Thursday, January 17, 2013

இன்று தோழர் ஜோதிபாசு நினைவு நாள்


அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தேசிய வாழ்வில் உயர்ந்து நின்ற மாமனிதர் தோழர் ஜோதிபாசு. இங்கிலாந்து சென்று உயர் கல்வி பெற்றவர் தோழர் ஜோதிபாசு. வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள் நலனுக்காகவே வாழ் நாள் முழுவதும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜோதிபாசு.அவர் இடது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் அடையாளமாகத் திகழ்ந்தார். சட்ட மன்ற, நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கேற்று மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதில் அனை வருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தேர்தலை மையமாக வைத்து அல்ல; அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே ஓர் அரசு, திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதில் ஜோதிபாசு உறுதியுடன் இருந் தார். ஒரு கட்சியின் தலைவராகவோ, ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ அல்லாமல் தொழிலாளர்களின் தோழனாகவே அவர் அறியப்பட்டார்.மேற்குவங்கத்தில் ஜோதிபாசு அமல்படுத்திய அரசி யல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் அனைத் துக்கும் அடிப்படை, அவரது மனிதாபிமானம், மக்கள் மீது அவர் கொண்டிருந்த அப்பழுக்கற்ற நேசம், நம் பிக்கை.அர்ப்பணிப்புமிக்க அவரது பாதையை போற்றிப் பாதுகாப்போம்!

Wednesday, January 16, 2013

தகவல்

தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 30-01-2013 அன்று நடைபெற உள்ளது .
வருகின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் விசயமாக  UNITED FORUM  கூடடம் வரும் 31-01-2013 அன்று நடைபெற உள்ளது.   

Tuesday, January 15, 2013

ஊதிய குறைப்பு பிரச்சினை


          நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யூ, மற்றும் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, AGS அவர்கள் நமது BSNL  நிறுவன  இயக்குனர் (HR ) அவர்களை  14.01.2013 அன்று சந்தித்து கீழ் கண்ட விசயங்களை பேசியுள்ளனர் .

          1. உடனடியாக JTO LDCE தேர்வு நடத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும்கூட பிஎஸ்என்எல் நிறுவனம்  LDCE  தேர்வுக்கான  அட்டவணை அறிவிக்க காலதாமதம் செய்வதை நமது தலைவர்கள் சுட்டிக்காட்டினர். .

          2. 01.01.2007 பின் நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின்   ஊதிய குறைப்பு பிரச்சினை இல் JTOs மற்றும் JAOs  கேடரில்  செய்யப்பட்டுள்ளது போல் ADVANCE INCREMENTS வழங்கவேண்டும். 01.01.2007 நியமிக்கப்பட்ட NON-EXECUTIVES    ஊதிய குறைப்பு சிக்கலை அந்த அடிபடையில் உடனடியாக தீர்க்க இயக்குனர் (HR ) இடம்  வலியுறுத்தபட்டது .

          இயக்குனர் (HR )  இரு பிரச்சினைகளையும்  கனிவுடன் .பரிசிலனை செய்வதாக உறுதி  அளித்தார்.

          JTO LDCE தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது .தேர்வு 02-06-2013 அன்று நடைபெற் உள்ளது .

வங்கி கடன்

கனரா வங்கியுடன் நமது BSNL  நிறுவனம் கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்ததை புதுப்பித்துள்ளது .இதற்கான கால வரையறை 01-11-2012 முதல் 30-11-2013  வரை இருக்கும் .

Saturday, January 12, 2013

ஆபத்தான அறிகுறி

எங்கே போகிறது தமிழகம்

        

