1-1-2000 இல் CDA Pay scale இல் இருந்து IDA Pay Scaleக்கு மாறும் போது ஏற்பட்ட அனாமலி விசயமாக BSNL நிர்வாகம் எல்லா மாநிலங்களில் இருந்தும் தகவல்களைக் கேட்டுள்ளது. கடித நகல் <click here>
Tuesday, November 20, 2012
புதிய அங்கீகார விதிகளுக்கான கூட்டம்
புதிய அங்கீகார விதிகளை விவாதிப்பதற்கு 19-11-2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகம் ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது. அதனை விவாதிப்பதற்குத் தேவையான கால அவகாசம் பல மாதங்கள் ஆகும். ஆதலால் BSNL ஊழியர் சங்கம் 6 ஆவது சரிபார்பு தேர்தலை பழைய விதிகளின்படி நடத்தவேண்டும் என வலியுறத்தியுள்ளது. ஏனெனில் 13-02-2013 தேதி வரை BSNLEU சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளது. புதிய விதிகளை உருவாக்க அதிக காலம் ஆகும் போது 13-02-2013 தேதிக்கு பிறகு எந்த சங்கத்திற்கும் அங்கீகாரம் இல்லா சூழ்நிலை உருவாகும். இதைத்தான் நிர்வாகம் விரும்புகிறது. நிர்வாகத்தின் இந்தப் போக்கை நம் சங்கம் அனுமதிக்காது. இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக அனைத்திந்திய செயலர் தோழர் P.அபிமன்யு, அனைத்திந்திய தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Monday, November 19, 2012
தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு
SNEA மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜன் தலைமையில் BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ், மாவட்ட உதவித் தலைவர் தோழர் புழுகாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் தங்கதுரை, NFTE ராஜபாளையம் கிளைச் செயலர் தோழர் பிள்ளையார், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் கூடலிங்கம், SEWA BSNL ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்களைச் சந்தித்து, ITS அதிகாரிகள் எந்தவித நியாமுமின்றித் தொடரும் Deputation தொடர்பான விஷயங்களை விளக்கி, ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யைக் கொடுத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்கள் மனுவின் மீது ஆவன செய்து,பதில் தருவதாக வாக்களித்துள்ளார்.
நவம்பர் 22ல் கூடவிருக்கும் பாராளுமன்றம் கூட்டத் தொடருக்கு முன்னர் ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சங்கம் விடுத்த சுற்றரிக்கையின் தொடர்வினையை குறித்த காலத்தில் முடித்த ராஜபாளையம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.
தினகரன் நாளிதழில் வந்த செய்தி
Friday, November 16, 2012
புதிய அங்கீகார விதிகளுக்கான சந்திப்பு
BSNL மூன்றாம் பிரிவு ஊழியர்களின் தொழிற்சங்கத்திற்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்காக இம்மாதம் 19ஆம தேதி நடைபெறவிருக்கும் சந்திப்புக் கூட்டத்திற்கான கார்ப்பரேட் அலுவலகத்தின் கடித நகல் <<click here>>
78.2% IDA fixation – DoT க்கு BSNL பதில் அனுப்பி உள்ளது
78.2% IDA fixation விசயமாக DOT ன் விசாரனைகளுக்கான பதில் கடிதத்தை BSNL நிர்வாகம் 15-11-2012 அன்று அனுப்பியுள்ளது. விரைவில் தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளில் மத்திய சங்கம் ஈடுபடும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி...
இன்று துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் காஜியாபாத் பொதுமேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 20-11-2012 தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தை நடத்த BSNL
நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில் BSNLEU
சார்பாக தோழர் P.அபிமன்யு, தோழர் R.L.மூட்கில் SEWA BSNL சார்பாக தோழர் N.D.ராம்
கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 20-11-2012 தேதிக்கு
துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஒத்திவைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கிளைவாரியாக வேலைநிறுத்தத்தில்...
அருப்புகோட்டை
25
17
2
6
ஸ்ரீவில்லிபுத்தூர்
32
20
5
7
சாத்தூர்
19
19
0
0
துணைகோட்டம் ,விருதை
22
11
2
9
துணைகோட்டம் , சிவகாசி 40
25
5
10
சிவகாசி , OCB
35
14
10
11
GM Office, விருதுநகர்
63
33
21
9
ராஜபாளையம்
52
22
26
4
வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யப் பாடுபட்ட அனைத்துத் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...

