண்டிருக்கும்.ரசாயன ஆயுதங்கள் பிரயோகம் என்பது கி.மு. 400 ஆம் ஆண்டு முதல் பழமையானது.கிமு 400ஆம் ஆண்டில் ஸ்பார்ட்டன் கிரேக்கப்படை எதிரிகள் மீது கந்தகப் புகையை பிரயோகம் செய்தது. சாவு விவரம் தெரியவில்லை.கிபி.256: தற்போதைய சிரியாவில் குறிப்பிட்ட இந்த பண்டைய ஆண்டில் சசானிய பெர்சிய முடியாட்சி சுரங்கத்தில் பதுங்கியிருந்த ரோமானிய வீரர்கள் மீது விஷ புகையை பிரயோகித்துள்ளனர்.1346:கிரிமியாவில் இத்தாலி வணிக குடியேற்றவாதிகள் மீது பிளேக் நோய் தொற்றிய பிணங்களை கொண்டு போடப்பட்டுள்ளது.1500களில், ஸ்பானிய அராஜக காலனிய காலக்கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குடிமக்கள் மீது உயிரியல் போர் தொடுத்து லட்சக்கணக்கானோரை அழித்தது.1763 ஆம் ஆண்டு போன்டியாக் போராளிகள் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் ராணுவ தலைமை ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட் அம்மை நோய் ஏற்படுத்தும் ஒரு வித ரசாயனம் தோய்க்கப்பட்ட போர்வைகளை அந்த நாட்டு உண்மையான குடிமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தார். ஃபோர்ட் பிட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த கொடூரமான போர்வை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.1789ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவின் பூர்வ குடிகளை விரட்டியடிக்க அம்மை நோயை பிரிட்டிஷார் பரப்பியதாக கூறப்படுவதுண்டு.1845ஆம் ஆண்டு நியூசீலாந்தில் மயோரி போராளிகளை அடக்க நச்சு வாயுவை பிரிட்டன் படைகள் பிரயோகம் செய்துள்ளனர்.1907 ஆம் ஆண்டு ரசாயன ஆயுதங்கள் ஹேக் மாநாட்டில் தடை செய்யப்பட்டபோது அமெரிக்கா அதில் பங்கேற்கவில்லை.1914- 18 - முதலாம் உலகப் போர் துவங்கியது. ஒய்பிரஸ் போரில் ஜெர்மானியப்படை குளோரின் வாய்வை எதிரிகள் மீது பிரயோகம் செய்தது. இதில் 85,000 பேர் மரணமடைந்தனர். சுமார் 12 லட்சம் பேர் இனம் புரியாத நோயிலும், காயத்துடனும் வாழ்ந்தனர்.1919- 21: ரஷ்ய சிவில் யுத்தத்தில் 'புரட்சிகர போல்ஷேவிக் சோஷலிஸ்ட்கள்' போராளிகள் மீது நச்சு வாயுவை பிரயோகித்தனர். ராயல் விமானப்படை போல்ஷேவிக்குகள் மீது இதே போன்ற தாக்குதலை நடத்தினர்.1920: ஸ்பானியர்களின் மொராக்கோவில் பிரென்ச் மற்றும் ஸ்பெயின் படைகள் போராளிகள் மீது மஸ்டர்ட் வாயுவை பிரயோகம் செய்துள்ளனர்.அதேபோல் இதே ஆண்டில் இராக்கின் அராபிய மற்றும் குர்திஷ் விடுதலை போராளிகள் மீது ரசாயன ஆயுதங்களை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ள பிரிட்டன் அறிவுறுத்தியது. 'நாகரிகமற்ற இனக்குழுகள்" மீது நச்சு வாயுவை செலுத்த பிரிட்டன் 'அரசியல் மேதை' வின்ஸ்டன் சர்ச்சில் 'பலமாக' பரிந்துரை செய்தார்.1935: எத்தியோப்பியாவை ஆக்ரமிக்கத் தொடங்கிய இத்தாலி மஸ்டர்ட் வாயுவை செலுத்தியது.1937: சீனாவை ஆக்ரமிக்க ஜப்பான் படைகள் உள் நுழைந்தது.சீனாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் ரசாயன ஆயுதங்களையும் பிற தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தியது.1941:அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தலையிட்டது. அதிபர் ரூஸ்வெல்ட் நாங்கள் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்றார். 1945ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் மீது வதை முகாமில் சைக்ளன் - பி என்ற ரசாயனப்புகையை செலுத்தினான். ஜப்பானிய ராணுவமும் இதனை பயன்படுத்தியது.1947: அமெரிக்கா நோய் நுண்மம் அடங்கிய போர் ஆயுதங்களை வைத்திருந்தது. அதிபர் ட்ரூமன் ஜெனீவா உடன்படிக்கையிலிருந்து விலகினார்.1949: அமெரிக்க நகரங்களில் ராணுவம் உயிரியல் ஆயுதங்களை ரகசியமாக பரிசோதனை செய்தது.1951: அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவில் காளான் ஆயுதங்களைக் கொண்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கடுமையாக விரட்டி அடித்தனர்.1952: ஜெர்மானிய கெமிக்கல் ஆயுத ஆய்வாளர் வால்டர் ஷ்ரெய்பர் டெக்சாசில் பணியாற்றி வந்தார். இவர்தான் நாஜி வதைமுகாமின் பிரதான காரணகர்த்தா என்பது தெரிந்தவுடன் அர்ஜென்டீனாவுக்கு தப்பி ஓடினார்.1956:அமெரிக்க ராணுவ மேனுவல் வெளிப்படையாக உயிர்-ரசாயன போர் முறை தடை செய்யப்படவில்லை என்று அறிவித்தது. ஜெரால்ட் ஃபோர்ட் இது குறித்து கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வர துணையாக இருந்தார். அதாவது அமெரிக்கா ரசாயன் ஆயுதங்களை முதலில் பிரயோகிக்க அதாரிட்டி வழங்கப்பட்டது.1959:முதலில் ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவில் தோற்கடிக்கப்பட்டது.1961:அதிபர் கென்னடி நிர்வாகம் ரசாயன ஆயுதங்களுக்கான பட்ஜெட்டை 75 மில்லியன் டாலர்களில் இருந்து 330 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது.1962: கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அமெரிக்க விமானங்களில் ரசாயன ஆயுதங்கள் நிரப்பப்பட்டன.1968:அமெரிக்க ராணுவ தலமிப்பீடமான பென்டகன் ஆர்பாட்டக்காரர்கள் மீது ரசாயன பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று கோரியது. மேஜர் ஜெனரல் மெடாரிஸ் அப்போது குடிமக்கள் ஆர்பாட்டம் செய்யும்போது ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பது இரண்டு விதத்தில் நன்மை பயக்கும் என்றார். ஒன்று அவர்களை பயமுறுத்துவது மற்றொன்று ரசாயன ஆயுதங்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் அது உதவும் என்று விசித்திர யோசனை ஒன்றை முன்வைத்தார்.1969: உத்தா ரசாயன ஆயுதங்கள் விபத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி.1971: வியடாம் போரின்போது வியடாமில் சுமார் 6 லட்சம் பேருக்கு சோறு போட்ட வயல்வெளிகளை ரசாயன ஆயுதம் கொண்டு அழித்து ஒழித்தது அமெரிக்கப் படை.தெற்கு வியட்னாமிய போராளிகள் மீது வெள்ளை பாஸ்பரஸ் கிரனேட்கள் பிரயோக்கப்பட்டன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக உருவான பாரா மிலிட்டரி படைகளிடம் அமெரிக்கா பன்றிக் காய்ச்சல் வைரஸ்களை கொடுத்து கியூபாவில் பரப்ப சதி செய்ததாக செய்தித்தாள் அறிக்கை ஒன்று தெரிவித்தது.1979: ஜிம்பாவே விடுதலைப்போரின்போது கடைசி கட்டத்தில் ருடீசியாவின் வெள்ளை அரசு கறுப்பரின மக்கள் மீது ஆந்த்ராக்ஸ் என்ற கொடிய நோய் கிருமியை பரப்பியது.1984: போபால் விஷ வாயு துன்பம் நிகழ்ந்தது. காரணம் அமெரிக்க ரசாயன் நிறுவனம்.1985: ஈராக்கிற்கு அமெரிக்கா ஏகப்பட்ட ரசாயன ஆயுதங்களை வழங்கியது.இப்படியே இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது வரை கூறிகொண்டே போகலாம்.கடைசியாக சிரியாவில் போராளிக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பிரயோக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.சிரியா போன்ற நாடுகளுக்கு ரசாயன் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய முடியுமா? உலகின் பணக்கார, ராணுவ பலம் மிக்க நாடுகள் அவ்வப்போது வியாபாரம் செய்த்தன் விளவிதான் இன்று இந்த கொடூரம் கழ்கிறது.இப்படியிருக்கையில், இன்று ஏதோ ரசாயன ஆயுதமா? அய்யய்யோ பயங்கரம்! அழித்து விடுவோம் என்றெல்லாம் அமெரிக்கா சூளுரைப்பது ஏன்? 
                                                                                        நன்றி :-வெப்துனியா 