          முதலிடம் நோக்கி தமிழகம் முன்னேறி வரு வதாக ஆண்ட, ஆள்கிற ஆட்சியாளர்கள் அடிக் கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. எந்த விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறதோ என்னவோ ஒரு விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. குடிப்பழக்கம் எனும் விஷயத் தில் பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முன்னேறுவதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமி ழகம் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. நாள்தோறும் 50 கோடி ரூபாய் அளவு க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை யாகிறதாம்.கடந்த 2011 - 12 மார்ச் மாதம் வரை 23 ஆயி ரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசுக்கு 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு மார்ச் நிதியாண்டின் முடிவில் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை இருக்குமென் றும் இதன்மூலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி வரு வாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புள்ளிவிபரம் குறித்து தமிழக அரசு பெருமிதப்பட்டுக் கொள்ளமுடியாது. மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் உயர்கிறது என்றால், கோடிக்கணக்கான குடும்பங்களில் வருமானம் சிதைகிறது. அந்த குடும்பங்கள் வீதிக்கு வருகிறது என்றே பொருள். உதாரணத் திற்கு மதுரை மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்களுக்கு 2000 குடும்ப தகராறு வழக்கு கள் வந்துள்ளன. இவற்றில் 75 சதவீதத் தகராறு காரணம் கணவர்களின் மதுப்பழக்கமாக இருந் துள்ளது.அண்மையில் நடந்த கொடூரமான பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட கயவர்கள் மதுபான மயக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்படுவோரும், மதுபோதையில் இருந்துள்ளது நிருபணமாகியுள்ளது. சமூக குற் றங்களுக்கு மதுப்பழக்கம் என்பது அடிப்படை யாக உள்ளது என்பது தெளிவு. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுக்கடைகள் இடமாற்றம் செய் யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல கல்வி நிலையங்கள் அருகிலுள்ள கடைகளும் அகற்றப்படவேண்டும்.அண்மைக்காலமாக பதின் பருவத்திலேயே மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருவ தாகவும், மது அருந்திவிட்டு பள்ளி வகுப்ப றைக்கு வரும் மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.விசேஷ நாட்களில் இவ்வளவு மது விற்றாக வேண்டும் என்று அரசே இலக்கு தீர்மானிப்பதும் அதற்கேற்ப மதுபானக்கடைகளை அலங்க ரிக்க உத்தரவிடுவதும் வெட்ககேடானதாகும்.இதற்கு மாறாக மதுப்பழக்கம் குடும்பம் மற்றும் சமூகத்தை சீரழித்துவிடும் என்ற விழிப்பு ணர்வு பிரச்சாரம் அதிகரிக்கப்பட வேண்டும். மதுப்பாட்டிலில் மட்டும் அந்த வாசகங்கள் இடம் பெற்றால் போதாது. தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதும் மறுபுறத்தில் மதுபான விற்பனை அதி கரித்துக் கொண்டே செல்வதும் நல்ல அறிகுறி அல்ல.
நன்றி :- தீக்கதிர் 

சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டு கிளை மாநாடு

          சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டுக் கிளை  மாநாடு 12-01-2013 அன்று சிவகாசி பழைய தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் சிவபெருமான் தோழர் அழகுராஜ் அவர்களின் கூட்டுத் தலைமையின் கீழ் நடைபெற்றது. தோழர் மணிவண்ணன் தேசியக்  கொடியை ஏற்ற தோழியர் மதினா அவர்கள் சங்கக் கொடியை ஏற்ற மாநாடு இனிதே தொடங்கியது .தோழர் ரசூல் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, தோழர்கள் G.ராஜு மற்றும் A.ஜெயபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினர்.  மாநாட்டை முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்து உரையாற்றினார். தோழர்கள் M.அய்யாசாமி, M .பெருமாள்சாமி, செல்வராஜ், முருகன் (CITU ), கோட்ட பொறியாளர் திரு. ராஜேந்திரன், துணை பொதுமேலாளர் திரு .சொக்கலிங்கம், தோழர் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர், தோழர்M.முத்துசாமி, தோழர் M.S.இளமாறன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழியர் மதினா அவர்களின் பணி ஒய்வுப் பாராட்டு விழாவும் இத்துடன் சேர்ந்து நடைபெற்றது. தொழிற்சங்க இயக்கத்தில் தோழியரின் பங்கை அனைவரும் பாராட்டினர். SDOP கிளையில் தோழர் அழகுராஜ், தோழர் G.ராஜு, தோழர் இன்பராஜ் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். OCB  கிளையில் தோழர் சிவபெருமான், தோழர் ஜெயபாண்டியன், தோழர் கணேசன் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து பெருந்திரளாக ஊழியர்கள் கலந்துகொண்டனர் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...