உத்தர்காண்ட் நிவாரண நிதிக்காக டெல்லியில் குப்பை பொறுக்கும் தெருவோரக் குழந்தைகளின் குழு ஒன்று ரூபாய் 20,000 சேகரித்து பிரதம மந்திரியின் நிவாரண நிதியில் சேர்த்துள்ளார்கள். அவர்கள் நடத்தி வரும் ‘பாதே கதம்’ என்ற அமைப்பின் சார்பாக இதைச் செய்துள்ளார்கள்.
உத்தர்காண்ட் வெள்ளம் நிலச்சரிவில் சிக்கிய வீடற்ற குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த நன்கொடை அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment