Tuesday, November 27, 2012

மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு கூட்டம் 04-12-2012 அன்று விருதுநகர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

ஆய்படு பொருள் :
1.LCM/ Work committee items
2.Circle Executive report
3.Any other items with permission of chair.

போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஆலோசனைக் கூட்டம்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சங்க தலைவர்கள் Joint Forum சார்பாக 24.11.2012 அன்று டாக்டர் Kruparani Killi, கம்யூனிகேஷன்ஸ் இணை அமைச்சர் அவர்களை சந்தித்து BSNL க்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளை உடனடியாக திரும்ப அனுப்பக் கோரினர். அதற்கான குறிப்பை அவரிடம் அளித்தனர். ITS அதிகாரிகள் விசயமாக போராட்டத்தை தீவிரபடுத்த Joint Forum முடிவு செய்துள்ளது. இது விசயமாக ஆலோசனை செய்வதற்கு 04-12-2012 அன்று Joint Forum கூடவுள்ளது.

Wednesday, November 21, 2012

பாரளுமன்றம் நோக்கிப் பேரணி

          ITS அதிகாரிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கோரிக்கையை வலியுறுத்தி 2012 நவம்பர் 22 ஆம் நாள் பாராளுமன்றம் நோக்கி பெருந்திரள் பேரணி செல்வது என்ற முடிவை  Joint Forum of BSNL and MTNL unions and associations எடுத்து செயல்படுத்த உள்ளது. இந்தப் பேரணி நடக்கும் நவம்பர் 22 நாள் தேசிய அளவில் பிற தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என மாநில, மாவட்ட, கிளைச் சங்கங்களுக்கு BSNLEU அறைகூவல் விடுத்துள்ளது.

JTO கேடருக்கான போட்டித் தேர்வு

நமது சங்கத்தின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக JTO கேடருக்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. 31.3.2012 வரை உள்ள காலியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 2000 முதல் 2012 வரையிலான காலியிடங்களுக்கு ஒரே தேர்வான நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டிற்கான தகுதி அவ்வருடத்தின் ஜூலை முதல் தேதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். <அனுமதிக் கடித நகல்>

போன் மெக்கானிக் போட்டித் தேர்வு

நமது சங்கத்தின் சீரிய தொடர்ந்த முயற்சியின் காரணமாக 31.3.2012 வரையிலான போன் மெக்கானிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கான அனுமதி கிடைத்துள்ளது. <அனுமதிக் கடித நகல்>

மாநில செயற்குழு

நமது மாநில செயற்குழு 29-11-2012 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் பேசவேண்டிய விஷயங்கள் ஏதும் இருந்தால் தோழர்கள் கிளைச் செயலர்கள் மூலமாக, மாவட்டச் செயலரிடம் தகவல் கொடுக்கவும்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி... 2

          துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் 20-11-2012 அன்று  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதேஷ் குமார் குப்தா மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை  தோழர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 06-12-2012 தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த BSNL CMD மற்றும் டைரக்டர் (HR)  ஆகியோருக்கு  ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். நவம்பர் 20 அன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர் .P.அபிமன்யு, தோழர் V.A.N.நம்பூதிரி, தோழர் R.L..மூட்கில், தோழர் அனிமேஷ் மிஸ்ரா, தோழர் சுப்புராமன், TEPU, தோழர் சுரேஷ்குமார், BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 06-12-2012 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் துணை முதன்மை தொழிலாளர் ஆணையர்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...