புதிய அங்கீகார விதிகளை FNTO சங்கம் கடுமையாக எதிர்த்து உள்ளது. புதிய அங்கீகார விதிகளை திரும்ப பெற வேண்டும் என அச்சங்கம் கடிதம் கொடுத்துள்ளது. புதிய அங்கீகார விதிகள் இடது தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக உள்ளதாக அச்சங்கம் கூறி உள்ளது வேடிக்கையானது .
Monday, January 7, 2013
உயரப்போகும் போகும் வருமான வரி
எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் உள்பட அனைத்து தரப்பினர் மீதும் வருமான வரி கடுமையாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. அதிக வருமானம் உடைய பிரிவினர் மீது கடுமையாக வரி விதிக்கப்படும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் கூறியிருப்பதன் மூலம் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது.பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் அவர் ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன், வருமானவரி முறையை இன்னும் வலுப்படுத்த அரசு தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார். வருமான வரி விகிதத்திற்கு மேலாக, சர்ச்சார்ஜ் என்ற பெயரில் கூடுதலாக வரிவிதிக்க திட்டமிட்டுவருவதாக தெரிவித்த அவர், கூடுதலான வருமானம் கொண்ட மக்கள் கூடுதலாக வரி செலுத்த தயாராகிக் கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டார். இந்தியாவில் மூன்று விதமாக வருமான வரி விகிதங்கள் அமலில்உள்ளன. 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற வீதங்களில் வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த விகிதங்களை 1997ல் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வரையறை செய்தார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்பது நடுத்தர மக்களின் பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் அத்தகைய அறிவிப்பு இருக்காது என்பது மட்டுமல்ல; வருமான வரி விகிதம் கடுமையாக்கப்படும் என்பது ரங்கராஜனின் பேட்டி மூலம் தெரியவந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சி.ரங்கராஜன் கூறியுள்ளார். பொதுச்செலவினங்களை பெரிய அளவிற்கு குறைக்க வேண்டியுள்ளது என்று கூறிய அவர், வருவாயை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் செலவினத்தை குறைக்க வேண்டுமானால் பல்வேறு வடிவங்களில் அளிக்கப்பட்டுவரும் மானியங்களை வெட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.2013-14 பட்ஜெட் எந்த திசைவழியில் அமையும் என்பதற்கு ரங்கராஜனின் இந்தப்பேட்டியே முன்னோட்டம் என பொருளாதார நோக்கர்கள் கூறுகின்றனர்.
நன்றி :-தீக்கதிர்
தோழர் O.P.குப்தா மறைவிற்கு இரங்கல்...
தபால் தந்தி தொழிற்சங்க முன்னணி தலைவர்களில் ஒருவரும், NFTE (BSNL) சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான தோழர் O.P.குப்தா இன்று (06.01.2013) இரவு 8மணி அளவில் மருத்துவ மனையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சக தோழர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறோம்.
Saturday, January 5, 2013
பணி ஓய்வுப் பாராட்டு
இன்று நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் 31-01-2013 அன்று பணி ஓய்வு பெற உள்ள திரு சொக்கலிங்கம், DGM (ADMN ) அவர்களுக்கு மூத்த தோழர் M.பெருமாள்சாமி அவர்கள் சால்வை அணிவித்தார். தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலர் BSNLEU சங்கம் சார்பாக நினைவுப் பரிசை வழங்கினார்.திரு சொக்கலிங்கம் அவர்களை வாழ்த்தி தோழர் சமுத்திரகனி, மாவட்ட தலைவர் , தோழர் R.ஜெயக்குமார், கிளை செயலர், அருப்புகோட்டை,தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர்,தோழர் T.ஜெபக்குமார், TEPU, தோழர் M.S.இளமாறன், கிளை செயலர், GM அலுவலகம்,தோழர் H.காதர் மொய்தீன்,சாத்தூர்,தோழர் A.ஜெயபாண்டியன், சிவகாசி ஆகியோர் பேசினர் .
Friday, January 4, 2013
சரிபார்ப்பு தேர்தல்
6ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது.
மனு தாக்கல் :- 11-02-3013
மனுவை திரும்ப பெற இறுதி நாள் :- 15-02-2013
தேர்தல் நாள் :- 16-04-2013
வாக்கு எண்ணிக்கை :- 18-04-2013
தேர்தல் முடிவு அறிவிப்பு :- 18-04-2013
மனு தாக்கல் :- 11-02-3013
மனுவை திரும்ப பெற இறுதி நாள் :- 15-02-2013
தேர்தல் நாள் :- 16-04-2013
வாக்கு எண்ணிக்கை :- 18-04-2013
தேர்தல் முடிவு அறிவிப்பு :- 18-04-2013
5 ஆவது வெற்றி மகுடத்தை BSNLEU சங்கத்திற்கு சூட்டத் தயாராவோம்.
Thursday, January 3, 2013
போக்குவரத்து படி
புதிய பதவி உயர்வு பெறும்பொழுது பதவி உயர்வுத் தேதியிலிருந்து போக்குவரத்துப்படி வழங்கவேண்டும் என்ற உத்தரவை நமது மாநிலச்சங்கத்தின் முன் முயற்சியால் மாநில நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இந்த உத்தரவை நமது மாவட்டத்தில் அமலாக்க உதவிய Sr .AO திரு T.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதனால் சுமார் 48 ஊழியர்கள் பலன் பெற்று உள்ளனர்.
புதிய அங்கீகார விதி
புதிய அங்கீகார விதியின் அடிப்படையில் சரிபார்ப்புத் தேர்தல் நடைபெறுவதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஒரிரு தினங்களில் வெளியாக உள்ளது. சரிபார்ப்புத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...