Friday, August 30, 2013

IDA எதிர்பார்ப்பு

           1.10.2013 முதல் IDA அதிகரிப்பு 6.1% இல் இருந்து 7.1 % ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி படிக்க :-CLICK HERE

11 வது மாவட்ட செயற்குழு

          11 வது மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் K.புளுகாண்டி அவர்களின் பனி ஓய்வு பாராட்டு விழா 30-08-2013 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக சிறப்பாய்  மாவட்ட தலைவர் தோழர் Aசமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. லோக்கல் கவுன்சில், மற்றும் வொர்க் கமிட்டி பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.  கீழ்கண்ட முடிவுகள் எடுக்க பட்டுள்ளன.
 1. அடுத்த மாவட்ட மகாநாட்டை  அருப்புக் கோட்டையில் நடத்துவது .
 2. அடுத்த மாவட்ட செயற்குழு கூட்டம் டிசம்பர்  மாதத்தில் சிவகாசியில் நடத்துவது .
3. ஜாதிய மோதல்களை தூண்டும் போக்கை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் 13-09-2013 அன்று மாபெரும் உண்ணாவிரதப்  போராட்டத்தை மாவட்ட சங்கம் சார்பாக நடத்துவது .
 4. தோழர்கள் Mபெருமாள்சாமி, Kபுளுகாண்டி மற்றும் த.முத்துராமலிங்கம் அவர்கள் மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பதிலாக தோழர் C  சந்திரசேகரன், மாவட்ட உதவி செயலராகவும், தோழியர் P.பகவதி அவர்கள் மாவட்ட துணை தலைவராகவும், தோழர் அனவரதம் அவர்கள் மாவட்ட அமைப்பு செயலராகவும் செயற்குழுவின் ஒப்புதலோடு நியமிக்கபட்டுள்ளனர்.

Wednesday, August 28, 2013

BSNL Launches Pan India ‘Women Empowerment’ Scheme

          Bharat Sanchar Nigam Ltd (BSNL) one of India’s leading telecommunications service providers, in a unique step of women empowerment, launched the product sale through Women Retailers, Direct Selling Agents and Women Rural Distributors.According to Mr. R.K.Upadhyay, Chairman and Managing Director, BSNL ” under the new scheme, we will appoint Women Direct Selling Agents, Women Rural Distributor or Women Retailers.This unique scheme covers remote, urban and rural segment of the society on Pan India basis where small entrepreneur or unemployed women can become a part of the distribution channel for BSNL products and services which will help them increase their income and financial wellness.”“Besides empowering women through additional income stream, this scheme will also improve the reach of BSNL products, which will now be available at the door steps of subscribers” he added.BSNL believes economic empowerment of women is a great building block in social development.

27.09.2013 வேலைநிறுத்தம்

          26.08.2013 அன்று நடைபெற்ற BSNLEU, மத்திய செயலக கூட்டம் ஊழியர்களின்   நீண்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகள் தீர்வதற்கு ஒரு நாள் வேலை நிறுத்தம் 27.09.2013 அன்று நடைபெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் அறிவிப்பு  விரைவில் நிர்வாகத்திற்கு வழங்கப்படும். அனைத்து மாநில  மற்றும் மாவட்ட செயலாளர்கள் வேலைநிறுத்தம் வெற்றி பெற தீவிர அணிதிரட்டல் செய்ய வேண்டும் என மத்திய சங்கம்  அறைகூவல் விடுத்துள்ளது . 

ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் (06-09-2013 )

