Monday, August 5, 2013

பிஎஸ்என்எல்-க்கு புத்துயிர் அளிக்க ஊழியர் சிறப்பு மாநாடு

          ‘‘பிஎஸ்என்எல்-க்குப் புத்துயிர் அளித்திட’’ பிஎஸ்என்எல் ஊழியர்களின் சிறப்பு மாநாடு புதுதில்லியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்து பங்கேற்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் உள்ளடக்கியுள்ள பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இந்த சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
          சிறப்பு மாநாட்டிற்கு கூட்டமைப்பின் தலைவர் சி.சிங் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் கன்வீனர் விஏஎன் நம்பூதிரி சிறப்பு மாநாட்டின் பிரகடனத்தை முன்மொழிந்து பேசினார்.

          பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எந்தவிதத்தில் புத்துயிர் அளித்திடலாம் என்பதையும் அதன்மூலம் நுகர்வோருக்கு சிறந்த முறையில் சேவை செய்திடலாம் என்பதையும் விளக்கினார். சிறப்பு மாநாட்டை வாழ்த்தி குருதாஸ் தாஸ் குப்தா, எம்.பி, (பொதுச் செயலாளர், ஏஐடியுசி), ஸ்வதேஷ் தேவ்ராய், (செயலாளர், சிஐடியு), பி.என்.ராய், (பொதுச் செயலாளர்), பிஎம்எஸ், டாக்டர் உதித்ராஜ், (தலைவர், அகில இந்திய தலித்/பழங்குடியினர் ஊழியர்கள் மகாசம்மேளனம்) மற்றும் இதர சங்கங்களின் தலைவர்கள் உரை யாற்றினர்.
          கன்வீனர் முன்மொழிந்த பிரகடனத்தின்மீது பிரதிநிதிகளின் விவாதங்களுக்குப் பின், பிரகடனம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட் டது. பிரகடனத்தில் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், நிறுவனத்தைத் திறனுடன் நடத்திட திறமையான நிர்வாகம் தேவை என்றும் கோரப்பட்டுள்ளது.
          இதுபோன்ற சிறப்பு மாநாடுகளை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் அளவிலும் நடத்தி, கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரி ன அளவில் பிரச்சாரம் செய்திடவும் இச்சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டது.
நன்றி : தீக்கதிர்
புகைப்பட தொகுப்பு பார்க்க : CLICK HERE 

Saturday, August 3, 2013

Top Internet service providers in India in Q1 2013, BSNL leads

செய்தி படிக்க : CLICK HERE

BSNL to reduce data tariffs on Aug 15

செய்தி படிக்க : CLICK HERE

லோக்கல் கவுன்சில்

          லோக்கல் கவுன்சில் உறுப்பினர்களாக ராஜபாளையம் செயற்குழுவில் தேர்ந்து  எடுக்கப்பட்ட கீழ்கண்ட தோழர்கள் அடங்கிய பட்டியலை நமது பொது செயலர் அங்கீகரித்து இன்று மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி விட்டார்.

          1. தோழர் S.ரவீந்திரன் 
          2. தோழர் A.சமுத்திரகனி 
          3. தோழர் A.ஜெயபாண்டி
          4. தோழர் T.முத்துராமலிங்கம் 
          5. தோழர் R.ஜெயக்குமார்
          6. தோழர் A.கண்ணன்  
          7. தோழர் A.H.காதர் மொய்தீன் 
          8. தோழர் M.S.இளமாறன்
          9. தோழர் L .தங்கதுரை

Friday, August 2, 2013

டெல்லியை வேவு பார்க்கிறது US server

          அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இணையதள உளவுத்திட்டத்துக்கு, உலகம் முழுவதும் 150 இடங்களில் 700 ரகசிய செர்வர்களை நிறுவியுள்ளது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதில் ஒன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த உளவுத்திட்டம் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் வாயிலாக தெரியவந்தது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மூலம் நடத்தப்படும் எக்ஸ்கீஸ்கோர் என்ற திட்டத்துக்கு அளிக்கப்பட்ட உபகரணங்களில், உளவு கம்ப்யூட்டர் செர்வர்கள் எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன என்ற விபரங்கள் அடங்கிய வரைபடமும் அடங்கும்.மேலும் அந்த செர்வர்களில் ஒன்று டெல்லி அருகே நிறுவப்பட்டிருப்பது வரைபடத்தில் காணப்பட்டது.
மேலும் செய்தி படிக்க :-CLICK HERE
                                                                                                                  நன்றி :- வெப்துனியா 

நன்கொடை

அன்பார்ந்த கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளே !

          நமது மாநில சங்க வேண்டுகோளின்படி  அனைத்து உறுப்பினர்களிடம் ரூபாய் 200/- நன்கொடை வசூலித்து 30-08-2013 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற உள்ள மாவட்ட செயற்குழுவில் கொடுத்துவிட வேண்டும் என மாவட்டச்சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.

மாவட்ட செயற்குழு கூட்டம்

          வருகின்ற 30-08-2013 வெள்ளிகிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிஐடியூ அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.

ஆய்படு பொருள் :-

          1. JCM /வொர்க் கமிட்டி items

          2. தோழர் புளுகாண்டி பணி ஓய்வு பாராட்டு

          3. பிரச்சனைகள் மீது விவாதம்

          4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...