Tuesday, July 8, 2014

Top posts vacant in 35 PSUs including Coal India, BSNL, NHPC

டைம்ஸ் ஆப்  இந்தியா செய்தி படிக்க :Click Here

இனி எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணம் உயரும்!

     எரி பொருள் விலை உயர்வுக்கு தக்கபடி ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கச்சா எண்ணை விலை உயர்வுக்கு தக்கபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வதை போல இனிமேல் டீசல், நிலக்கரி, மின்சார கட்டணத்துக்கு ஏற்ப ரயில் கட்டணமும் கழுத்தை நெரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த எரிபொருள் விலையை கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஆயில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்கு மாற்றினர். இதன் மூலம் சர்வதேச கச்சா எண்ணை விலையேற்றத்துக்கு தக்கபடி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது.இதனால் மாதம் ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையேற்றம் கண்டு மக்களை வாட்டி வருகிறது.இந்நிலையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணங்களை நிர்ணயித்தால், ரயில் கட்டணமும், நாளொரு மேனியும், பொழுதொருவண்ணமுமாக அதிகரிக்கும்.எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் உரிமையே அரசிடம் இல்லை எனும்போது, அதனுடன் ரயில் கட்டணத்தை இணைப்பது என்பது, ரயில்வே துறையை கிட்டத்தட்ட தனியார் மயமாக்கியதற்கு சமம்தான்.
                           <நன்றி :- ஒன் இந்தியா > 

கார்ட்டூன்,


                                          <நன்றி :- தி ஹிந்து >

Monday, July 7, 2014

மத்திய சங்க செய்திகள்,

               கேடர் பெயர் மாற்றத்திற்கான கூட்டு குழு கூட்டம் வரும் 23-07-2014 அன்று காலை நடைபெற உள்ளது . அக் கூட்டத்தில் நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P  அபிமன்யு, நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி மற்றும் நமது துணை பொது செயலர் அனிமேஷ்  சந்திர மித்ரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர் .அன்று மாலை scheme of Bonus/Productivity Linked Incentive based on PMS பற்றி விவாதிக்க அதற்கான கூட்டு குழு கூட்டம் நடைபெற உள்ளது . அதில் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு மற்றும் NFTE சங்க தலைவர் தோழர் இஸ்லாம் அஹ்மத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

Friday, July 4, 2014

அனைவருக்கும் ப்ரீ சிம்

            நமது அனைத்திந்திய சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியாலும் 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட்ட அடிப்படையிலும் விடுபட்ட அனைவருக்கும் ப்ரீ சிம் கிடைப்பதற்கான உத்தரவு இன்று கார்போரேட்  நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த உத்தரவின்படி வழங்கப்படும் சிம்மின் விலை 20 முதல் 30 ரூபாய் இருக்கும். பணி புரியும்  மாவட்டத்திற்குள் CUG  வசதியும், ரோமிங் வசதியும் உண்டு. STD மற்றும் OFFNET  வசதி கிடையாது. ரூபாய் 200-/ ப்ரீ டாக் டைம்  உண்டு.
உத்தரவு படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...