Monday, September 7, 2015

சிறப்பு செயற்குழு கூட்டம்

06-09-2015 அன்று நமது மாவட்ட  சிறப்பு செயற்குழு கூட்டம் வெம்பகோட்டையில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது .மாவட்ட துணை செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்களின் இல்ல விழாவை ஒட்டி நடைபெற்ற இச் செயற்குழுவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தோழர் வெங்கடேஷ் செய்ததற்கு மாவட்ட சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது . குறுகிய கால அவகாசத்தில் நடைபெற்ற செயற்குழுவிற்கு 4 பேர் தவிர அனைவரும் கலந்து கொண்டனர் .தோழர் இளமாறன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பட்டது .மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மேல் விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் நமது சங்க உறுப்பினர்களில் 185 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் .சதவிகத அடிப்படையில் 82% . இது வரை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் நமது உறுப்பினர்கள் பங்கேற்றதில் இது தான் அதிகம் என்பதை மாவட்ட செயற்குழு  கரவொலி  எழுப்பி பாராட்டியது . செப்டம்பர் 12 ஆம் தேதி ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மகாநாடு நடைபெற உள்ளது .அம் மகாநாட்டில் நமது செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும் செயற்குழு முடிவு செய்தது .அதே தினம் ESI அட்டை  வழங்குவதற்கு ஒப்பந்ததாரர் ஏற்பாடு செய்துள்ளதையும் அனைவரும் குடும்பத்தோடு வந்து புகைப்படம் எடுக்க வேண்டும்  என்ற செய்தியையும் அதில் தெரிவித்து உள்ளோம் .ஒப்பந்த ஊழியர் அனைத்திந்திய மகாநாட்டு நிதி வசுலை சாத்தூர்,ராஜபாளையம் கிளைகள் முடித்துவிட்டன .அதே போல் மற்ற கிளைகளும் மாவட்ட மாநாட்டுக்கு முன்பாக முடித்து விட வேண்டும் என மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது .  தோழர் சிவஞானம் நன்றி கூற மாவட்ட செயற்குழு  நிறைவு பெற்றது . 

Wednesday, September 2, 2015

விருதுநகர் மாவட்ட வேலைநிறுத்த காட்சிகள்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் பணி புரியும்  421 ஊழியர்களில் 252 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர் .106 பேர் விடுப்பில் சென்றுள்ளனர் .62 பேர் பணி செய்துள்ளனர் .அதிகாரிகளில் 2 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் .30 பேர் விடுப்பில் சென்றுள்ளனர் .74 பேர் பணியில் இருந்துள்ளனர் .வேலை நிறுத்தம் செய்த அதிகாரிகள் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,Sr .AO , மற்றும் தோழர் M சுப்ரமணியன் SDE அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறது . ராஜபாளயம் வாடிக்கையாளர் சேவை மையம் தவிர்த்து அனைத்து CSC களும் மூடப்பட்டன .வழக்கம் போல் அருப்புகோட்டை பகுதியில் பெரும் அளவில் பணிக்கு சென்றதை நமது சகோதர சங்கம் உரிய முறையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஒப்பந்த ஊழியர்கள் 100% வேலை நிறுத்தத்தில் பங்கேற்றது சிறப்பு மிக்கது ஆகும் .மாவட்டம் முழுவதும் போராட்ட விளக்க கூட்டத்தில் முழுமையாக பங்கேற்ற NFTE மாவட்ட செயலருக்கு நமது நன்றி .அதே போல் போராட்ட களத்தில் உறுதுணையாக இருந்த சேவா BSNL ,FNTO , SNATTA மற்றும்  விடுப்பில் செல்ல வேண்டும் என்ற நமது கோரிக்கையை ஏற்று விடுப்பில் சென்ற அதிகாரிகளையும் BSNLEU சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது .

தர்ணா

மத்திய அமைச்சரவை குழு 20000 கோடி மதிப்பில் ஆன 65000 டவர்களை பிரித்து தனி நிறுவனமாக ஆக்க முடிவு செய்ததை கண்டித்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து 16-09-2015 அன்று மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்த முடிவு செய்துள்ளன .

Make the 2nd September General Strike a historic success.

சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெம்பகோட்டையில் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடை பெற உள்ளது .அனைத்து கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் ,லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் RGB உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது . 
ஆய்படு பொருள்  :-
1. செப்டம்பர் 2 வேலைநிறுத்த ஆய்வு .
2. ஒப்பந்த ஊழியர்  சங்க மாவட்ட மற்றும் அகில இந்திய மகாநாட்டு நிதி வசூல் பணி 
3. செப்டம்பர் 16 தர்ணா போராட்டம் 
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
                     விருதுநகர் மாவட்ட சங்கம்  

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம்



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து பகுதி நேர ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2 ஆம் தேதி, அதாவது நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அச்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.இதனையடுத்து மத்திய அரசு சார்பில் இது தொடர்பாக தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த சுமூக முடிவும் எட்டப்பட வில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய அளவில் 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியின் தொழிற்சங்க பிரிவான பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.வங்கிப்பணிகள் பாதிக்கும்.தொழிலாளர் சட்டத்தில் திருத்தப்பட்ட தொழிலாளர் விரோத சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பங்கு விலக்கலை நிறுத்த வேண்டும் மற்றும் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் நாளை நடக்கும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறார்கள். எனவே நாளை நாடெங்கும் வங்கி சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வங்கிகளில் நாளை காசோலை பரிவர்த்தனை நடைபெறாது என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தனியார் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும். சென்னையில் வங்கி ஊழியர்கள், நாளை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் நாளைய வேலை நிறுத்த போராட்டத்தில், 1.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தமிழக அரசு ஊழியர்கள் சங்கமும் பங்கேற்கிறது. காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.தமிழ்நாட்டில் 2 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இதில் லாரி டிரைவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டட தொழிலாளர்கள் என சுமார் 50 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி தெரிவித்துள்ளார். ஆட்டோக்கள் ஓடாது 

அதேப்போன்று நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் எம்.சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வர உள்ள போக்குவத்து பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் பிரச்னைக்கு முத்தரப்பு கமிட்டி அமைத்து தீர்வு காண வேண்டும்.ஜி.பி.எஸ். மீட்டரை இலவசமாக தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாக்சிகள், கால் டாக்சிகள் ஓடாது" என்றார்.இதனால் நாளை சென்னையில் 90 சதவீத ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிகிறது. இதனிடையே ஆட்டோ தொழிற்சங்கத்தினர் நாளை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் சென்ட்ரல், பல்லவன் சாலை, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதேப்போன்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற உள்ளது.
                நன்றி "- விகடன் செய்திகள் 

வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...

இந்திய நாடு முழுவதும் உழைப்பாளி வர்க்கம் ஒன்று திரண்டு நடத்தும் செப்டம்பர் 2- அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திடுவோம். நமது தேசத்தை பாதுகாப்போம். BSNLஐ பாதுகாப்போம்.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...