Thursday, May 31, 2018

துணை டவர் நிறுவனம் - வழக்கு


            துணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து சங்கங்களும் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்த துணை டவர் நிறுவன உருவாக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பாக AUAB கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இறுதியாக 08.05.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டு, டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. சில காரணங்களுக்காக அதிகாரிகள் சங்கங்களின் பெயரில் வழக்கு தொடர்வது என்றும், அதற்கான நிதி உதவியினை AUABயின் அனைத்து உறுப்பு சங்கங்களும் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 25.05.2018 அன்று அது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அனுமதித்த நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில்தான் துணை டவர் நிறுவனத்தின் செயலாக்கம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் 25.09.2018 அன்று விசாரணைக்கு வரும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...