06-09-2013 அன்று ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 

பெரும்பாலான மாநிலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியம் கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி வழங்கப்படுவது இல்லை மேலும் அவர்களது ஊதியங்கள்,பணியாளர் வருங்கால வைப்பு நிதி & ஈஎஸ்ஐ பங்களிப்புகளின் ஒரு கணிசமான பகுதி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள்  மூலம் சூறையாடப்படுகின்றன. . தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி & ஈஎஸ்ஐ சலுகைகள் கோரி, போராட்டத்தில் செல்லும் போது, அவர்கள் இரக்கமற்று வேலை நீக்கம் செய்யபடுவது பல மாநிலங்களில் நடக்கிறது. கார்ப்பரேட் அலுவலகத்தின் கவனத்திற்கு இதை கொண்டு சென்ற BSNLEU எடுத்த அனைத்து முயற்சிகளும், செவிடன் காதில் ஊதிய சங்காய் உள்ளதால் , 26.08.2013 அன்று நடைபெற்ற BSNLEU, மத்திய செயலக கூட்டம் பல்வேறு மாநிலங்களில் வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் எடுக்க கோரி, 06.09.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது , BSNLEU மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் குறைந்தபட்ச ஊதிய மீது கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவுகளை செயல்படுத்த வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் எடுக்க   சக்தி மிகுந்த ஆர்ப்பாட்டம் 06-09-2013 அன்று  நடத்த வேண்டும்.

Monday, August 26, 2013

கிளை மாநாடுகள்

விருதுநகர் SDOP கிளை மற்றும் ராஜபாளையம் கிளை மாநாடுகள்  முறையே 04-09-2013 (புதன்கிழமை ) மற்றும் 15-09-2013( ஞாயிற்று கிழமை ) தேதிகளில் நடைபெற உள்ளது .விருதுநகர் மாநாட்டில் தோழர் சி .பழனிசாமி ,மாநில உதவி செயலர் சிறப்புரை ஆற்ற உள்ளார் ராஜபாளையம் மாநாட்டில் தோழர் M .முருகையா சிறப்புரை ஆற்ற உள்ளார் .

Sunday, August 25, 2013

சரித்திர சாதனை!

செய்தி படிக்க :-CLICK HERE

TTA RESULT

TTA (OUTSIDER )  தேர்வு முடிவு செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது .செய்தி பார்க்க :-CLICK HERE

BRPSE recommends Rs 4,100 cr package to revive ITI

The Board for Reconstruction of Public Sector Enterprises (BRPSE) has recommended a revival package of over Rs 4,100 crore to nurse the ailing state-owned ITI back to health.செய்தி படிக்க :-CLICK HERE

Friday, August 23, 2013

கார்ட்டூன்

அதிகாரிகள் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

          அதிகாரிகள் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான  விதிமுறைகளை BSNL நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
செய்தி படிக்க : CLICK HERE

மூன்றாம் நாள் தர்ணா

           விருதுநகர் மாவட்டத்தில் இன்று  23-08-2013 மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் முன்பாக BSNLEU மாவட்ட துணை  தலைவர் R.ரசூல் தலைமை தாங்க மாவட்ட தலைவர் A.சமுத்திரகனி தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் A.கண்ணன் ஆகியோர் பேசினர். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் தோழர் M.அய்யாசாமி, M.பெருமாள்சாமி, U.B.உதயகுமார்  ஆகியோர் பேசினர். மூன்றாம்   நாள் தர்ணாவில் 60க்கும்  மேற்பட்டோர்   கலந்து கொண்டனர். மூன்றாம்   நாள் தர்ணா போராட்டத்தை மாவட்ட பொருளர் தோழர் S.வெங்கடப்பன் முடித்து வைத்தார்.

மூன்றாம்   நாள் தர்ணா புகை படங்கள்


















கார்ட்டூன்,





                                                                                                                நன்றி :-தினமணி 

Thursday, August 22, 2013

சம்பள நெருக்கடி அபாயம்

          SNEA தலைவர்கள் 20-08-2013 அன்று நமது CMD அவர்களை சந்தித்தபோது தற்போதுள்ள நிலையில் BSNL நிறுவனம் கடும் நெருக்கடியை நோக்கி செல்கிறது  என  எச்சரித்தது உள்ளார். குறித்த காலத்தில் சம்பளம் கொடுக்ககூட பணம் இல்லை என்றும்  பண வரவு முந்தைய மாதங்களைவிட  கடுமையாக கீழே வந்துவிட்டது என்றும்  நிறுவனத்தின் ஊழியர்களுக்கு  சம்பளம் கொடுக்க சந்தையில் இருந்து கடன் வாங்க வேண்டும் என்பது வெகு  தூரத்தில் இல்லை என்றும் அவர்  கூறியுள்ளார்.
          எதிர் காலத்தில் சம்பளம் குறித்த நேரத்தில் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்  என போராட வேண்டிய சூழல் உள்ளதை நாம் எதிர் நோக்க    உள்ளோம்.

