Sunday, September 30, 2018

ரோடு ஷோ

விருதுநகர் மாவட்ட BSNLEU  சங்கம் தொடர்ச்சியாக ரோடு ஷோகளை  மாவட்டம் முழுவதும்  நடத்தி வருகிறது .நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் ,நமது உறுப்பினர்கள் அதில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர் . 
Image may contain: 5 people, including Ravi Indran, people sitting
Image may contain: 3 people, people sitting
Image may contain: 4 people, people smiling, people sitting, people standing and outdoor
Image may contain: one or more people, people sitting, child and outdoor
Image may contain: 1 person, sitting and child
Image may contain: one or more people, people standing and outdoor


15 வது சிவகாசி கிளை மாநாடு

இன்று (0/09/2018) 15 வது சிவகாசி கிளை மாநாடு அதன் தலைவர் தோழர் ராஜய்யா தலைமையில் மிக சிறப்பாக மற்றும் எழுச்சியுடன் நடைபெற்றது .மாநாட்டின் முதல் நிகழ்வாக தேசிய கொடியை தோழர் பொன்னுசாமி ஏற்றி வைக்க ,சங்க கொடியை தோழர் சுப்ரமணியன் ஏற்றி வைத்தார் .தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .கிளை செயலர் தோழர் கருப்பசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி ஆய் படு பொருளை சமர்ப்பித்து அதை கிளை மாநாடு ஏற்று கொண்டது .அதன் பின் மாவட்ட செயலர் முறையாக கிளை மாநாட்டை தொடக்கி வைத்தார் .அதன் பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை கிளை செயலர் மற்றும் கிளை பொருளாரரால் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்று கொள்ளப்பட்டது .மாநாட்டை வாழ்த்தி மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,ஒப்பந்த ஊழியர் சங்க பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் வேலுச்சாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் CITU நகர செயலர் தோழர் லாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .அதன் பின் சிறப்புரையாக தோழர் பழனிக்குமார் ,மாநில அமைப்பு செயலர் ஒரு அற்புத உரை  நிகழ்த்தினார் .முதலாளித்துவம் தன்னுடைய நலன்களை பாதுகாக்கின்ற அரசியல் வாதிகளை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதை கைவிட்டு தானே ஆட்சியில் அமர்வதிற்கான நிகழ்வுகளை நோக்கி நாடு செல்வதையும் ,நமது நிறுவனத்தை பாதுகாப்பதற்கு நமது சங்கம் நடத்திய போராட்டங்கள் ,ஒன்றுபட்ட போராட்டத்தால் துணை டவர் நிறுவனம் கைவிடப்படுவது ,ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தையின் சாரம்சங்கள்  ,வரக்கூடிய பொது வேலை நிறுத்தம் ஆகியவற்றை பற்றி ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார் .அவரது உரை யை கேட்ட  அனைவரும் மிகவும் பாராட்டினர் .அதன் பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கிளை தலைவர் செயலர் மற்றும் பொருளாளராக தோழர்கள் ராஜய்யா ,கருப்பசாமி ,இன்பராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் . 
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 9 people, crowd and outdoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and crowd
Image may contain: one or more people, people sitting, crowd and outdoor
Image may contain: Srinivasan JJ, standing
Image may contain: one or more people, people sitting and outdoor
Image may contain: one or more people

Image may contain: one or more people and crowd


Wednesday, September 26, 2018

அருப்புக்கோட்டை கிளை பொதுக்குழு

          அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு செப்டம்பர் 25ஆம் நாள் மாலை அருப்புக்கோட்டை தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர் உதயகுமார் தலைமை வகித்தார். கிளைச்செயலர் தோழர் சோலை ஆய்படுபொருளை விளக்கி உரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் மூன்றாவது ஊதியக் குழுவின் நிலை மற்றும் வரவிருக்கும் போராட்ட களங்களை விளக்கி உரையாற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் நடந்து முடிந்த டெல்லி பேரணி அனுபவங்கள், வரவிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் மாநில மாநாடு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

             அருப்புக்கோட்டை கிளைகளின் கிளை மாநாடுகள் அக்டோபர் 10ஆம் தேதி மாலை நடத்தப்படும் என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.












