Sunday, April 3, 2016

புத்துணர்ச்சியுடன் நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம்

02/04/2016 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் தோழர் வெங்கடசாமி ,கிளை தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர் தங்கதுரை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த , கிளை செயலர் தோழர் சமுத்திரம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது .கிளை கூட்டத்தை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துவக்கி வைத்து பேசினார் .7 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் போனஸ் பிரச்சனையில் 2 இலக்க தொகையை நிர்வாகம் கொடுப்பதை வாங்குவதற்கு தயாரான NFTE சங்கத்தின்  நிலைபாட்டையும் ,மாவட்டத்தில் ஊழியர்  பிரச்சனைகளை வென்று எடுக்க நடக்க உள்ள  போராட்டத்தை பற்றியும் விளக்கினார் . அதன் பின் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி மற்றும் மாவட்ட உதவி தலைவர் தோழியர்  பகவதி . சென்னை RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் ,LCM உறுப்பினர் தோழர் தங்கதுரை ஆகியோர் பேசினர் .அதன் பின் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கிளை கூட்டம் நடைபெற்றது .

Friday, April 1, 2016

செய்தி

4 ஜி சேவை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள்: தொலை தொடர்பு ஓழுங்குமுறை ஆணைய இணை ஆணையரிடம் புகார்
தினமணி செய்தி படிக்க :-Click Here

IDA உயர்வு









01-04-2016 முதல் IDA உயர்வு இல்லை .ஆதலால் IDA 1-04-2016 முதல் அதே 112.4% ஆகவே இருக்கும் .

ஆர்பாட்ட காட்சிகள் :

கொடுப்பதை வாங்குவதற்கு நாம் பிச்சைக்காரர்கள் இல்லை என்பதை இன்று மாவட்டத்தில் பல்வேறு கிளைகளில் நடைபெற்ற ஆர்பாட்ட காட்சிகள் :
போராட்டம் நடத்த துப்பில்லா சிலர் தங்கள் இயலாமையை மறைக்க நமது பொது செயலர் மீது பழி சுமத்துவதை நாம் அனுமதிக்க முடியாது என்பதை இன்றைய ஆர்பாட்டத்தில் நாம் வன்மையாக கண்டன   குரலை பதிவு செய்தோம் .போராட்டம் வந்து விட்டால் பதுங்கு குழிகளை தேடி  புற முதுகிட்டு ஓடும் கோழைகள் வோட்டு கேட்க வழி தெரியாது புறம் பேசி வண்டி ஓட்டும் இவர்களை  புறக்கணிக்கும் நாள் மே 10.






Monday, March 21, 2016

விருது நகர் மாவட்ட செயற்குழு

தொடர் வெற்றிக்கு கட்டியம் கூறிய விருதுநகர் விரிவடைந்த மாவட்ட செயற்குழு
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Saturday, March 19, 2016

எழுச்சிகரமாக நடைபெற்ற திருப்புமுனை செயற்குழு

இன்று ராஜபாளையம்  நகரில் விருதுநகர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது .மாவட்டம் முழுவதும் 200 பேர் பங்கேற்ற உற்சாகமான  சூழலில் நடைபெற்ற இச் செயற்குழு மாவட்டத்தில் நமது BSNLEU சங்கம் ஒரு மாபெரும் சக்தி என்பதை நிரூபித்தது . நமது சங்க கொடியை மூத்த  தோழரும் ,மாவட்ட சங்க நிர்வாகியுமான தோழர் சிவஞானம்  ஏற்றி வைக்க ,தேசிய கொடியை நமது AITEU CL III(N) சங்கத்தின் முன்னால் மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்தார் .தோழர்கள் முத்துசாமி  மற்றும் இளமாறன் அவர்களின் கோஷங்களுடன் முறையாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் தொடங்கியது .தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த பட்டது .மாவட்ட தலைவர் தலைமை உரையுடன் துவங்கிய செயற்குழு , மாவட்ட செயலரின் துவக்க உரை மற்றும் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில உதவி செயலர் தோழர் முருகையா சிறப்புரையுடன் நிறைவு பெற்றது .பின் துவங்கிய செமினாரை மாவட்ட செயலர் துவக்கி வைக்க , கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம்  தனது கருத்துக்களை பதிவு செய்தார் .அதற்குரிய விளக்கங்களை மதிப்பிற்குரிய  துணை மாவட்ட பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார் .அதன் மாவட்ட பொது மேலாளர் திருமதி S .E .ராஜம் ,ITS  அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் .அதன் பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் தோழர்கள் சிவஞானம் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்கள் கெள்ரவிக்கபட்டனர் .வர உள்ள சரிபார்ப்பு தேர்தலில் 60 %முதல் 70 % வரை நமது BSNLEU சங்கத்திற்கு  ஆதரவை திரட்டுவது என்பது 2017 இல் வர உள்ள ஊதிய உடன்பாடு மற்றும் IDA இணைப்பு மற்றும் நிறுவன பாதுகாப்பு   ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் என்பதை பேசிய அனைவரும் சுட்டி காட்டினர் .BSNLEU சங்கம் தன் சொந்த பலத்தில் 50% வாக்கிற்கும் மேல் வாங்கும் என்பதை பேசிய அனைவரும் அறுதியிட்டு கூறினர் .சென்ற சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் ,மெடிக்கல் அலவன்ஸ்  ,LDC இன்னும் சொல்ல போனால் 10,000 கோடி நஷ்டம் அடைந்தற்கும் BSNLEU 
காரணம் என்று சொனவர்கள் அவர்களுக்கு அங்கீகாரம் வந்த பிறகு வாய் மூடி மௌனம் சாதித்தது மட்டும் இன்றி அதற்கு எந்த வித இயக்கமும் நடத்தாமல் ஊழியர்களை ஏமாற்றிய செயலை அனைவரும் தனது பேச்சில் சுட்டி காண்பித்தனர் .இச் செயற்குழு மாவட்டத்தில் ஒரு திருப்புமுனை செயற்குழுவாக திகழ்ந்தது .ராஜபாளையம் கிளை தோழர்கள் முத்துராமலிங்கம் ,ராதாகிருஷ்ணன் ,I .முருகன் ,ரவிச்சந்திரன் ,சிவஞானம், அனவரதம் ,ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகி வேலுசாமி தலைமையில் பம்பரமாய் பணியாற்றிய ராஜபாளையம் கிளை  தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு    நன்றி நன்றி நன்றி .













11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...