Monday, December 16, 2013

வங்கி கடன்

யூனியன் வங்கி,கனரா வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்த புதுப்பித்தல் பிரச்சினையை இன்று நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் பொது மேலாளர் (BFCI) அவர்களுடன் விவாதித்தார்.நமது கார்போரேட் அலுவலகம் இது விசயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மேலும் இது தொடர்பாக வங்கிகள் நமது நிறுவனத்தை அணுகி வருகின்றன என்றும் பொது மேலாளர்   (BFCI) அவர்கள் கூறியுள்ளார்.

Saturday, December 14, 2013

இரங்கல்

        நமது லோக்கல் கவுன்சில் உறுப்பினரும் முன்னால் மாவட்ட சங்க நிர்வாகியும் ஆன தோழர் L.தங்கதுரை அவர்களின் துணைவியார் இன்று காலமானார்.அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பதார்க்கு விருதுநகர் மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

Friday, December 13, 2013

Govt. urges Union Ministries, PSUs to give special preference to BSNL, MTNL

செய்தி படிக்க :-Click Here

சபாஷ் மதுரை SSA

பதிவு செய்த உடன் பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சேவை!

பதிவு செய்த உடன் பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சேவை!
          பதிவு செய்யப்பட்ட உடனேயே சேவையினைக் குறிப்பிட்ட இடங்களில் வழங்க உள்ளதாக பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அறிவித்துள்ளார். மதுரை வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
          "பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவை மதுரை நகரில் குறிப்பிட்ட இடங்களில் உடனுக்குடன் வழங்கப்பட உள்ளது. அதன்படி, அழகர்கோவில் ரோடு, ஆத்திகுளம், புதூர் லூர்துநகர், சிட்கோ, கோமதிபுரம் 1, 5 வது தெருக்கள், மானகிரி, மாட்டுத்தாவணி, கூடல்புதூர், ஜெயராஜ் நகர், சாந்திநகர், ரயிலார் நகர், மகாத்மாகாந்தி நகர், கிருஷ்ணாபுரம் காலனி, திருப்பாலை, உச்சப்பரம்பு ரோடு, இ.பி.காலனி, பொறியாளர் நகர், எம்.எம்.எஸ்.காலனி, எழில்நகர், கண்ணனேந்தல் ஆகிய இடங்களில் பிராட்பேண்ட் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94861 02368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
          மதுரையில் உள்ள 4 மாசி வீதிகள்(கீழ, மேல, தெற்கு, வடக்கு), ஆவணி மூல வீதிகள், மாரட்டு வீதிகள், வெளி வீதிகள், அழகப்பன் நகர், பழங்காநத்தம், தெப்பக்குளம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ஆகிய இடங்களில் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94431 00461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
          மதுரை புது ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம், ஏ.ஏ.ரோடு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், கரிமேடு, அழகரடி, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, லட்சுமி சுந்தரம் என்களேவ், ராஜ் கிருஷ்ணா பிளாசா, ஜெய்நகர் அருகில், திருநகர் 1 & 8 வது பஸ் நிறுத்தம் வரை, ரெயில்வே காலனி, குவாலிட்டி கேர் மருத்துவமனை, எல்லஸ் நகர் ஹவுசிங்போர்டு, எஸ்.எஸ்.காலனி ஆகிய இடங்களில் இணைப்பு தேவைப்படுபவர்கள் 94861 02387 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்."
          இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.​பி.எஸ்.என்.எல்லின் இந்த அறிவிப்பு அப்பகுதி பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
             <நன்றி: இந்நேரம் டாட் காம்> 

என்ன கொடுமையடா சாமியோவ்...

          வங்கிக் கணக்கில் போடப்படும் சிலிண்டர் மீதான மானியத்திற்கும் வரி கட்ட வேண்டியது இருக்குமாம். நிபுணர்கள் கூறுவதைப் படிக்க... 

12/12/13 நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் BSNLEU தலைவர்கள்


தில்லியை திணறடித்த தொழிலாளர் பேரணியில் ஒரு பகுதி.


 
                                  சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்திய தொழிற் சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி நடத்திய பிரம்மாண்டமான பேரணியால் தில்லி சிவந்தது. நாடு முழுதும் இருந்து தொழிலாளர்கள் டிசம்பர் 8 இலிருந்தே தில்லியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.தில்லி, நாடாளுமன்ற வீதியினருகே அமைந்துள்ள ஜந்தர் மந்தரில் 9ஆம் தேதியிலிருந்தே பல்வேறு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா போராட்டங்கள் நடைபெறத் துவங்கிவிட்டன. வங்கி ஊழியர் சங்கங்கள், கிராமிய வங்கி ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். கூடுதலாக புதுச்சேரி, ஆங்கிலோ பிரெஞ்சு தொழிலாளர்களும் தங்கள் ஆலை நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டார்கள். நாடு முழுதும் பணியாற்றும் மின் துறை ஊழியர்களும் எரிசக்தி உரிமைமனித உரிமை என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்தினார்கள்.அதேபோன்று தலித்/பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளின்போது அவர்களுடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப துணைத் திட்டத்தின்கீழ் பட்ஜெட் செலவினங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இன்று (வியாழன்) அன்று நடைபெற்ற பேரணியில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ், யுடியுசி உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களின் ஊழியர்களும், அங்கன்வாடி ஊழியர்களும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கிஊழியர்களும் ஆண்களும் - பெண்களும் பல லட்சம் பேர் பங்கேற்றார்கள்.பேரணியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வட கிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் பார்க்கமுடிந்தது. குறிப்பாக பாதுகாப்புத் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, சுங்கத்துறை, உருக்குத் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே மற்றும் டெலிகாம் ஊழியர்கள் முழுமையாக இப்பேரணியில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. 
நன்றி :- தீக்கதிர் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...