Wednesday, December 12, 2012

17-12-2012 மற்றும் 18-12-2012 ஆகிய 2 தினங்கள் தர்ணா

          கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெறவுள்ளது. விருதுநகர் தவிர்த்த அணைத்து ஊர் தோழர்களும் 17-12-2012 அன்றும் விருதுநகர் தோழர்கள் 18-12-2012 அன்றும் கலந்துகொண்டு தர்ணாவை வெற்றியடையச் செய்ய வேண்டும்.


          The ongoing agitation on ITS repatriation issue is to be intensified. In addition to the ITS repatriation issue, the following issues connected with the viability of BSNL and MTNL are also to be included in the charter of demands.


                  a) Repayment of BWA spectrum fee.

             b) Adequate compensation for BSNL’s rural land line operations.

             c) Immediate releasing of fund from USO fund.

             d) Exempting BSNL and MTNL from payment of fee for the 2G spectrum they are holding beyond 4.4 MHz.

             e) Procurement of equipments and materials.

             f) Exempting BSNL and MTNL from spectrum refarming.

             g) Exempting BSNL and MTNL from payment for Spectrum Liberalisation.

             h) Payment of pension by the government in respect of MTNL employees.

             i) Immediate issuing of Presidential Directive for 78.2% IDA fixation to BSNL employees.

சுட்டியால் தட்டியோர்க்கு நன்றி

ஒரு மாதத்தில் நம் வலைப்பூவைச் சுட்டியால் தட்டியவர்கள் எண்ணிக்கை 980


JAO தேர்விற்கான CPWD Manual பற்றாக்குறை தொடர்பாக...

          JAO தேர்விற்கு CPWD Manual பற்றாக்குறை காரணமாக அதன் Xerox copy அல்லது CPWD இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Print copy ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் உத்தரவு வெளியிட வேண்டும் என்ற மாநிலச் சங்கத்தின் கோரிக்கையினை CGM ஏற்றுக்கொண்டுள்ளார்.

Tuesday, December 11, 2012

Red Salute to Comrade K.G.Bose - தோழர் K.G.போஸ் அவர்களுக்குச் செவ்வணக்கம்

          11th December 2012 is the 38th death anniversary of Com. K.G.Bose, the revolutionary leader of the P&T employees’ movement, who died at a comparatively young age of 54. He passed away in a London Hospital on 12th December 1974, while he was being treated for cancer.
                 
          தபால் தந்தி ஊழியர் இயக்கத்தின் புரட்சிகரமான தலைவர் தோழர் K.G.போஸ் அவர்களின் 38 ஆவது நினைவு நாள் - 2012 டிசம்பர் 11. ஒப்புநோக்குகையில் தனது இளம்வயதில், 54 வயதில், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தேபோது, லண்டன் மருத்துவமனையில் 1974 டிசம்பர் 12ல் அவர் மறைந்தார்.

புரட்சிகரத் தலைவருக்கு நம் புரட்சிகரச் செவ்வணக்கம்.

Monday, December 10, 2012

TTA நியமனம் - பணியிடங்களுக்கான கலந்தாய்வு

            இன்று நடை பெற்ற TTA கலந்தாய்வுக் கூட்டத்தில் :

         சிவகாசி க்ரூப்ஸ் பகுதிக்கு தோழர் கணேஷ் போஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் NWO பகுதிக்கு தோழர் .ராஜகுரு, அருப்புகோட்டை CDOT பகுதிக்கு தோழியர் கனிமொழி, சிவகாசி CSC பகுதிக்கு தோழர் அஷ்ரப் அலி, விருதுநகர் carrier பகுதிக்கு தோழர் .பாண்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

            விருப்ப மாற்றலாக தோழர் ஜேசுராஜா அவர்கள் அருப்புகோட்டை இல் இருந்து விருதுநகர் transmission பகுதிக்கும், தோழர் ரெங்கராஜ் விருதுநகர் transmission பகுதியில் இருந்து சாத்தூர் க்ரூப்ஸ் பகுதிக்கும், தோழர் .கோபிநாத் சிவகாசி இல் இருந்து விருதுநகர் Outdoor பகுதிக்கும் மாற்றல் செய்யப்பட்டுள்ளனர். ராம்குமார் சிவகாசி csc இல் இருந்து சிவகாசி இன்டோர் பகுதிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளர்.

            JCM இல் எடுக்கப்பட்ட சிவகாசி க்ரூப்ஸ் மற்றும் சாத்தூர் க்ரூப்ஸ் பகுதிக்கு TTA நியமனம் செய்யப்பட்டது நமது சங்க வெற்றி ஆகும் .

தலித் மக்களுக்கு ஆதரவாக...

          தர்மபுரி மாவட்டத்தில் தாக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக தமிழக BSNL ஊழியர்கள்

Sunday, December 9, 2012

வால்மார்ட்டின் வலை

          இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.

          இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

          வால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
(நன்றி :- தினமலர்

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...