GM அலுவலகக் கிளை மாநாடு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விருதுநகர் மாவட்டச் சங்க அலுவலகத்தில் தோழர் L.சங்கையா, கிளைத்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. தோழர் L.சங்கையா அவர்கள் பணி ஓய்வுப் பாராட்டு விழாவும் அன்று நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாளர் ஆக தோழர் நாகர்கோயில் C .பழனிசாமி, மாநில உதவி செயலர் கலந்து கொள்ள உள்ளார்.
Monday, December 17, 2012
ஒப்பந்த ஊழியர்கள் பணி நிறுத்தம்
அருப்புகோட்டை பகுதியில் EOI பிரிவில் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டு 17 நாட்கள் ஆகியும் தீர்வு ஏற்படாதது தொடர்பாக DGM (ADMN ) அவர்களிடம் இன்று (17-12-2012) விவாதம் செய்தோம். மாவட்டப் பொதுமேலாளர் உத்தரவு இட்டும் DE (MTCE), அருப்புகோட்டை அவர்கள் அவர்களை மீண்டும் பணியில் எடுத்துக் கொள்வதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளோம். 18-12-2012க்குள் இப்பிரச்னை தீர்க்கப்படும் என DGM உறுதி அளித்துள்ளார். பேட்டியில் தோழர்கள் சமுத்திரக்கனி, புளுகாண்டி, STSO, உதயகுமார், SSSO, கண்ணன், TTA ஆகியோர் மாவட்ட செயலருடன் கலந்துகொண்டனர்.
நெட்வொர்க் பகுதியில் உள்ள பிரச்சனைகளை இன்று AGM (NWO) அவர்களிடம் விவாதித்துள்ளோம். குறிப்பாக conveyance allowance கொடுப்பது விசயமாக, தட்சகுடி மற்றும் மங்களம் பகுதி towerகளை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு பணி ஒதுக்கீடு செய்வது, டீசல் போடுவதுற்கு போதுமான வாகன ஒதுக்கீடு செய்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பேசி உள்ளோம்.பேட்டியில் தோழர்கள். A.ஜெயபாண்டியன், ரசூல் ஆகியோர் மாவட்ட செயலருடன் கலந்துகொண்டனர்.
NO Diary
பிஎஸ்என்எல் தன் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அனைவருக்கும் 2013ஆம் ஆண்டுக்கான டைரிகள் வழங்கபடுவதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மற்றும் நாள்காட்டி வழங்குவதும் நிறுத்தபட்டுள்ளது
தர்ணா போராட்டம்
விருதுநகரில் 17-12-2012 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டம் தோழர் .A.சமுத்திரக்கனி BSNLEU மாவட்ட தலைவர், திரு.M.மாரியப்பன் SNEA மாவட்ட தலைவர் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கம் சார்பாக 68 பேரும், SNEA சார்பாக 7 பேரும், AIBSNLEA சார்பாக 2 பேரும், AIBDPA சார்பாக ஒருவரும் ஒப்பந்த ஊழியர் சார்பாக ஒருவரும் என மொத்தம் 79 பேர் கலந்து கொண்டனர். தர்ணாவை திரு.ராதாகிருஷ்ணன் மூத்த கணக்கு அதிகாரி தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி தோழர் ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர், தோழர்.T.ஜெபக்குமார், TEPU மாவட்ட செயலர், தோழர்.M .பெருமாள்சாமி, மாவட்ட உதவி செயலர், BSNLEU, தோழர்.கண்ணன், மாவட்ட அமைப்புச் செயலர் BSNLEU, தோழர் D.செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் சங்கம், திரு.மூக்கையா, விருதுநகர் கிள்ச்செயலர், SNEA, ஆகியோர் பேசினர். சிறப்புரையாக தோழர். தேனி வசந்தன் பேசினார்.
Sunday, December 16, 2012
Connections and market share of Telecom companies.
India has got total 93.522 million connections including landlines and mobiles as on 31st October 2012. India with 2.122 crore landline connections has got 68.56% of market share and is the first in this sector. In the mobile sector with 12.12 crore connections moblie, BSNL is in the 5th position. In the total connections including all services, BSNL is in the fourth position with 12.96% market share. In the mobile sector Airtel with 18.64 crore is the first followed by Vodafone with 15.37 crore, Reliance Telephones with 13.52 crores and Idea WITH 11.57 crore.
Saturday, December 15, 2012
லோக்கல் JCM
18வது லோக்கல் கூட்டு ஆலோசனை கூட்டம் (LJCM) வருகின்ற 2013 ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது .
புதிய அங்கீகாரம் விதிகள் தொடர்பான கூட்டம்
புதிய அங்கீகாரம் விதிகள் பிரச்சினை தொடர்பாக BSNLEU மற்றும் நிர்வாகத்திற்கு இடையே, 14.12.2012 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாம் checkoff system அடிப்டையில் எதிர்காலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்த எண்ணியுள்ள நிர்வாகத்தின் வரைவுத் திட்டத்தை ஏற்று கொள்ள முடியாது என்றும் JCM மற்றும் சங்க நிர்வாகிகள் எண்ணிக்கையைக் குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உறுதியாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.நிர்வாகம் நம்மால் முன்மொழிவு செயப்பட்ட வழிமுறைகளில் சிலவற்றை பரிசீலிக்க உறுதியளித்துள்ளது .தோழர்.P.அபிமன்யூ, பொது செயலாளர், தோழர். V.A.N. நம்பூதிரி, தலைவர் மற்றும் தோழர் . சைபல் செங்குப்தா, உதவி பொது செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்வாகத் தரப்பில் இருந்து, ஸ்ரீ நீரஜ் வர்மா, GM(SR), ஸ்ரீ முகேஷ் மீனா, DGM (SR) மற்றும் ஸ்ரீ வாட்வா , AGM (SR) பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...


