Tuesday, April 10, 2018

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தர்ணா

        துணைடவர் நிறுவனத்தை திரும்பப்பெற வைக்கம் முயற்சியின் முதற்கட்டமாக All Unions and Associations of BSNL எடுத்த முடிவின்படி 2018 ஏப்ரல் 12ல் நடைபெறும் தர்ணாவில் அனைவரும் கலந்து கொண்ட போராட்டத்தை மிகப் பெரிய வெற்றி பெறச் செய்வோம்.

Friday, April 6, 2018

லோக்கல் JCMம் முதன்மைப் பொது மேலாளருடன் சந்திப்பும்

            ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற 25ஆவது லோக்கல் JCMல் விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் தொழில் அமைதியற்ற சூழல் பற்றியும் மிரட்டல் போக்குகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதனை அதிகாரிகளும் ஒத்துக் கொண்டனர். தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதன்மைப் பொது மேலாளர் கூறினார்.

            JCMற்குப் பின்னர் முதன்மைப் பொது மேலாளரைச் சந்தித்து மே 29, 30ல் நடைபெறவிருக்கும் நமது மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தோம். அவசியம் வருவதாக ஒப்புதழ் தெரிவித்துள்ளார்.

            MAN POWER ஒப்பந்தத் தொழிலாளர்களை பல்வேறு மாவட்டங்கள் போல் SEMI SKILLED பிரிவில் கொண்டு வர கேட்டுக் கொண்டோம். வரும் டெண்டர் SEMI SKILLED பிரிவில் கோரப்படும் என்று கூறினார்.

             இந்த நேர் காணலில் மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக் கனி, மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர் ஆ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு நமது பகுதியில் 2018 ஏப்ரல் 1 முதல் ரூபாய் 20 உயர்ந்துள்ளது. புதிய ஊதியம் 350+20=370 ஆக இருக்கும்.

ஐடியா-வோடொபோன் இணைப்பு

                 ஐடியா-வோடொபோன் ஆகிய நிறுவனங்களின் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாகவும், அது விரைவில் நடைபெறும் என்றும் தொலை தொடர்பு துறையின் செயலாளர் திருமிகு அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இந்த இணைப்பிற்கு பின் இந்த புதிய நிறுவனம் 41 கோடி தொலைபேசி இணைப்புகளுடன் 37% சந்தை பங்கீடோடு இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக மாறி விடும்.

IDA உயர்வு

01.04.2018 முதல் 0.3% IDA உயர்ந்துள்ளதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதற்கான உத்தரவு பிறப்பித்த பின்னர் BSNL ஊழியர்களுக்கு மொத்தம் 127.2% IDA கிடைக்கும்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...