முசாபர்பூர் நகரில் நடைபெற்ற பீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு செய்தி படிக்க :- Click Here
Sunday, April 13, 2014
Friday, April 11, 2014
Thursday, April 10, 2014
ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்
இன்று(10-04-2014) ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் மற்றும் தோழர் செல்வராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ,TTA அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பொதுக்குழுவை தொடக்கி வைத்து பேசும் போது நடந்து முடிந்த மாவட்ட மகாநாடு , தவறான மாற்றல் உத்தரவை இட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மற்றும் சென்னை சொசைட்டி RGB தேர்தல் ஆகியவற்றின் வெற்றிக்கு நமது உருக்கு போன்ற ஒற்றுமை மட்டுமே காரணம் என்பதை விரிவாக கூறினார் .வர உள்ள மக்களவை தேர்தலில் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவை அமல்படுத்தவேண்டிய கட்டாயத்தை விளக்கினார் .RGB தேர்தலில் திருமங்கலம் பார்முலா போல் NFTE சங்கத்தினர் வீடு வீடாக ரிஸ்ட் வாட்ச் கொடுத்த கேவலத்தையும் மீறி நாம் வெற்றி பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது என கூறி மாவட்ட செயலர் அனைவருக்கும் அதற்காக் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் .தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு செயற்குழுவில் சொல்லிய உடன் ரூபாய் 7500/- வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் பேசும் போது மாவட்டத்தில் வளர்ச்சி பணிக்கு மாவட்ட நிர்வாகம் எந்த விதத்திலும் உதவாத போக்கை கடைபிடிப்பதை உதாரணங்களுடன் எடுத்து உரைத்தார்.தோழர் செல்வராஜ்,TTA அவர்களின் பணி ஓய்வை பாராட்டி தோழர்கள் முத்துசாமி ,வெங்கடேஷ்,சிவஞா னம் ,வெள்ளை பிள்ளையார் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர் தோழர் வேல்சாமி ஆகியோர் பேசினர் .ஏற்புரையில் பேசிய தோழர் செல்வராஜ் சங்கத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டிய அவசியத்தை மிக அழகாக ஒரு குட்டி கதை கூறி விளக்கினார் .தோழர் செல்வராஜ் அவர்களுக்கு தோழர் ரவீந்திரன் மாவட்ட சங்கம் சார்பாக பொன்னாடை போர்த்தி கவ்ரவித்தார் .நினைவு பரிசை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் வழங்கினார் .ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி தோழர் செல்வராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவ்ரவித்து மக்களவை தேர்தல் பணி குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்தார் .கிளை பொருளாளர் தோழர் I .முருகன் நன்றி கூற பொது குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது .
தொடரும் வெற்றி
ப்ராஜெக்ட் பிரிவில் இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் நமது BSNLEU சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .
Wednesday, April 9, 2014
கூட்டு போராட்ட குழு
இன்று கூட்டு போராட்ட குழுவின் பிரதிநிதிகள் நமது CMD அவர்களை சந்தித்து நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர். இன்றைய கூட்டத்தில் தோழர்கள் P .அபிமன்யு , GS, BSNLEU & கன்வீனர், JAC, தோழர் V.A.N. நம்பூதிரி, President, BSNLEU, தோழர் சந்தேச்வர் சிங், GS, NFTE & தலைவர், JAC, தோழர் ஜெயப்ரகாஷ், GS, FNTO & இணை கன்வீனர், JAC, தோழர் R.C. பாண்டே , GS, BTEU & பொருளாளர், JAC, தோழர் பவன் மீனா, GS, SNATTA & இணை கன்வீனர், JAC, தோழர் சுரேஷ் குமார், GS, BSNL MS, தோழர் அப்துஸ் சமத், Dy.GS, TEPU, தோழர் R.K. கோஹ்லி, GS, NFTBE & com. R.S. யாதவ், இணை செயலர், BSNL ATM ஆகியோர் கலந்து கொண்டனர்.
<குறிப்பாணை படிக்க >Click Here
Monday, April 7, 2014
விருதுநகர்: ஆயா கொடுத்த ஆயிரம்!
வேறு வண்ணப் பதாகைகள் எதுவும் இல்லை. செங்கொடிகளோடும் ஜிந்தாபாத் கோஷங்களோடும் விருதுநகர் தொகுதி முழுக்க வலம் வருகிறார்கள் காம்ரேடுகள்.“ரொம்ப நாளைக்கு பிறகு, நாம நமக்காக கொடி பிடிக்கிறோம், கோஷம் போடுகிறோம்!” சந்தோஷத்தை பரிமாறிக் கொள்கிறார்கள் தோழர்கள். விருதுநகர் தொகுதியில் சத்திரப்பட்டி கிராமத்திற்குள் ஓட்டுக் கேட்டு நுழைந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாமுவேல்ராஜை வழிமறித்த ஒரு மூதாட்டி, “மூணு நாலு மாசமா முதியோர் உதவித் தொகை வரலை. அதுக்கு முன்னாடி சிறுகச் சிறுக சேர்த்தது. செலவுக்கு ஆகும். வச்சுக்கங்க!” வேட்பாளரின் கையில் திணித்து விட்டுப் போனார். கண்கலங்கி விட்டார்கள் காம்ரேடுகள். அம்மையார்பட்டி, ஆலங்குளம், செவல்பட்டி கிராமங்களில் சாமுவேல்ராஜின் கழுத்தில் 10 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலைகள் விழுந்தன. “யாருகிட்ட வாங்கணும், யார்கிட்ட கொடுக்கணும்னு மக்களுக்கு நல்லாத் தெரியும்ல!” தோழர்கள் பொங்குகிறார்கள்.-
< நன்றி: நக்கீரன் (2014, ஏப்.05-08)>
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
