Wednesday, December 28, 2016

ரோடு ஷோ

நமது BSNLEU சங்கம் இந்த மாதம் மூன்றாம் முறையாக ரோடு ஷோவை மாவட்டம் முழுவதும் நடத்தி உள்ளது .ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன .திருச்சுழியில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் ,சேல்ஸ் நாயகன் தோழர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 154 சிம்கள் விற்கப்பட்டன .ராஜபாளையத்தில் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முருகன், ராதாகிருஷ்ணன் ,அனவ்ரதம் ,கிளை செயலர் தோழர் பொன்ராஜ் மற்றும் வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் அதிக பட்சமாக 320 சிமகள் +1 MNP பெறப்பட்டு உள்ளது .சிவகாசியில் 105 , திருத்தங்கலில் 145, ஸ்ரீவில்லிபுத்தூரில் 40, கூமாபட்டியில் 35,காரியாபட்டியில் 107, விருதுநகரில் 30 விற்பனை செய்யப்பட்டு உள்ளன .வீரசோழனில் 1 லேண்ட் லைன் இணைப்பு பெறப்பட்டு உள்ளது .சிவகாசி கிளை செயலர்கள் முத்துசாமி ,கருப்பசாமி ,ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுத்திரம் ,வெங்கடசாமி ,சுந்தரமஹாலிங்கம் ,கணேசமூர்த்தி ,சுப்பையா ,தோழியர்கள் பாண்டிசெல்வி ,பாண்டியம்மாள் ,தோழர் கோவிந்தராஜ் மற்றும்  பலர் பங்கேற்று உள்ளனர் .மீண்டும் மீண்டும் சாதனை படைக்கிறது  நமது சங்கம் மார்க்கெட்டிங் பணிகளில் .
Image may contain: one or more people, people sitting and outdoor

Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor


விரிவடைந்த மாவட்ட செயற்குழு

24/12/2016 அன்று நமது விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் D.செல்வராஜ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா தோழர் சமுத்திரக்கனி,மாவட்ட தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மறைந்த கியூபாவின் சோஷலிச நாயகன் தோழர் பிடல் காஸ்ட்ரோ , கவிஞன் இன்குலாப் ,நமது மண்ணின் மைந்தன் தோழர் முத்துராமலிங்கம் அவர்களின்   மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தி மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவடைந்த செயற்குழுவை முறையாக தொடக்கி வைத்தார் .முன்னதாக தோழர் செல்வராஜ் அவர்களின் குடும்ப சிறுமி சிறுவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது .ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் தோழர் முத்துராஜ்  மற்றும் நமது தமிழ் மாநில சங்க உதவி மணிலா செயலர் தோழியர் .V.P.இந்திரா அவர்கள் சிறப்புரை.நிகழ்தினார்கள் .நடந்து முடிந்த டிசம்பர் 15 வேலை நிறுத்தம் ,மார்க்கெட்டிங் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன .தோழர் செல்வராஜ் அவர்களின் பணி நிறைவை பாராட்டி தோழர்கள் சமுத்திரக்கனி ,ரவீந்திரன் ,முத்துசாமி,கருப்பசாமி ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக தோழர் செல்வராஜ் அவர்களுக்கு ஒரு நினைவு பரிசை அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் இணைந்து வழங்கினர் .தோழர் செல்வராஜ் அவர்கள் தனது பணி நிறைவை ஒட்டி மணிலா சங்கத்திற்கு ரூபாய் 2000/-ஐ உடனடியாக மாநில சங்க உதவி செயலர் தோழியர் இந்திராவிடம் ரூபாய் .அத்துடன் மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 1500 ம் ,சிவகாசி இரு கிளைகளுக்கு தலா ரூபாய் 500 /ம், ஒப்பந்த ஊழியர் மாவட்ட சங்கம் மற்றும் கிளை சங்கத்திற்கு தலா  ரூபாய் 250/- ம் வழங்க உள்ளார் .மேலும் விரிவடைந்த மாவட்ட செயற்குழு நடத்த மண்டப செலவு ,உணவு செலவு அனைத்தையும் தோழர் செல்வராஜ் அவர்களே ஏற்று கொண்டது சிறப்பு மிக்க நிகழ்வு .அந்த தோழருக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்து கொள்கிறது .அன்று   நடைபெற்ற சேவை கருத்தரங்கத்தில் நமது BSNL நிறுவனத்தின் புதிய பிளான்களை பொது மக்களிடம் கொண்டு செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது .நமது மாவட்ட துணை பொது மேலாளர் திரு .S.ராதாகிருஷ்ணன் அவர்கள் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி நவில செயற்குழு இனிதே நிறைவுற்றது .
Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person
Image may contain: 2 people, people standing and people sitting

Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 2 people, people standing
Image may contain: 4 people
Image may contain: 3 people, people standing
Image may contain: 3 people, people standing
Image may contain: 2 people, people standing and indoor
Image may contain: one or more people, people standing, people on stage and indoor