Thursday, September 12, 2013

தகவல்கள்

பரிவு அடிப்படையில் பணி நியமனம் கோரி ஆகஸ்ட் 2012 வரை நிலுவையில் உள்ளவைகளை "ஹை பவர் கமிட்டி" இறுதி முடிவு செய்து விட்டதாக  பொது மேலாளர் (ESTT ) அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களிடம் தெரிவித்து உள்ளார் .    
பிஎஸ்என்எல் ஸ்போர்ட்ஸ் போர்டு கூட்டத்தை 2012 இல் இருந்து நடை பெறாமல் உள்ளதை நமது துணை  பொது செயலர் சுட்டி காட்டி உள்ளார் .பொது மேலாளர் (ADMN ) அவர்கள் கூட்டத்தை நடத்த உறுதி அளித்துள்ளார் . 
78.2 % IDA இணைப்பு பென்ஷன்தாரர்களுக்கு வழங்க பட வேண்டும் என வலியுறுத்தி நமது தலைவர் தோழர் V A N .நம்பூதிரி அவர்கள் புதிதாக வந்துள்ள DOT இணை  உறுப்பினர்  Ms. Annie Moraes அவர்களை சந்தித்து உள்ளார் .

பேச்சுவார்த்தை

BSNL நிர்வாகம் UNITED   FORUM சார்பாக கொடுத்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி பேச்சுவார்த்தைக்கு  நமது சங்கத்தை 17 ஆம் தேதி அழைத்து உள்ளது .நிர்வாகத்தின் கடிதம் படிக்க :-CLICK HERE

மகிழ்ச்சியான நாடுகள்; இந்தியாவுக்கு 111வது இடம்

செய்தி படிக்க :- CLICK HERE

Refund approved for BSNL, MTNL to return BWA spectrum

A Group of Ministers (GoM) on revival of BSNL and MTNL today decided to refund the money paid by the state-run players for surrendering Broadband Wireless Access (BWA) spectrum worth more than Rs 11,000 crore.The GoM, headed by Finance Minister P Chidambaram, also took a decision on providing pension to MTNL employees, which is likely to cost about Rs 570 crore a year.“The Group of Ministers took firm decisions, one in relation to pension of MTNL employees, the second in relation to the spectrum that was allocated both to BSNL and MTNL in the 2.5 GHz band and one other small issue,” the Telecom Minister, Kapil Sibal said here.He said the decision will now be taken to the Cabinet for approval.As per BSNL, there is no business case at such a high cost of spectrum. The government had given the spectrum to both companies, which paid auction prices for the airwaves.“I think that having resolved these issues and if the Cabinet approves, I think that both BSNL and MTNL will be on course (to profitability),” Sibal said.MTNL shares surged 19.92 per cent to Rs 15.35 at the close on the BSE today.Both MTNL and BSNL had requested the government to refund the amount they paid in 2010 for BWA spectrum, used to provide 4G data services.According to sources, BSNL has sought Rs 6,724.51 crore for return of BWA spectrum fee while the amount for MTNL was about Rs 5,700 crore.With regard to the pension liability of MTNL staff, which will cost Rs 570 crore annually, the state-run company will pay Rs 170 crore while the rest will be paid by the government.MTNL’s net loss widened to Rs 5,321.12 crore in the financial year 2012-13 from Rs 4,109.78 crore in FY’12.Sources said BSNL’s losses are expected to be around Rs 8,198 crore for the last financial year.High wage costs had been a major reason for these companies running into losses.Overall, salary and pension expenses of MTNL employees form 103 per cent of revenue while for BSNL the same stands at 49 per cent.The members of GoM include Sibal, Commerce and Industry Minister Anand Sharma, Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia, Information and Broadcasting Minister Manish Tewari and Minister of State in the Prime Minister’s Office V Narayanasamy
                                                               courtesy:- BUSINESS LINE

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...