விருதுநகர் மாவட்ட தொலைத் தொடர்பு அலுவலக கிளைச்சங்கம் சார்பாக தோழர் M.பெருமாள்சாமி, CTS அவர்களுக்கு 28-06-2013 அன்று மாவட்டச்சங்க அலுவலகத்தில் பணி ஒய்வு பாராட்டு விழா - கிளைத்தலைவர் தோழர் A.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. தோழர் M.S.இளமாறன், கிளைச்செயலர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தோழர் M.பெருமாள்சாமி அவர்களின் சங்கப் பணிகளையும், ஊழியர்களின்பால் அவரிடம் இருந்த உதவி செய்யும் குணநலன்களையும், விருதுநகர் மாவட்டத்தில் K.G.போஸ் அணியை வளர்ப்பதில் தோழர் M.அய்யாசாமி, தோழர் K.சின்னமுனியாண்டி, தோழர் V.K.பரமசிவம், தோழர் T.ராதாகிருஷ்ணன், தோழர் நாகராஜன், தோழர் முருகேசன் அவர்களுடன் இணைந்து தோழர் M.பெருமாள்சாமி ஆற்றிய பணிகளை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
தோழரை வாழ்த்தி மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன், மூத்த கணக்கு அதிகாரி திரு. T.ராதாகிருஷ்ணன், தோழர் K.R.கிருஷ்ணகுமார், மாவட்ட உதவி செயலர். தோழர் M.முத்துசாமி, ஓய்வூதியர் சங்க தலைவர் S.முருகேசன், மாவட்ட பொருளர் தோழர் S.வெங்கடப்பன், SDOP கிளைச் செயலர் தோழர் C.சந்திரசேகரன், தோழியர் G.தனலெட்சுமி ஆகியோர் பேசினர். தோழர் G.சந்திரசேகரன் அவர்கள் தோழர் பெருமாள்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர் V.சுப்பிரமணியம் அவர்கள் சந்தன மாலை போட்டு கௌரவித்தார். மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் நினைவுப் பரிசை வழங்கினார். தோழர் T.சித்ரவேல் அவர்கள் நன்றியுரை கூறினார்.

No comments:
Post a Comment