ITS அதிகாரிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கோரிக்கையை வலியுறுத்தி 2012 நவம்பர் 22 ஆம் நாள் பாராளுமன்றம் நோக்கி பெருந்திரள் பேரணி செல்வது என்ற முடிவை Joint Forum of BSNL and MTNL
unions and associations எடுத்து செயல்படுத்த உள்ளது. இந்தப் பேரணி நடக்கும் நவம்பர் 22 நாள் தேசிய அளவில் பிற தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என மாநில, மாவட்ட, கிளைச் சங்கங்களுக்கு BSNLEU அறைகூவல் விடுத்துள்ளது.
Wednesday, November 21, 2012
JTO கேடருக்கான போட்டித் தேர்வு
நமது சங்கத்தின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக JTO கேடருக்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. 31.3.2012 வரை உள்ள காலியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 2000 முதல் 2012 வரையிலான காலியிடங்களுக்கு ஒரே தேர்வான நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டிற்கான தகுதி அவ்வருடத்தின் ஜூலை முதல் தேதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். <அனுமதிக் கடித நகல்>
போன் மெக்கானிக் போட்டித் தேர்வு
நமது சங்கத்தின் சீரிய தொடர்ந்த முயற்சியின் காரணமாக 31.3.2012 வரையிலான போன் மெக்கானிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கான அனுமதி கிடைத்துள்ளது. <அனுமதிக் கடித நகல்>
மாநில செயற்குழு
நமது மாநில செயற்குழு 29-11-2012 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் பேசவேண்டிய விஷயங்கள் ஏதும் இருந்தால் தோழர்கள் கிளைச் செயலர்கள் மூலமாக, மாவட்டச் செயலரிடம் தகவல் கொடுக்கவும்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி... 2
துணை
முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் 20-11-2012 அன்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் அதேஷ் குமார் குப்தா மேல் இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்பதை தோழர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 06-12-2012
தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த BSNL CMD மற்றும் டைரக்டர் (HR)
ஆகியோருக்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். நவம்பர் 20 அன்றைய கூட்டத்தில் BSNLEU
சார்பாக தோழர் .P.அபிமன்யு, தோழர் V.A.N.நம்பூதிரி, தோழர் R.L..மூட்கில், தோழர் அனிமேஷ்
மிஸ்ரா, தோழர் சுப்புராமன், TEPU, தோழர் சுரேஷ்குமார், BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த
கூட்டத்தை 06-12-2012 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் துணை முதன்மை தொழிலாளர்
ஆணையர்.
Tuesday, November 20, 2012
அனாமலி
1-1-2000 இல் CDA Pay scale இல் இருந்து IDA Pay Scaleக்கு மாறும் போது ஏற்பட்ட அனாமலி விசயமாக BSNL நிர்வாகம் எல்லா மாநிலங்களில் இருந்தும் தகவல்களைக் கேட்டுள்ளது. கடித நகல் <click here>
புதிய அங்கீகார விதிகளுக்கான கூட்டம்
புதிய அங்கீகார விதிகளை விவாதிப்பதற்கு 19-11-2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகம் ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது. அதனை விவாதிப்பதற்குத் தேவையான கால அவகாசம் பல மாதங்கள் ஆகும். ஆதலால் BSNL ஊழியர் சங்கம் 6 ஆவது சரிபார்பு தேர்தலை பழைய விதிகளின்படி நடத்தவேண்டும் என வலியுறத்தியுள்ளது. ஏனெனில் 13-02-2013 தேதி வரை BSNLEU சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளது. புதிய விதிகளை உருவாக்க அதிக காலம் ஆகும் போது 13-02-2013 தேதிக்கு பிறகு எந்த சங்கத்திற்கும் அங்கீகாரம் இல்லா சூழ்நிலை உருவாகும். இதைத்தான் நிர்வாகம் விரும்புகிறது. நிர்வாகத்தின் இந்தப் போக்கை நம் சங்கம் அனுமதிக்காது. இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக அனைத்திந்திய செயலர் தோழர் P.அபிமன்யு, அனைத்திந்திய தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...