விருதுநகர் மாவட்ட சங்கத்தின் 6வது மாவட்ட செயற்குழு கூட்டம் 28/08/2017 அன்று மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் வாசிக்க ஒரு நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .மாவட்ட செயற்குழுவை தொடங்கிவைத்து மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் ஒரு அற்புத உரை நிகழ்த்தினார் ..மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி வாழ்த்துரை வழங்க ,மாவட்ட செயலரால் சமர்ப்பிக்கப்பட்ட விவாத குறிப்பின் மேல் ஒரு விரிவான விவாதம் நடைபெற்றது .விவாதத்தில் அனைவரும் பங்கேற்றனர் மாவட்ட செயற்குழு முடிவுகள்
1.9 வது மாவட்ட மகாநாட்டை வரும் மே மாதம் 2018 இல் தோழர் முத்துராமலிங்கம் நினைவாக ராஜபாளையத்தில் நடத்துவது .
2.கிளை மாநாடுகளை கீழ் கண்ட தேதிகளில் நடத்துவது .
செப்டம்பர் 8 -ஸ்ரீவில்லிபுத்தூர்
செப்டம்பர் 9- அருப்புக்கோட்டை
செப்டம்பர்11- சாத்தூர்
செப்டம்பர் 23- ராஜபாளையம்
3.ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பாக தோழர்கள் ராமசந்திரன் மற்றும் வேலுச்சாமி ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் ஜெயபாண்டியன் ,சந்திரசேகரன் ,பெருமாள்சாமி மற்றும் அய்யாசாமி அவர்களை நமது செயற்குழுவில் நிரந்தர பார்வையாளர்களாக அனுமதிப்பது .
4.நவம்பர் மாதம் நடைபெற உள்ள டெல்லி தர்ணா போராட்டத்திற்கு மாநில சங்கம் நிர்ணயித்த அளவிற்கு ஊழியர்களை திரட்டுவது .
5.மாவட்ட செயலருக்கு சொந்த பணி இருப்பதால் வரும் அக்டோபர் 10 முதல் நவம்பர் 24 வரை மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி பொறுப்பு மாவட்ட செயலராக செயல்படுவார் .
6. ஒழுங்கீனமற்ற செயல்களில் தொடரந்து ஈடுபடும் மாவட்ட சங்க நிர்வாகிக்கு விளக்க கடிதம் கொடுப்பது .
7. மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் JTO ஆக பதவி உயர்வு பெற்று செல்வதால் அப் பதவிக்கு ராஜபாளையம் கிளை தோழர் G.வெள்ளை பிள்ளையார் நியமிக்க பட்டு உள்ளார் .
7. மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் JTO ஆக பதவி உயர்வு பெற்று செல்வதால் அப் பதவிக்கு ராஜபாளையம் கிளை தோழர் G.வெள்ளை பிள்ளையார் நியமிக்க பட்டு உள்ளார் .
மாவட்ட பொருளர் நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது .
No comments:
Post a Comment