Thursday, December 22, 2016

பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் மகத்தான மார்க்கெட்டிங் பணிகள்

Image may contain: one or more people and outdoor
Image may contain: 1 person, sitting
விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்   தொடர்ந்து மகத்தான மார்க்கெட்டிங்  பணிகளை செய்து வருகிறது . கடந்த 3 ஆம் தேதி முதல் கட்ட ரோடு ஷோ வை நடத்தியது .அதில் நமது ராஜபாளையம் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,I.முருகன் ,அனவ்ரதம் ,பொன்னுசாமி ,வெள்ளைப்பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் கலந்து கொண்டு  ஒரே நாளில் 330 சிம்களை விற்று சாதனை படைத்தனர் .அன்று விருதுநகரில் பெண் தோழியர்கள் பாண்டிச்செல்வி ,பாண்டியம்மாள் மற்றும் .பரமேஸ்வரன் ,வெங்கடப்பன் கலந்து  கொண்ட நிகழ்வில் 32 சிம்களும் மல்லாங்கிணற்றில் 11 ம் ,கல்குறிச்சியில் 13 ம்,ஆமத்தூரில் தோழர் ராஜேந்திரன் மற்றும் மோகன் பங்கேற்ற நிகழ்வில் 132 ம்,சாத்தூரில் 12 ம்,சிவகாசியில் 95 ம் என மொத்தம் 435 சிம்கள் விற்கப்பட்டன .இன்று 22/12/2016 மாவட்டம் முழுவதும் மீண்டும் இரண்டாம் கட்டமாக ரோடு ஷோ வை நமது சங்கம் நடத்தியது .இதில் மாவட்ட செயலர் ரவீந்திரன் கலந்து கொண்ட சாத்தூரில் 128 சிம்களும் ,நமது SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து மற்றும் தோழர் கோவிந்தராஜ் கலந்து கொண்ட ஏழாயிரம்பண்ணையில் 28 ம், தோழர் ராஜேந்திரன் பங்கேற்ற அப்பையநாயக்கன் பட்டியில் 56 ம் , விருதுநகரில் இரண்டு இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் 60 சிம்களும் விற்கப்பட்டன .இந்த இரண்டு நிகழ்வில் தோழியர்கள் மங்கையற்கரசி ,தனலட்சுமி ,பாண்டியம்மாள் ,பாண்டிச்செல்வி ,வசந்தா ,சந்திரசேகரன் மற்றும் வெங்கடப்பன் பங்கேற்றனர்.காரியப்பட்டியில் தோழர் கணேசமூர்த்தி பங்கேற்ற நிகழ்வில் 32 சிம்களும் விற்கப்பட்டு உள்ளன .சிவகாசி மற்றும் திருத்தங்களில்  தோழர்கள் சமுத்திரக்கனி ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,இன்பராஜ்,கருப்பசாமி ,செல்லம் ,இருளப்பன் ,முத்துசாமி, குருசாமி,நாகேந்திரன் ,ராஜு கலந்து கொண்ட நிகழ்வில் 342 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .ராஜபாளையம் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,I.முருகன் ,அனவ்ரதம் ,பொன்னுசாமி ,வெள்ளைப்பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் மற்றும் கிளை செயலர் தோழர் பொன்ராஜ் கலந்து கொண்ட நிகழ்வில் 263 சிம்களும் 1 mnp யும் பெறப்பட்டு உள்ளன .
                        சபாஷ் தோழர்களே 

Wednesday, December 21, 2016

ஆர்ப்பாட்டம்

DEMONETISATIONஆல் ஏற்பட்டுள்ள பணப்பட்டுவாடா பற்றாக்குறையை சரி செய்யக் கோரி அனைத்து சங்கங்களின் ஆர்ப்பாட்டம்.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

விரிவடைந்த மாவட்ட செயற்குழு ,கருத்தரங்கம் மற்றும் தோழர் D.செல்வராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

விரிவடைந்த மாவட்ட செயற்குழு ,கருத்தரங்கம் மற்றும் தோழர் D.செல்வராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 

விரிவடைந்த செயற்குழு


Monday, December 19, 2016

அவசரமாகச் சென்றதேன்

 

என் கண்களுக்குள்ளே
உமது சிரித்த முகம்...
என் செவிகளுக்குள்ளே
உமது குரல்...

காண துடிக்கிறது  நெஞ்சம்..
காணவில்லையே...  மாயமென்ன?
காற்றோடு கலந்தீரோ?...
உற்ற காலமிதுவோ?

ஆருயிர்  நண்பரே...
அன்பை விதைத்து
அவசரமாய் சென்றதேன்?

விடையறியா மீளா துயருடன்...
பிரிவால் வாடும் நண்பர்களுள் ஒருவன்

-          செ. வெங்கடேஷ்

Sunday, December 18, 2016

விடை கொடுத்தோம் அன்பு தோழனுக்கு


சென்னையில் சாலை விபத்தில் காலமான நமது அன்பு தோழர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தோம் நேற்று காலையில் .மாவட்ட செயலருடன் ,கிளை செயலர்கள் முத்துசாமி ,மதி கண்ணன் ,மாரிமுத்து ,சமுத்திரம் அவர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகள்  சந்திரசேகரன் ,ராஜு ,அனவ்ரதம் ,அஷ்ரப்தீன் ,I .முருகன் ,தியாகராஜன் ,காதர் ,வெங்கடசாமி அவர்களும் , இராஜை கிளையின் ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களும், SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார், மாநில  சங்க நிர்வாகி கோவிந்தராஜ், மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ் உட்பட பெரும் எண்ணிக்கையில் மறைந்த தோழருக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செய்தனர் .மாவட்ட சங்கம் ஒரு நல்ல தொழிற்சங்கவாதியை இழந்தது மட்டும் அல்ல ஒரு திறமை மிக்க தொழில் நுட்ப ஊழியரை மாவட்ட நிர்வாகமும் இழந்து  விட்டது .சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நமது தோழருக்கு நமது தமிழ் மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் SNEA மாநில  செயலர் ராஜசேகர்  அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர் .

Friday, December 16, 2016

அஞ்சலி

அஞ்சலி
Image may contain: 2 people
ராஜபாளையம் கிளை செயலராகவும் ,லோக்கல்  கவுனசில் உறுப்பினராகவும் குறுகிய காலத்தில் நமது BSNLEU சங்க வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக இருந்த தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் JTO பயிற்சிக்கு சென்னையில் இருந்தபோது சாலை விபத்தில் காலமானார் .அவர் தம் மறைவால் துயர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நமது சங்க கொடியை இறக்கி அஞ்சலி செலுத்த அனைத்து கிளை செயலர்களையும் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது 


Thursday, December 15, 2016

போராளிகளுக்கு நன்றி

புதிய டவர் நிறுவனம் அமைப்பது BSNL நிறுவனத்தை மறைமுகமாக தனியார்மயத்தில் இட்டு செல்லும் மற்றும் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்ந்து டிசம்பர் 15 போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளுக்கு நெஞ்சார்ந்த  நன்றி .விருதுநகர் மாவட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை பின்வருமாறு .
மொத்த அதிகாரிகள் எண்ணிக்கை               = 107
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்       =53
வழக்கம் போல் விடுமுறை எடுத்தவர்கள்  =46
நமது நிறுவனம் அழிந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றவர்கள்                                    = 8

மொத்த ஊழியர்கள்  எண்ணிக்கை                  =369
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்         =258
வழக்கம் போல் விடுமுறை எடுத்தவர்கள்     =75
நமது நிறுவனம் அழிந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றவர்கள்                                    = 35

           Total Officers and Officials                                    = 476
                                              Strike                                    =311
                                              Leave                                    =121
                                              Duty                                      = 43
Strike %    Non Executives                                             = 69.91%
                         Executives                                              =49.53%
Leave %   Non   Executives                                           =20.32%
                           Executives                                            =42.99% 
Duty%       Non Executives                                             =9.49%
                          Executives                                                               =7.47%

    

Sunday, December 11, 2016

மகாகவி பாரதியார் பிறந்த தினம்


தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன் மகாகவி பாரதி பிறந்தநாள் -
மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்..!
சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!
எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!.மேலும் படிக்க :-Click Here
                          
நன்றி :- ஆனந்த விகடன் 


வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்


Friday, December 9, 2016

டிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள்

டிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் நேற்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் SNEA தலைவர்கள் தோழர் தங்கவேல் மற்றும் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .இக் கூட்டங்களில் தோழர்கள் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி  அவரகள் பங்கேற்றனர் .
இன்று சிவகாசியில் SNEA கிளை செயலர் தோழர் M சுப்ரமணியன் தலைமையில் மிக சிறப்பாக போராட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது .
 இன்று நடைபெற்ற K .G.போஸ் நினைவு தினம் மற்றும் அனைத்திந்திய மாநாட்டு தின கொடியேற்ற நிகழ்வுகள் .
ராஜபாளையம் 
இன்று ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் தியாகராஜன் தலைமை வகிக்க மூத்த தோழர் ராஜேந்திரன் சங்க  கொடியை ஏற்றினார் 
ஸ்ரீவில்லிபுத்தூர் 
இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் வெங்கடசாமி தலைமை வகிக்க தோழர் பொன்னுச்சாமி கொடி ஏற்றினார் 



                                        சிவகாசி 
இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் அழகுராஜ்  தலைமை வகிக்து  கொடி ஏற்றினார்



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...