Tuesday, June 18, 2013

ஒப்பந்தத் தொழிலாளர்கள் கிளை மாநாடு

          தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் அருப்புக்கோட்டை கிளைமாநாடு 2013 ஜூன் 19, ஞாயிறு அன்று நடைபெற்றது. அருப்புக்கோட்டை கிளையின் 30 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள்வரை கலந்து கொண்டனர்.

          மாநாட்டிற்கு கிளையின் தலைவர் தோழர் ராமராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் வேல்ச்சாமி அவர்கள் தொடக்க உரையாற்றி மாநாட்டை முறையாகத் தொடக்கி வைத்தார். கிளையின் துணைச் செயலர் தோழர் முனியசாமி அவர்கள் கிளை மாநாட்டிற்கான செயல்பாட்டறிக்கையை முன்வைத்தார். அறிக்கை மீதான விவாதத்தின் 8 தோழர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அறிக்கை விவாதத்தின் அடிப்படையிலான திருத்தங்களுடன் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து கிளையின் பொருளாளர் தோழர் செந்தில்குமார் அவர்கள் வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்க, வரவு செலவு கணக்கும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

          மாநாட்டையும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிர்வாகிகளையும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் தோழர் ராஜ், அருப்புக்கோட்டை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் உதயகுமார், அமைப்புச் செயலர் தோழர் அஸ்ரஃப் தீன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் மதிகண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் முத்துச்சாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் தோழர் ஜெயக்குமார் நிறைவுரையாற்றினார்.

          தொடர்ந்து நடைபெற்ற அமைப்பு நிலை விவாதத்தில் பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டனர். அமைப்பு நிலை விவாதத்தைத் தொடர்ந்து புதிய தலைவர், செயலர், பொருளாளராக தோழர் உமையன் பாக்கியராஜ், செந்தில்குமார் மற்றும் ராஜிவ்நகர் ராமச்சந்திரன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய செயலர் தோழர் செந்தில்குமாரின் நன்றியுரையுடன் கிளைமாநாடு நிறைவுற்றது.
       
“பூனை கருப்பா வெள்ளையா என்பதல்ல அது எலி பிடிக்கிறதா? என்பதே முக்கியம்” - தோழர் மாவோ

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...