விருதுநகர் மாவட்ட சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் கடந்த 05/05/2018 அன்று சிவகாசியில் நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28,29 தேதிகளில் கோவையில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாநிலஅமைப்பு செயலாளர் தோழர் A .சமுத்திரக்கனி அவர்கள் பேசினார் .அதன் பின் மாவட்ட மாநாட்டை வெற்றிகரமாக்க செய்ய வேண்டிய பணிகள் ,மற்றும் ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு ,தெருமுனை பிரச்சார இயக்கம் ஆகியவற்றை விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேசினார் .இக் கூட்ட முடிவின்படி தெருமுனை பிரச்சாரக்கூட்டங்களை 07/05/2018 அன்று ராஜபாளையத்திலும் ,08/05/2018 அன்று காலைசாத்தூருரிலும் ,08/05/2018 அன்று மாலை அருப்புக்கோட்டை நகரிலும் ,09/05/2018 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் ,10/05/2018 அன்று விருதுநகரிலும் ,11/05/2018 அன்று சிவகாசியிலும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது .மாவட்ட மாநாட்டு நன்கொடை வசூலை வரும் 15/05/2018 அன்றுக்குள் மாவட்ட சங்கத்திடம் கொடுத்துவிடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது .அதே போல் இளம் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பை விருதுநகர் மாவட்டத்தில் நடத்தவேண்டும் என்ற மாநில சங்க முடிவை அமல்படுத்தவேண்டிய அவசியத்தையும் சுட்டி காட்டி உள்ளோம் .
Thursday, May 10, 2018
Thursday, April 19, 2018
தமிழக ஆளுனருடன் சந்திப்பு...
நமது அகில இந்திய ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL, துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி 19.04.2018 அன்று அனைத்து மாநில தலைநகர்களிலும், பேரணி நடத்தி ஆளுனரை சந்தித்து மனு வழங்க வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தது.
தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக சென்னையில் பேரணி நடத்துவதற்கும் ஆளுனரை சந்திப்பதிற்கும் அனுமதி கோரி விண்ணப்பித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைகளை காரணம் காட்டி நமக்கு பேரணி நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ஆளுனரை சந்தித்து மனு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆளுனரை சந்திக்க நமது AUABல் உள்ள ஏழு மாநில செயலாளர்களின் பெயர்களை நமது தோழர்கள் ஆளுனர் மாளிகைக்கு அனுப்பியிருந்தோம். ஆனால் ஒரு சில காரணங்களால் ஐந்து நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 19.04.2018 அன்று காலை 10.30 மணிக்கு ஏழு சங்கங்களின் சார்பாக கையொப்பமிட்ட மனுவினை தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் (CS, BSNLEU), தோழர் G.S.முரளிதரன் (Offciating CS, NFTE), தோழர் R.ராஜசேகர் (CS, SNEA), தோழர் C.துரையரசன் (CS, AIBSNLEA) மற்றும் தோழர் M.ஓம்பிரகாஷ் (DS, SEWA BSNL) ஆகியோர் தமிழக ஆளுனர் திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து வழங்கினர்.
மனுவினை முழுமையாக படித்து பார்த்த ஆளுனர், மனு விளக்கமாகவும், தெளிவாகவும் உள்ளது என்று கூறிய அவர் அந்த மனுவினை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
சாத்தூர் கிளையின் பொதுக்குழு
சாத்தூர் கிளையின் பொதுக்குழு கிளைத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தோழர் காதர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மாநாடு தொடர்பான திட்டமிடலுக்காக நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
Friday, April 13, 2018
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...


























