விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து மகத்தான மார்க்கெட்டிங் பணிகளை செய்து வருகிறது . கடந்த 3 ஆம் தேதி முதல் கட்ட ரோடு ஷோ வை நடத்தியது .அதில் நமது ராஜபாளையம் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,I.முருகன் ,அனவ்ரதம் ,பொன்னுசாமி ,வெள்ளைப்பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் கலந்து கொண்டு ஒரே நாளில் 330 சிம்களை விற்று சாதனை படைத்தனர் .அன்று விருதுநகரில் பெண் தோழியர்கள் பாண்டிச்செல்வி ,பாண்டியம்மாள் மற்றும் .பரமேஸ்வரன் ,வெங்கடப்பன் கலந்து கொண்ட நிகழ்வில் 32 சிம்களும் மல்லாங்கிணற்றில் 11 ம் ,கல்குறிச்சியில் 13 ம்,ஆமத்தூரில் தோழர் ராஜேந்திரன் மற்றும் மோகன் பங்கேற்ற நிகழ்வில் 132 ம்,சாத்தூரில் 12 ம்,சிவகாசியில் 95 ம் என மொத்தம் 435 சிம்கள் விற்கப்பட்டன .இன்று 22/12/2016 மாவட்டம் முழுவதும் மீண்டும் இரண்டாம் கட்டமாக ரோடு ஷோ வை நமது சங்கம் நடத்தியது .இதில் மாவட்ட செயலர் ரவீந்திரன் கலந்து கொண்ட சாத்தூரில் 128 சிம்களும் ,நமது SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து மற்றும் தோழர் கோவிந்தராஜ் கலந்து கொண்ட ஏழாயிரம்பண்ணையில் 28 ம், தோழர் ராஜேந்திரன் பங்கேற்ற அப்பையநாயக்கன் பட்டியில் 56 ம் , விருதுநகரில் இரண்டு இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் 60 சிம்களும் விற்கப்பட்டன .இந்த இரண்டு நிகழ்வில் தோழியர்கள் மங்கையற்கரசி ,தனலட்சுமி ,பாண்டியம்மாள் ,பாண்டிச்செல்வி ,வசந்தா ,சந்திரசேகரன் மற்றும் வெங்கடப்பன் பங்கேற்றனர்.காரியப்பட்டியில் தோழர் கணேசமூர்த்தி பங்கேற்ற நிகழ்வில் 32 சிம்களும் விற்கப்பட்டு உள்ளன .சிவகாசி மற்றும் திருத்தங்களில் தோழர்கள் சமுத்திரக்கனி ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,இன்பராஜ்,கருப்பசாமி ,செல்லம் ,இருளப்பன் ,முத்துசாமி, குருசாமி,நாகேந்திரன் ,ராஜு கலந்து கொண்ட நிகழ்வில் 342 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .ராஜபாளையம் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,I.முருகன் ,அனவ்ரதம் ,பொன்னுசாமி ,வெள்ளைப்பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் மற்றும் கிளை செயலர் தோழர் பொன்ராஜ் கலந்து கொண்ட நிகழ்வில் 263 சிம்களும் 1 mnp யும் பெறப்பட்டு உள்ளன .
சபாஷ் தோழர்களே
சபாஷ் தோழர்களே
No comments:
Post a Comment