Tuesday, September 25, 2018

ரோடு ஷோ

24/09/2019 அன்று சத்திரரெட்டியாபட்டி  கிராமத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில்  தோழர்கள் தங்கராஜ், பால்ராஜ் ,சிங்காரவேலு , AGM(sales) அவர்களுடன் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்களும் பங்கேற்றார் .இங்கு 59 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன . இங்கு விற்பனைக்கு கிராமம் முழுவதும் முன்கூட்டியே  தகவல் சொல்லி மக்களை திரட்ட பேருதவி செய்தது மட்டும் இன்றி விருந்தோம்பல் செய்த  தோழியர்  பாண்டியம்மாள் , AO (cash ) section  அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி .
Image may contain: 2 people, people sitting and outdoor
Image may contain: Chandrasekar Selvi, standing, child and outdoor
Image may contain: one or more people

ரோடு ஷோ

 2 வது மாவட்ட செயற்குழுவின் முடிவின்படி மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ரோடு ஷோகளில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் 22/09/2018 அன்று திருவண்ணாமலையில் மாவட்ட செயலர் பங்கேற்றார் .தோழர்கள் பால்ராஜ் ,சுப்பையா , தோழியர் முத்துலட்சுமி ,தோழர் கோவிந்தராஜ்  ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 78 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .அதே போல் சிவகாசியில் மாநில அமைப்பு செயலர்  தோழர் சமுத்திரக்கனி ,கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,மாவட்ட சங்க நிர்வாகி முனியாண்டி ,தோழர் முருகன் ,தோழியர் பாண்டிச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 37 சிம்களும் 2 mnp யம் பெறப்பட்டன.
Image may contain: 3 people, people sitting
Image may contain: 5 people, including Ravi Indran, people sitting

Monday, September 24, 2018

அருப்புக்கோட்டை கிளை - பொதுக்குழு

25-09-2018, செவ்வாய் மாலை 5 மணிக்கு அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு கிளைத்தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் நடைபெற உள்ளது.

ஆய்படு பொருள் : 
1. டெல்லி பேரணி அனுபவங்கள்
2. மூன்றாவது ஊதியக் குழு
3. கிளை மாநாடு 
4. இன்ன பிற - தலைவர் அனுமதியுடன்

சிறப்புரை
தோழர் இரவீந்திரன், மாவட்டச் செயலர்
தோழர் ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்
தோழர சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்

