இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி முறையாக மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . மாவட்ட செயலர் சமர்பித்த ஆய்வறிக்கை மீது விரிவான விவாதம் நடைபெற்றது . பிரச்சனைகளை தொகுத்து மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் பேசினார் . விவாத குறிப்பின் மேல் நடைபெற்ற விவாததிற்கு மாவட்ட செயலர் பதிலளித்தார் . தொகுக்கப்பட்ட பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பித்து உரிய தேதியை கேட்டு முதன்மை பொதுமேலாளரை பேட்டி காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது .லோக்கல் கவுன்ஸில் உறுப்பினர்களாக தோழர்கள் ரவீந்திரன் , சமுத்திரகனி , ஜெயக்குமார் , கணேசமூர்த்தி , இளமாறன் , காதர்மொய்தீன் , தங்கதுரை மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் .ராஜபாளையம் தோழர் பிச்சை அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இன்றைய மாவட்ட செயற்குழுவில் நடைபெற்றது .தோழரின் சேவைகளை பாராட்டி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் கண்ணன் மற்றும் வெள்ளை பிள்ளையார் ,தோழர் பொன்ராஜ் மற்றும் முருகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவருக்கு பொன்னாடை போர்த்தி கவரவித்தார் .மாவட்ட சங்கம் சார்பாக ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment