Sunday, June 16, 2013

தகவலைத் திருடும் ஏகாதிபத்திய திருடர்கள்


          சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து தங்களது பயனாளர்களின் குறித்த விவரங்களை அமெரிக்கா கேட்டதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை பிரிசம் என்ற ரகசிய கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் உலக அளவில் இணையதளங்களைப் பயன்படுத்துபவர்களின் தனிமனித ரகசியங்களை கண்காணித்து வருவதாக சிஐஏ முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோவ்டன் என்பவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

          மேலும், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், யாகூ போன்ற பிரபல நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் கடந்த ஆண்டின் இரண்டாவது 6 மாத காலத்தில் மட்டும் அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகள் தனது 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பயனாளர்களின் தகவல்களை அளிக்குமாறு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தடவை கேட்டதாக சமூக வலைதளமான பேஸ்புக் தெரிவித்துள்ளது.

          மேலும், அரசுடனான உடன்பாட்டின் அடிப்படையில் இத்தகவல்களை தேசிய பாதுகாப்பு முகமைக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.இதேபோன்று, இந்த காலகட்டத்தில் அமெரிக்கா தங்களிடம் 32 ஆயிரம் பயனாளர்கள் குறித்த தகவல்களை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் தடவை கேட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களது உலக பயனாளர்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் சொற்பமானதே என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி :தீக்கதிர் 

3 comments:

  1. சிறப்பான கருத்தோவியம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரைக்கு நன்றி தோழர்

      Delete
  2. கருத்தோவியம் சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...