Wednesday, September 19, 2018

2 வது மாவட்ட செயற்குழு

உற்சாகத்தோடு நடைபெற்ற 2 வது  மாவட்ட செயற்குழு மற்றும் செப்டம்பர் 1968 போராட்டத்தை நினைவுகூர்தல்  கூட்டம் 
இன்று (19/09/2018) விருதுநகர் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயலர் முன்மொழிய அனைவரும் தியாகிகளுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் முன்மொழியப்பட்ட  ஆய்படு பொருளை மாவட்ட செயற்குழு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டது . அதன் பின் தலைவர் தனது தலைமையுரையில் டெல்லி பேரணியில் பெருமளவில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட தோழர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார் .மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினார் .தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் 68 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை ,அதில் பங்கேற்ற ஊழியர்களின் தியாகத்தை கண்ணெதிரே பார்ப்பது போல் ஒரு அற்புத உரை நிகழ்த்தினார் .அதே போல் ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையின் அம்சங்களையும் விரிவாக எடுத்துரைத்தார் .ஆய் படு பொருள் மீது மாவட்ட செயலர் ஒரு விரிவான குறிப்பை கூற ,கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் விவாதத்தில் பங்கேற்றனர் . மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் .ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழுவும் இன்று இணைத்தே நடைபெற்றது . மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .
1. TNTCWU மாநில மாநாட்டிற்கு நமது மாவட்ட சங்க பங்கேற்பாக ரூபாய் 5000/- நமது தமிழ் மாநில  சங்கத்திடம் கொடுக்கப்பட்டது .
2. TNTCWU  மாநில மாநாட்டிற்கு நமது மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய்  3000/- விருதுநகர் மாவட்ட TNTCWU சங்கத்திற்கு வழங்கப்பட்டது .
3.டெல்லி பேரணிக்கு அனைவரையும் ஒருங்கிணைத்து அற்புத பணியாற்றிய தோழர்கள் ஜெயக்குமார் ,மாரியப்பா ,சந்திரசேகரன் ஆகியோரை மாவட்ட செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்து   கொண்டது .
4.அனைத்திந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக தோழர்கள் S ரவீந்திரன் ,மற்றும் R ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டனர் . தோழர் A .குருசாமி பார்வையாளராக கலந்து கொள்வார் . 
5 மாநாட்டு பொது அரங்கில் பங்கேற்க அனைவரையும் திரட்டுவது . அதில் பங்கேற்கும் தோழர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் ரூபாய் 1000/கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது .
6.அனைத்து கிளை மாநாடுகளையும் வரும் அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .
7.ஊழியர்களுக்கு விடுப்பு கொடுப்பதில் ஒரு கடுமையான நிலை கையாளப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் ஒரு சரியான புரிதலை உண்டாக்க கடைசி கட்ட முயற்சியை மாவட்ட தலைவரும் ,மாநில அமைப்பு செயலரும் செய்வார்கள் .     
8. மாவட்டம் முழுமையும் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ரோடு ஷோ வில் பங்கேற்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது .
9.தேவைப்படும் இடங்களில் விருப்பம் இருப்பவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை  மாவட்ட முதன்மை பொது மேலாளர் மற்றும்துணை பொதுமேலாளர் ஒப்பு கொண்ட பிறகு திடீரென அதை அமல்படுத்த முடியாது என்று சொல்வதின்  மர்மத்தை உடைக்கவேண்டிய அவசியத்தை வர இருக்கும் லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைப்போம் .
குறிப்பாக AO (சேல்ஸ்) பகுதியில் சிம் எடுக்க ,பைல் எடுக்க ஊழியரே இல்லை .விருப்பம் கொடுத்த ஊழியருக்கு கூட உத்தரவு போட நிர்வாகத்திற்கு மனம் இல்லை என்பதை நாம் ஏற்கமுடியாது .அதே போல் கல்குறிச்சி தொலை பேசி நிலையத்திற்கு விருப்பம் இருந்தும்  கடந்த 10 மாதங்களாக நியமனம் செய்யாமல் இருப்பது நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை காட்டுகிறது .
10. டெல்லி பேரணியில் ஏற்பட்ட செலவினங்களில் மீதமான தொகையை மாவட்ட சங்கத்தின் வளர்ச்சிக்கு கொடுத்த அத்துணை இதயங்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி.
11.வரும் அக்டோபர் 9 ஆம் தேதி லோக்கல் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது .
12. இளம் தோழர்களுக்கான பயிலரங்கத்தை விருதுநகர் அல்லது சிவகாசியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .ஒட்டு மொத்த மாவட்ட செயற்குழுவே வரவேற்பு குழுவாக செயல்படும் .
                               வாழ்த்துக்களுடன் 
                  மாவட்ட சங்கம் 
Image may contain: 2 people, people sitting and table
Image may contain: 2 people, including Babu Radhakrishnan Radhakrishnan, people sitting and outdoor
Image may contain: 4 people, including Palanikumar Kalimuthu and Babu Radhakrishnan Radhakrishnan, people sitting and outdoor
Image may contain: 2 people, including Ravi Indran, people sitting and outdoor
Image may contain: 7 people, including Palanisamy Palanisamy and மதி கண்ணன், people sitting and outdoor
Image may contain: 3 people, people sitting
Image may contain: 6 people, including Palanikumar Kalimuthu, people sitting
Image may contain: one or more people, people sitting, crowd, table and outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting, table and outdoor
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 5 people, outdoor
Image may contain: 5 people, people sitting, table and outdoor
Image may contain: 4 people, including மதி கண்ணன், people sitting
Image may contain: 5 people, people standing
Image may contain: 5 people

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...