இரண்டாம் நாள் தர்ணா

          விருதுநகர் மாவட்டத்தில் இன்று  22-08-2013 மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் முன்பாக BSNLEU மாவட்ட துணை  தலைவர் M.செல்வராஜூ அவர்கள் தலைமை தாங்க மாவட்ட உதவி  செயலர் M.முத்துசாமி  தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரை ஆற்றினார். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி CITU   செயலர் G.வேலுசாமி, ஓய்வூதியர் சங்க கிளை  செயலர் S.முருகேசன், அதிகாரிகள் சங்க மாநில பொறுப்பாளர் டி.தாகிருஷ்ணன் மாவட்ட உதவி செயலர் C.வெங்கடேஷ் , TTA, ராஜபாளையம், GM அலுவலக கிளை செயலர் M.S.இளமாறன், மாவட்ட உதவி தலைவர் சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன்  ஆகியோர் பேசினர். இரண்டாம்  நாள் தர்ணாவில் 50 க்கும்  மேற்பட்டோர்   கலந்து கொண்டனர். மாவட்ட உதவி செயலர் M.முத்துசாமி    நன்றி கூறி இரண்டாம்  நாள் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.


இரண்டாம்  நாள் தர்ணா புகை படங்கள்






Wednesday, August 21, 2013

சிந்திக்க


முதல் நாள் தர்ணா

         இந்தியா முழுவதும் BSNL ஊழியர் சங்கத்தின் தலைமையின் கீழ் தேங்கி கிடக்கும் 30 அம்ச ஊழியர் பிரச்னைகளுக்காக 3 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் 21-08-2013 முதல் 23-08-2013 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று  21-08-2013  மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம முன்பாக BSNLEU மாவட்ட தலைவர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமை தாங்க மாவட்ட செயலர் S.ரவீந்திரன் தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி JCTU நகர செயலர் தேனி வசந்தன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் M.அய்யாசாமி, அதிகாரிகள் சங்க மாநில பொறுப்பாளர் டி.ராதாகிருஷ்ணன் மாவட்ட உதவி செயலர் M.பெருமாள்சாமி, அருப்புகோட்டை கிளை செயலர் R.ஜெயக்குமார், மாவட்ட உதவி தலைவர் P.புளுகாண்டி ஆகியோர் பேசினர். முதல் நாள் தர்ணாவில் 48 பேர்  கலந்து கொண்டனர். மாவட்ட செயலர்  நன்றி கூறி முதல் நாள் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.

முதல் நாள் தர்ணா புகை படங்கள்










Tuesday, August 20, 2013

78.2 IDA

10-06-2013 முதல் 30-06-2013 வரையில் ஆன 78.2 IDA இணைப்புக்கான நிலுவை தொகை செப்டம்பர் மாதம் பட்டுவாடா ஆகும் .அதற்கான உத்தரவை HRMS இல் வெளியிட்டுள்ளனர் .

கார்ட்டூன்,

                                                                                                                           நன்றி :ஹிந்து 

அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது

அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர், அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு மேலும் கூறியதாவது: பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஊழியரின் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலையை, சம்பந்தப்பட்ட துறையின் தகுதிவாய்ந்த அதிகாரி ஆராய வேண்டும்.வேலை வழங்கவில்லை எனில், அந்த குடும்பத்தால் நெருக்கடியை சமாளிக்க முடியாது என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னால்தான், அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் அந்த வேலைக்கு நியமிக்கப்படுபவர், அதற்கான கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ராஜஸ்தான் மாநில உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எம்ஜிபி கிராம வங்கி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதுதான் நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்தனர்.இந்த வங்கியில் மூன்றாம் நிலை ஊழியராக பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் கடந்த 2006, ஏப்ரல் 19-ஆம் தேதி மரணமடைந்து விட்டார்.இதையடுத்து அவரது மகன் சக்ரவர்த்தி சிங், தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று, அந்த வங்கிக்கு 2006, மே மாதம் 12-ஆம் தேதி விண்ணப்பம் அனுப்பினார். அதை அந்த வங்கி நிராகரித்து விட்டது.இதையடுத்து, ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். சக்ரவர்த்தி சிங்குக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தது.கருணை அடிப்படையில் பணி வழங்க, உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் கூறிய காரணங்கள், சட்டத்தின் பார்வையில் வலுவூட்டுவதாக இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறி, அந்த தீர்ப்பை நிராகரித்தனர்.
                                                                     செய்தி :-தினமணி 

BSNL issues tender for setting up towers in naxal areas

செய்தி படிக்க :-CLICK HERE

பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

18-08-2013 அன்று ராஞ்சியில் நடைபெற்ற பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நமது பொது செயலர் அபிமன்யுவும் தோழர் நம்பூதிரி அவர்களும் கலந்து கொண்டனர்.அக் கூட்டத்தில் பொதுத்துறைக்கு எதிரான அரசின் கொளகைகளை பற்றியும் ,அடுத்த சம்பள மாற்றம் விசயமாகவும் ஒப்பந்தமுறையில் work force  என்ற அச்சுறுத்தல் பற்றியும் விரிவான முறையில் விவாதிக்கப்பட்டன .

விழாகால முன் பணம்

விழாகால முன் பணமாக ரூபாய் 5000/-ஐ ரூபாய் 15,000/- ஆக  உயர்த்த வலியுறுத்தி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது . 2005 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இத் தொகை தற்போதுள்ள விலைவாசிக்கு போதுமானது அல்ல என்பதை நமது மத்திய சங்கம் சுட்டி காட்டி கடிதம் எழுதியுள்ளதை படிக்க :-CLICK HERE

Friday, August 16, 2013

Indian telecom subscriber base crosses 90 crore-mark in May

செய்தி படிக்க :-CLICK HERE

செல்போன் அழைப்புக் கட்டணங்கள் 50% வரை உயருகிறது!

செல்போன் அழைப்பு கட்டணம் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் 50 சதவீதம் வரை உயரக் கூடும் என்று செல்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பார்தி ஏர்டெல், வோடாஃபோன், லூப் மொபைல் போன்ற சில நிறுவனங்களின் உரிமம் அடுத்த ஆண்டுடன் காலாவதி ஆகிறது. தற்போது அவை வைத்துள்ள ஸ்பெக்ட்ரம் அடுத்த ஆண்டுக்கு ஏலத்துக்கு வரும் நிலை உள்ளது. அப்போது, இதற்கான ஏலத்தின் அடிப்படை விலை, 2008ல் இருந்தது போல, 11 மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ட்ராய், அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து செல்போன் அழைப்பு கட்டணம் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் 50 சதவீத அளவுக்கு உயரக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு நிமிடத்துக்கு செல்போனில் பேச 90 காசு என்றிருந்தால், இனி ரூ.1.20 வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. செல்ஃபோன் கட்டணங்கள் நிமிடத்துக்கு 26 காசு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
                                                                       நன்றி :- one India 

Wednesday, August 14, 2013

பேச்சுவார்த்தை

          பேச்சுவார்த்தை அடிப்படையில் தேங்கி கிடக்கும் பிரச்சனைகளை தீர்க்க  வேண்டும் என  வலியுறுத்தி நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு மற்றும் தோழர் V.A.N.நம்பூதிரி ஆகிய இருவரும் CMD அவர்களை இன்று சந்தித்தார்கள். CMD அவர்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உறுதி அளித்துள்ளார் .

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்


          இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த உன்னத தியாகிகளை நினைவு கூர்ந்து, இந்திய நாட்டின் திருக்கோயில்களான பொதுத்துறை நிறுவனங்களை   காக்க  நடக்கும் போராட்டங்களிலும் பங்கேற்று,இந்திய திருநாட்டை  மேற்கத்திய நாடுகளின் அடிமையாய் ஆக்கும் அரசின் போக்கை எதிர்த்து தொழிலாளி மற்றும் விவசாயிகளுடன் இணைந்து ஒரு சமரசமற்ற போராட்ட களத்தை உருவாக்க  சபதமேற்போம்  இந்த   சுதந்திர திருநாளில்!

மாநில மற்றும் லோக்கல் கவுன்சில்

          மாநில மற்றும் லோக்கல் கவுன்சில் அமைப்பை உடனடியாக அமைக்குமாறு BSNL நிர்வாகம் உத்தரவு வெளியுட்டுள்ளது.
உத்தரவை படிக்க :-CLICK HERE

அவசரகால நிலை கறுப்பு தினங்களை நினைவூட்டும் BSNL உத்தரவு

          நமது நிறுவன எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் தர்ணா,வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை தடை செய்து BSNL நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டங்களை அதற்குரிய இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் நிர்வாகம் உத்தரவை இட்டுள்ளது .  தொழிற்சங்க உரிமையை பறிக்கும் நிர்வாகத்தின் இந்த செயல் அவசரகால நிலை கறுப்பு தினங்களை நினைவூட்டுகிறது. நமது எதிர்ப்பை CMD அவர்களிடம்  தெரிவித்து விட்டோம். CMD உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்கிறோம்.    

Tuesday, August 13, 2013

I-T refund, drop in costs may help BSNL cut losses

செய்தி படிக்க :-CLICK HERE

India to lease bandwidth from Bangladesh to reduce BSNL's dependence on Tata Communications

செய்தி படிக்க :-CLICK HERE

ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயற்குழு

            ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு 2013 ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திர தினத்தன்று விருதுநகரில் நமது மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தலைமை : தோழர் செல்வராஜ், மாவட்டத் தலைவர், TNTCWU
முன்னிலை : தோழர் சமுத்திரக் கனி, மாவட்டத் தலைவர், BSNLEU
தொடக்கஉரை : தோழர் ரவீந்திரன், மாவட்டச் செயலர், BSNLEU
ஒருங்கிணைப்பு :தோழர் முனியசாமி, மாவட்டச் செயலர், TNTCWU

ஆய்படு பொருள்:
          1. ஒப்பந்தத் தொழிலாளர்கள் விவரங்கள் சேகரித்தல்
          2. EPF, ESI ஒழுங்குபடுத்துதல் குறித்த விவரங்கள்
          3. மாநில மாநாடு நிதி மற்றும் சார்பாளர்கள் தேர்வு தொடர்பாக
          4. இன்ன பிற தலைவர் அனுமதியுடன்...

          நமது கிளைச் செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் தோழர்களின் செயற்குழு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தரும்படி மாவட்டச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

Monday, August 12, 2013

3 நாட்கள் தர்ணா போராட்டம்

கோரிக்கைகள் :
1.NEPP -ல் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;

2.நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
3.RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
கேடர்களின் பெயர் மாற்றம்;
4.1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
5.நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
6.பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
7.STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
8.TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
9.காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
10.வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
11.BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
12.1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
13.கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது;
14.ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;

15.MANAGEMENT  TRAINEE தேர்வில் பங்கு பெரும் வாய்பை ஊழியர்களுக்கு வழங்கிடு  
16.JTO ஆக OFFICIATE பண்ணும் TTA களை PERSONAL  UPGRADATION அடிப்படையில்  JTO ஆக  பதவி உயர்வு வழங்கிவிடு 
17. NEPP இல் SC /ST  ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்து .
18.SC /ST ஊழியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு 
19. DOP & T உத்தரவுகளின் படி SC /ST ஊழியர்களுக்கு  பதவி உயர்வுகளில் குறைந்த பட்ச மதிப்பெண்களை மேலும் தளர்த்து இது போன்ற 29 முக்கிய கோரிக்கைகளுக்காக 3 நாட்கள் தர்ணா போராட்டம்  ஆகஸ்ட்  21 முதல் 23 வரை  நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் தர்ணாவை வெற்றிகரமாக நடத்திட அனைத்து கிளை செயலர்களும்,மாவட்ட சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .
 ஆகஸ்ட்  21: தலைமை :-A .சமுத்திரகனி ,
தொடக்கி வைப்பவர் :- S .ரவீந்திரன் 
 ஆகஸ்ட்  22: தலைமை :- செல்வராஜூ  
தொடக்கி வைப்பவர் :- M .முத்துசாமி 
 ஆகஸ்ட்  23: தலைமை :-  R .ரசூல் 
தொடக்கி வைப்பவர் :- C .வெங்கடேஷ்  

BSNL, MTNL seek to exit 4G route

செய்தி படிக்க :-CLICK HERE

இரங்கல் செய்தி

           நம்முடன் பணியாற்றும் தோழர் சம்பத் JTO, IMPCS, அருப்புக்கோட்டை அவர்களின் தாயார் நேற்று (11.08.2013) சிவகாசி மீனம்பட்டியில் இயற்கை எய்தினார். அவரின் பிரிவால் வாடும் தோழரின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Friday, August 9, 2013

காலம் சொன்னவை - கவிதை

நன்றி : வண்ணக் கதிர்

வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1.14 கோடி அபராதம்

அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தை மீறல்:
வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1.14 கோடி அபராதம் 


          உலகம் முழுவதும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் பகாசுர நிறுவனம் வால்மார்ட். இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமது வழங்கி உள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்கு நியூயார்க் உள்பட 9 மாநிலங்களில் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மிக குறைவான சம்பளம் தான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மைக்கேல் டியூக் ஆண்டுக்கு ரூ.124 கோடி சம்பளம் பெறுகிறார். ஆனால் வால்மார்ட்டில் வேலைபார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளிக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 528 மட்டும் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படாமல், எந்த சலுகையும் அளிக்கப்படாமல் கசக்கி பிழியப்படுகிறார்கள். மேலும் இவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சரியான சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என்று புகார்கள் வந்தன.

          இதை தொடர்ந்து நியூயார்க், கேட்ஸ் மாநிலங்களில் உள்ள வால்மார்ட் நிறுவன தொழிலாளர்கள் தங்கி இருந்த இடங்களில் தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு வால்மார்ட் நிறுவனம்,மிக குறைவான சம்பளம் மற்றும் சுகாதார வசதியோ, பாதுகாப்பு வசதியோ செய்யாமல் சட்டத்தை மீறி செயல்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வால்மார்ட் நிறுவனத்துக்கு அமெரிக்க தொழிலாளர்துறை ரூ. ரூ.1.14 கோடி அபராதம் விதித்துள்ளது.

செய்தி : தீக்கதிர்

          இப்படி சொந்த நாட்டிலேயே ஏமாற்றுகிற கொள்ளைக்காரர்கள் வந்தால்தான் நமது நாட்டில் தொழிலாளர்களும் விவசாயிகளும் சுபிட்சமாக வாழ்வார்கள் என்று நமது நாட்டில் முதலாளித்துவக் கட்சிகளின் ஜனநாயக ஜாம்பவான்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்புமாநாடு

