Friday, March 27, 2015

Wednesday, March 25, 2015

இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்தை வெளியிட்டால் கைது செய்யும் சட்டத்தை ரத்து செய்தது இந்திய உச்ச நீதிமன்றம்

கோப்புப் படம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது.இச்சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது.
மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு பின்னணி:
கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதா என்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த மே 2013-ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்காக ஒருவரை கைது செய்யும்போது ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்தது.தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, இந்த வழக்கு நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், 'தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது.இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது' என வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.நீதிபதிகள் தரப்பில்,சட்டப்பிரிவு 66-ஏவில் சில பொதுப்படையான சட்ட வார்த்தைகள் அடங்கியுள்ளன. அவ்வாறான வார்த்தைகள் அச்சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்த வழிவகை செய்யும் என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்/
                          நன்றி : தி ஹிந்து 

Monday, March 23, 2015

கொடியேற்றம்

பி எஸ் என் எல் ஊழியர் சங்க அமைப்பு தினத்தை ஒட்டி இன்று விருதுநகர் மாவட்டத்தில் அணித்து கிளைகளிலும் நமது சங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது .விருதுநகரில் GM அலுவலக கிளையின் துணை தலைவர் தோழர் ராஜசேகரன் கொடியேற்றினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நமது சங்கம் நடந்து வந்த போராட்ட பாதையால் தான் நமது நிறுவனமும் ஊழியர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அதன் வெளிப்பாடு தான் தொடந்து 6 சரிபார்ப்பு தேர்தலில் 5 தேர்தலில் மகத்தான நமது வெற்றி என்பதை அவர் சுட்டி காட்டினார் .இன்று மாவீரன் பகத் சிங்கின் நினைவு நாளை ஒட்டி தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈத்த அவரின்  தியாகம் நினைவு கூறப்பட்டது .தோழர் இளமாறன் எழுச்சி கோஷங்கள் எழுப்பிட  தோழர் சிங்காரவேலு நன்றி கூறினார் .

 

Chennai: BSNL clarifies on ad for 'recruitment' for nearly 6000 posts


State-owned BSNL on Saturday clarified that it does not have any link withadvertisements published in a section of the media under the name 'Bharat Sanchar Services' offering nearly 6,000 jobs in the state.In a statement, it noted that a company under this name and using the BSNL logo, had put out advertisements for filling up 5,842 vacancies.BSNL Tirunelveli received enquiries on the 'recruitment' for the posts, it said, adding that they do not have any connection with that firm and were not liable for the actions taken by them.

இன்று பகத் சிங் நினைவு நாள்


பகத் சிங்கின் கடைசி விருப்பம்
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு.பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது.பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.இன்று அது உண்மையாகி விட்டது .
                  பகத் சிங் நாமம் வாழ்க !
                  நன்றி :- தி ஹிந்து