அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இணையதள உளவுத்திட்டத்துக்கு, உலகம் முழுவதும் 150 இடங்களில் 700 ரகசிய செர்வர்களை நிறுவியுள்ளது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதில் ஒன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த உளவுத்திட்டம் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் வாயிலாக தெரியவந்தது.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மூலம் நடத்தப்படும் எக்ஸ்கீஸ்கோர் என்ற திட்டத்துக்கு அளிக்கப்பட்ட உபகரணங்களில், உளவு கம்ப்யூட்டர் செர்வர்கள் எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன என்ற விபரங்கள் அடங்கிய வரைபடமும் அடங்கும்.மேலும் அந்த செர்வர்களில் ஒன்று டெல்லி அருகே நிறுவப்பட்டிருப்பது வரைபடத்தில் காணப்பட்டது.
நன்றி :- வெப்துனியா
மேலும் செய்தி படிக்க :-CLICK HERE
No comments:
Post a Comment