          மத்திய ஐ.மு.கூட்டணி-2 அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக் கைகளுக்குக்கூட செவி மடுக்க மறுப்பதைக் கண்டித்தும், அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்புமாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்தியத் தொழிற்சங்கங்களின் சார்பில் தேசிய சிறப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
          சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பிலும் மத்திய அரசு ஊழியர் களின் மகாசம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர்கள் அலுவலர்கள் கூட்ட மைப்பு, பாதுகாப்புத்துறை ஊழியர்கள், இன்சூரன்ஸ், வங்கி ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட அனைத்து சங்கங்களின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
          கடந்த பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற இருநாள் வேலை நிறுத்தத்தில் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளை மாநாட்டுப் பிரதிநிதிகள் முழக்கமிட்டு எதிரொலித்தார்கள். மத்திய அரசாங்கத்தின் சார்பில் மே 22 அன்று மத்தியத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ஒரு மாதம் கழித்து அரசுடன் கலந்தாலோசனை செய்து விட்டு சந்திப்பதாகக் கூறினார். ஆயினும் இதுவரையிலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.மாறாக, அது தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.
          அரசின் இந்த அலட்சியத்திற்கு எதிராக பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டனர். தனியாருக்கு ஆலையைத் தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிராக நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப்பின்னணியிலேயே தேசிய சிறப்பு மாநாடு நடைபெற்றது.
          சிறப்பு மாநாட்டினை சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன் உட்பட 11 மத்தியத் தொழிற்சங்கங்களின் மூத்த தலைவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார்கள். மாநாட்டின் வரைவுப் பிரகடனத்தை வெளியிட்டு தபன்சென் (சிஐடியு), குரு தாஸ் தாஸ் குப்தா (ஏஐ டியுசி), பிஎன் ராய் (பிஎம் எஸ்), கேகே நாயர் (ஐஎன் டியுசி), பேச்சிமுத்து (தொமுச) உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களிலிருந்தும் தலைவர்கள் உரையாற்றினர்.
          இதைத் தொடர்ந்து பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.தொழிலாளர் போராட் டத்தை நாடு தழுவிய அளவில் விரிவாக எடுத்துச் செல்வது என்றும், மாநிலத் தலைநகரங்களில் 2013 செப்டம்பர் 23 அன்று பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது என்றும், டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்டமான முறையில் பேரணி / ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்தது. தில்லியில் பேரணி நடைபெறும் நாளன்று நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் / பேரணிகள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திக்கு :-CLICK HERE

Thursday, August 8, 2013

ரமழான் வாழ்த்துக்கள்


செவ்வணக்கம்

          மத்திய பிரதேச மாநில BSNLEU சங்கத்தின் மாநில செயலர் தோழர் S.K.நாயக் இன்று அதிகாலை காலமானார். அன்னார்க்கு நமது மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

Tuesday, August 6, 2013

மாவட்ட பொது மேலாளருடன் நேர்காணல்

          06-08-2013 அன்று நமது மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளருடன் நேர்காணல் நடத்தியது.கீழ்கண்ட விஷயங்கள் விவாதிக்கபட்டன..

  1. தாலுகா தலைநகரான திருச்சுழியில் கடந்த 4 மாத  காலமாக ஒரு டெலிபோன் மெக்கானிக்கூட பணியில் இல்லாமல் சேவையை சீரழித்து வருவதை கடுமையாக சுட்டி காட்டி உள்ளோம் .
  2. கொள்கை  சம்பந்தமான விசயங்களை அங்கீகரிகப்பட்ட சங்கங்களுடன் மட்டுமே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
  3. லோக்கல் கவுன்சில் மற்றும் வொர்க் கமிட்டி கூட்டங்களை உடனடியாக கூட்ட வேண்டும் என   வலியுறுத்தி உள்ளோம்.
  4. உடனடியாக TTA காலியிடங்களை அறிவிக்க கூறியுள்ளோம்.
  5. NETWORK மற்றும் நரிக்குடி  wimax பகுதிகளில் TTA நியமனம் செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
  6. சிவகாசி பகுதியில் JTO பற்றாக்குறை உள்ளது என்பதை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.
          08-08-2013 அன்று விருப்ப ஓய்வில் செல்ல உள்ள மாவட்ட பொது மேலாளர் திரு B.V.பாலசுப்ரமணியா  அவர்களை நமது மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நமது மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நினைவு பரிசை வழங்கினார். இன்றைய நேர்காணலின்போது தோழர்கள் R .ஜெயக்குமார், ரசூல், த.முத்துராமலிங்கம், M.முத்துசாமி, M.S.இளமாறன், A.ஜெயபாண்டியன், G.ராஜு, C.சந்திரசேகரன், G.சுந்தரராஜன், M.பெருமாள்சாமி  ஆகியோர் உடன்   இருந்தனர்.





11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...