7.10.2019 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNLEU, SENA, AIBSNLEA, AIGETOA, FNTO, BSNL MS, AIBSNL OA, BSNL ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கு பெற்றனர். அந்தக் கூட்டத்திற்கு SNEA சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமை தாங்கினார். நிரந்தர ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் வழங்காதது, மின் கட்டணம் கட்டாதது, மேலும் BSNLன் புத்தாக்கம் ஆகிய பிரச்சனைகளை அந்தக் கூட்டம் பரிசீலித்தது. மேலும் கால தாமதப்படுத்தாமல் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசிய தேவை உள்ளதென இந்தக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. போராட்டம் மற்றும் பிரச்சாரங்களின் பல்வேறு வடிவங்களும் இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, இதர சங்கங்களுடன் கலந்தாலோசித்து விட்டு அடுத்த கட்ட இயக்கங்களை 11.10.2019 அன்று அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment