Wednesday, December 5, 2012

சென்னை சொசைட்டியில் வீட்டு மனைக்கான ஒப்புகைச் சீட்டு

          சென்னை சொசைட்டியில் வீட்டு மனைக்காக விண்ணப்பித்திருந்த உறுப்பினர்களுக்கு அதற்கான ஒப்புகைச்சீட்டு (Acknowledgement slip) விருதுநகர் BSNL பொதுமேலாளர் அலுவலகத்தில் 2012 டிசம்பர் 7ஆம் தேதி வழங்கப்படவிருக்கிறது. ஒப்புகைச் சீட்டை நேரில் வந்தே பெற்றுக் கொள்ளவேண்டும். 7ஆம் தேதி வரஇயலாதவர்கள் 8ஆம் தேதி விருதுநகர் BSNL ஊழியர் சங்கத்தின் SDOP கிளைச்செயலாளர் தோழர் சந்திரசேகர் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு தோழர் சந்திரசேகர் அவர்களை +91 94431 83925 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, December 4, 2012

டிசம்பர் 17, 18 இரண்டு நாட்கள் தர்ணா...

          BSNL மற்றும் MTNL சங்கங்களின் Joint Forum 04-12-2012 அன்று கூடி BSNL மற்றும் MTNLன் ஸ்திரத்தன்மை, ITS பிரச்னை மற்றும் 78.2 IDA விஷயமாக மீண்டும் ஒரு போராட்ட முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி வருகின்ற 17-12-2012 மற்றும் 18-12-2012 ஆகிய இரண்டு நாட்கள் தர்ணா நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

புதிய TTA க்களின் பணியிடம் தொடர்பாக....

         TTA பயிற்சி முடித்து வரவிருப்பவர்களின் பணியிடம் தொடர்பாக இன்று (டிசம்பர் 4ல்) மாவட்டப் பொது மேலாளரிடம் கண்ட நேர்காணலில் கவுண்சிலிங் அடிப்படையில் பணியிடம் ஒதுக்கக் கோரினோம். பெண்களுக்கு முனனுரிமை தரும்படியும் கேட்டுக் கொண்டோம். மாவட்ட நிர்வாகம் நமது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

Monday, December 3, 2012

மாநில செயற்குழு புகைப்படங்கள்

தலைமைக் குழு

மாநிலக் குழு உறுப்பினர்கள்
 

பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு தொடக்கவுரை 

தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை கையேடு வெளியீடு

மத்தியச்சங்க துணைத்தலைவர் தோழர் புனிதா உதயகுமார் வாழ்த்துரை

சென்னை மாநிலச்செலாளர் தோழர் K.கோவிந்தராஜ் வாழ்த்துரை

மாநில செயற்குழு முடிவுகள்

          2012 நவம்பர் 29 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு, மாநிலத்தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழுவை பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். 

தமிழ் மாநிலத்தில் முதன்மைச் சங்கமாக BSNLEU

          செப்டம்பர் மாதம் முதல் தமிழ் மாநிலத்தில் உறுப்பினர் எண்ணிக்கையில் நமது BSNLEU சங்கம் NFTE சங்கத்தைவிட கூடுதல் உறுப்பினர்களை கொண்டு முதன்மை சங்கமாக உருவெடுத்துள்ளது. அதற்காக பாடுபட்ட அணைத்து தோழர்களுக்கும் மாநில சங்கம் பாராட்டை தெரிவித்துள்ளது .

IDA அதிகரிப்பின் எதிர்பார்ப்பு...

          அக்டோபர் 2012 வரையிலான  நுகர்வோர் குறியீட்டு எண் 215 இல் இருந்து 2 புள்ளிகள் அதிகரித்து, 217 ஆக இருந்தது. ஆகவே 01.01.2013 முதல் IDA அதிகரிப்பு 4% ஆக இருக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...