அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு 28-06-2013 வெள்ளிக் கிழமை மாலை கூடியது. பொதுக்குழுவிற்கு கிளைத்தலைவர் தோழர் U.B.உதயகுமார் தலைமையேற்றார். தோழர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார். தோழர் ஜெயக்குமார் பொதுக்குழுவைத் தொடங்கி வைத்து , இன்றைய அஜென்டாவை விளக்கிப் பேசினார்.
இம்மாதம் ஓய்வுபெறும் நமது கிளைத் தோழர்கள் மங்கையன் மற்றும் குமராண்டி இருவரையும் வாழ்த்தியும், ஒப்பந்த ஊழியர்களின் அருப்புக்கோட்டை கிளைச் செயலராக பொறுப்பேற்ற தோழர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்ற தோழர் முனியசாமி இருவரையும் வாழ்த்தியும், அருப்புக்கோட்டை கிளை மாநாடு நடத்துவது தொடர்பாகவும் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சந்திரசேகரன், தோழர் சோலை, தோழர் சுப்புராம், தோழர் ஜெயகண்ணன், தோழர் அய்யனார் ஆகியோர் பேசினார்கள்.
இன்றைய சூழலில் நாம் அடைந்த வெற்றகளையும் அதன் பின் இருக்கும் ஒற்றுமை பற்றியும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் இப்படியான சூழலில் வேலைக்கலாச்சாரம் மேம்பட நமது மத்திய சங்க முயற்சிகள் நமது கடமை மற்றும் ஜூலை 16ல் நடக்கவிருக்கும் கருத்தரங்கம் பற்றியும் உத்தர்காண்ட் சேதம் மற்றும் அது தொடர்பான நமது நிலை பற்றியும் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் மதிகண்ணன் எடுத்துரைத்தார்.

ஓய்வு பெறும் தோழர்களுக்கு கிளைத் தலைவர் உதயகுமார் நினைவுப் பரிசை வழங்கினார். பாராட்டப்பெற்ற தோழர்கள் மங்கையன், குமராண்டி, செந்தில்குமார், முனியசாமி ஆயியோர் ஏற்புரை வழங்கினர். ஜூலை 13 (இரண்டாம் சனிக்கிழமை) மாலை 3 மணி தொடங்கி கிளை மாநாடு நடத்துவதென்றும், மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரனுடன் கலந்து பேசி மாநிலச் சங்க நிர்வாகிகளில் ஒருவரை கிளை மாநாட்டிற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கிளையின் பொருளாளர் தோழர் சோலை அவர்களின் நன்றியுடன் பொதுக்குழு நிறைவுற்றது.
No comments:
Post a Comment